நடிகர் சூரி பற்றிய 10 உண்மைகள்..!

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி அதன் பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்து பிரபலமானவராக இன்று பார்க்கப்படுபவர் நடிகர் சூரி.

இவரது திறமை தான் முழுக்க முழுக்க இவரை மேலுக்கு கொண்டு வந்திருக்கிறது என நினைத்தால் அதற்காக அவர் எவ்வளவு கடினப்பட்டிருக்கிறார்.

எத்தனை இன்னல்களை தாண்டி இந்த சினிமா துறையில் ஜொலித்தார் என்று என்பது பற்றிய விவரங்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

நடிகர் சூரியின் பிறப்பு :

மதுரை ராஜாக்கூர் என்ற கிராமத்தில் திரு முத்துச்சாமி செங்கை அரிசி தம்பதிகளுக்கு பிறந்த ஆறு மகன்களில் ஒருவர் தான் நடிகர் சூரி.

இதையும் படியுங்கள்: முடியாத வயதிலும் இளம் நடிகையை அப்படி அடைந்த முக்கிய புள்ளி..! அட கொடுமைய..!

பரோட்டா என்றாலே பிடிக்காத இவருக்கு பரோட்டா சூரி என்று பெயர் வந்தது ஒரு விசித்திரமான உண்மை கதைதான்.

ஏழாம் வகுப்பு வரை படித்து முடித்த நடிகர் சூரி எட்டாம் வகுப்பிலே பாதிலேயே நிறுத்திவிட்டார். அதன் பின்னர் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு கிராமத்திலேயே கிடைத்த சிறு சிறு கூலி வேலைகளை செய்து வந்தார்.

மிகவும் காமெடியாக நகைச்சுவையாக பேசக்கூடிய அவரின் தந்தையின் மூலமாகத்தான் சூரிக்கு காமெடி வந்தது என சொல்லலாம்.

தந்தை தான் ரோல் மாடல்:

ஆனால் அவர் செய்யும் காமெடிகளில் நீ 10% கூட இல்லை என அவரின் ஊர் மக்கள் சூரியிடம் சொல்வார்களாம். எனவே தந்தை தான் தனக்கு ரோல் மாடல் என அவர் கூறியுள்ளார்.

அதே நேரத்தில் சூரியன் தந்தை குடிப்பழக்கத்தால் அடிமையானதால் அவரின் கொடுமையை வறுமையில் தள்ளாடியுள்ளது.

இந்த வறுமையை காரணமாக காட்டி நடிப்பதிலும் நடனம் ஆடுவதிலும் இயற்கையிலே இவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்தால் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு,

மதுரையிலிருந்து சென்னை கிளம்பி வந்தார். நடிகர் சூரி தனக்கு இருக்கும் திறமைக்கு சென்னைக்கு சென்றாலும் எப்படியாவது நடித்து பணத்தை சம்பாதித்து விடலாம் என்ற ஒரு மிதப்பில் ,

சினிமா துறையில் ஒரு சுலபமாக நினைத்த சூரிக்கு அவர் நினைத்ததை விட வாய்ப்புகள் எதுவுமே கிடைக்காமல் சென்னை முழுவதும் சுற்றித்திரிந்து உள்ளார்.

இதையும் படியுங்கள்: விலைமாது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தது யார்..? கேள்விக்கு ரசிகர்கள் கொடுத்த பதிலை பாருங்க..!

சென்னையில் பசி… பட்டினி:

குடும்பத்தில் இருந்த வறுமை காரணமாக சென்னைக்கு வந்ததால் சினிமாவில் நடித்த நிறைய சம்பாதித்து குடும்பத்தை மேலுக்கு கொண்டு வந்து விடலாம் என்ற நினைப்பில் சென்னையில் வந்தேன்.

ஆனால் இங்கு ஒரு சின்ன பட வாய்ப்பு கூட கிடைக்காமல் தங்கி இருந்த வீட்டுக்கு கூட வாடகை கட்ட முடியாமல் சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் கிடந்தேன்.

அந்த சமயத்தில் என்னுடைய அம்மா போன் செய்து சாப்பிட்டியாப்பா என்னை கேட்கும்போது பச்ச தண்ணி குடிச்சிட்டு படுத்துட்டு இருக்கேன் என சொன்னதும் என் அம்மா கதறி அழுது அங்கேயே வழங்கி விழுந்து விட்டேன் என பெட்டியில் கூறியுள்ளார்.

அதன் பின்னர் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு சென்னையில் கிடைத்த வேட்கள் வேலைகளை எல்லாம் செய்ய ஆரம்பித்தார் சூரி டிப்பர் லாரி ஒன்றில் வேலை செய்து வந்தார்.

அதோட ஷூட்டிங்கில் பெயிண்ட் அடிக்க பெயிண்ட் வாலியை தூக்கிக்கொண்டு உதவி செய்யும் வாலிபனாக தனது வாழ்க்கையை தொடங்கினார் .

திரைப்படத்துறையில் அறிமுகம்:

அதன் பிறகு மந்திரவாசல் என்ற நாடகத்தில் திருடனாக நடித்திருப்பார் நடிகர் சூரி . அதுதான் அவர் நடித்த தோன்றிய முதல் திரைப்படம்.

அதன் பிறகு தான் சுசீந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் பரோட்டா காமெடி மூலம் உலகம் முழுக்க ஃபேமஸ் ஆகி அன்றிலிருந்து பரோட்டா சூரி என அவரை எல்லோரும் அழைத்து வந்தார்கள்.

நடிகர் அஜித் உடன் நடித்த போது சூரியன் கலகலப்பான பேச்சு அஜித்திற்கு மிகவும் பிடித்துப் போக உங்களது குணம் எங்களுக்கு மிகவும் பிடித்து போனது. இப்படியே இருங்கள் அதை மாற்றிக் கொள்ளாதீர்கள் என அறிவுரை கூறினாராம்.

மகாலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட சூரியக்கு ஒரு ஒரு மகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கிறார்கள்

வளர்ந்த பிறகு தனது அம்மாவுக்கு பிடித்த விஷயங்களை பார்த்து பார்த்து செய்து வந்த சூரி சிறு வயதிலிருந்து பிளைட் பக்கமே ஏறாது அவரது அம்மாவை பிளைட்டில் கூட்டி சென்று அழகு பார்த்தார்.

அது மட்டுமில்லாமல் தான் வளர்ந்த பிறகு 5 சகோதரர்கள் என்றும் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வரும் சூரி சகோதரர்களின் பிள்ளைகளுக்காக கல்வி உதவிகளையும் செய்து வருகிறார்.

ரியல் ஹீரோவாக சூரி:

நடிப்பையும் தாண்டி நடிகர் சூரி அம்மன் சைவ உணவகம் என்ற ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.

இதில் மிக குறைந்த விலையில் மக்களுக்கு உணவளித்து அவர்களின் பசியை போக்கி வருகிறார்.

இதையும் படியுங்கள்: வடிவேலுவால் கசக்கி பிழியப்பட்ட நடிகைகள்.. இந்த நடிகையுமா..? பிரபல நடிகர் வெளியிட்ட பகீர் தகவல்..!

காமெடினாக நடித்து வந்த சூரி நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக நடந்து கொண்டார். ஆம் கஜா புயலின் போது டெல்டா மாவட்டங்களுக்கு சென்று அங்கு மூன்று நாட்கள் தாங்கி பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு தேவையான அனைத்து நலஉதவிகளையும் செய்து வந்தார்.

கொரோனா காலகட்டத்தில் லாக் டவுனில் பாதிக்கப்பட்ட நாடக நடிகர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் கொடுத்து உதவிகள் செய்தார் .

தனது கடந்த கால வலிகளையும் அதன் வறுமைகளையும் இன்று வரை மறக்காத பரோட்டா சூரி சுசீந்திரன் கொடுத்த சினிமா வாய்ப்புதான் தனது வாழ்க்கையே மாற்றி இருப்பதாக பல பேட்டிகளில் நன்றியுணர்வுடன் கூறி வருகிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version