மாமியார் கிட்ட திட்டு வாங்காம.. சமத்து மருமக-ன்னு பேரு வாங்கலாம்..! – இதோ சூப்பர் சமையல் குறிப்புகள்..!

சமையல் குறிப்புகள் : பொதுவாக சமையல் செய்வது என்பது ஒரு கலை. இதில் எந்தெந்த பொருள் என்னென்ன அளவு போட வேண்டும் என்பதை தாண்டி.. கைவண்ணம் என்ற ஒரு விஷயம் இருக்கிறது.

அந்த கைவண்ணம் அல்லது கை பக்குவம் என்று சொல்லக்கூடிய விஷயங்களில் என்னென்ன விஷயம் அடங்கும் என்று கூட இன்றைய லிட்டில் பிரின்சஸ்-களுக்கு தெரியவில்லை என்பதுதான் உண்மை.

அதில் எதுவும் தவறில்லை மாறிவரும் கால சூழழில் அவற்றை அவர்களுக்கு எடுத்துக் கூற ஆள் இல்லை என்பது தான் உண்மை. இருந்தால் என்ன..? நம்முடைய தளத்தில் அவற்றை தெரிந்து கொள்வோம்.

கை பக்குவம் என்பது அந்த சமையலை செய்யக்கூடிய முறை.. அதற்கு நாம் கையாளக்கூடிய யுக்திகள்.. எந்த ஒரு அளவீட்டு கருவியும் இல்லாமல் தம்முடைய கையாலேயே என்ன பொருளை எந்த அளவு போட வேண்டும் என்ற நேக்குப் போக்கு ஆகியவற்றை தெரிந்து கொள்வதுதான் கை பக்குவம் அல்லது கைவண்ணம் என்று அழைக்கப்படுகிறது.

சமையலின் போது சில விஷயங்களை நாம் கவனத்துடன் செய்யும்பொழுது நாம் சமைக்கக்கூடிய உணவு சுவையாக வருவது மட்டுமல்லாமல் நம்முடைய சுற்றத்தாரிடம்.. மாமியாரிடம் அல்லது அம்மாவிடம் அல்லது நம்முடைய உறவினரிடம் என சமத்து புள்ள என்ற பெயரை சம்பாதித்துக் கொள்ள முடியும் அதற்கான வழிமுறைகளை நாம் இங்கே பார்க்கலாம் வாருங்கள்.

10 சமையல் குறிப்புகள்:

 டிப்ஸ் 1

 எப்போதுமே கீரையை கடையும்போது கீரையின் நிறம் மாறி விடுவது வழக்கம். அந்த மாதிரி கீரையின் நிறம் மாறிவிடாமல் இருப்பதற்காக சில சொட்டு தேங்காய் எண்ணெயை வேக வைப்பதற்கு முன்பே கீரையில் இட்டு வேக வைப்பதன் மூலம் கீரையின் நிறம் பசுமையாக இருக்கும் கடைந்தாலும் நிறம் மாறாது.

டிப்ஸ் 2

 பூரி அல்லது சப்பாத்திக்கு மாவை பிசைந்து வைக்கும் போது மாவு அதிகமாகிவிட்டால் அதை பிரிட்ஜில் வைப்பதால் கருத்து விடுவது இயல்பான விஷயம் தான். அப்படி அந்த பிசைந்த மாவு கருகாமல் இருக்க சிறிதளவு எண்ணெயை அந்த உருண்டைகளின் மீது தடவி காற்று பூகாமல் ஒரு டப்பாவில் மூடி வைத்தால் மாவின் கலர் மாறாமல் இருக்கும்.

 டிப்ஸ் 3

 நாம் வாங்கி வைத்திருக்கும் மளிகை சாமான்கள் மற்றும் அரிசியில் புழுக்கள் பூச்சிகள் வராமல் இருக்க வர மிளகாய் அல்லது பிரியாணி இலை அதில் போட்டு வைத்தால் பூச்சி புழு வராது.

 டிப்ஸ் 4

 வீட்டில் அரைத்திருக்கும் தோசை மாவில் தோசை ஊற்றும்போது ஹோட்டல் தோசை போல் வருவதற்கு ஒரு கைப்பிடி அளவு அதில் கடலை மாவு சேர்த்துக் கொண்டு ஊற்றினால் தோசை பொன் நிறமாகவும் மொறு மொறு என்று ஹோட்டல் தோசை போல வரும்.

டிப்ஸ் 5

 சமையலறையில் வைத்திருக்கும் சர்க்கரை டப்பாவை சுற்றியும் சர்க்கரை டப்பாவுக்குள் எறும்புகள் போகாமல் இருப்பதற்கு இரண்டு கிராம்புகளை போட்டு வைத்தால் போதுமானது எறும்பு அந்தப் பக்கமே வராது.

டிப்ஸ் 6

 சாதத்தை சமைக்கும் போது வெள்ளையாகவும் உதிர் உதிராகவும் வர அரிசியை ஊற வைக்கும்போது ஒரு சில ஐஸ் துண்டுகளையும் சேர்த்து ஊற வைத்தால் சாதம் வடிக்கும் போது குறையாமல் அப்படியே உதிர் உதிராக வரும்.

டிப்ஸ் 7

 சந்தையில் இருந்து வாங்கி வரும் காய்களில் ஒன்றான கத்திரிக்காயை  வாங்கி வந்த உடனேயே ஹாட் பாக்சில் மூடி வைத்தால் வாடாமல் நிறம் மாறாமலும் இருக்கும். இதை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமும் இல்லை.

டிப்ஸ் 8

 சுடச்சுட இட்லிக்கு நல்லெண்ணையை ஊற்றிக் கொள்பவர்கள் இனிமேல் அந்த நல்லெண்ணையை லேசாக சூடு செய்து அதில் கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தும் போது இட்லி இன்னும் இரண்டு  அதிக அளவு சாப்பிட தோன்றுவதோடு நல்ல மணமாகவும் இருக்கும்.

டிப்ஸ் 9

வெண்டைக்காயை உணவில் சமைக்கும் போது அது ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் இருப்பதற்கு சமைப்பதற்கு முன் சிறிதளவு எலுமிச்சை சாறு அதில் தெளிக்க வேண்டும். அவ்வாறு தெளிப்பதால் பிசு பிசுவென காய்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாது.

டிப்ஸ் 10

 பால் விரைவில் கெட்டுப் போகாமல் இருக்க வேண்டுமானால் நீங்கள் வாங்கக்கூடிய பால் பாத்திரம் சுத்தமான நிலையில் இருக்க வேண்டும்.

 அது மட்டும் அல்லாமல் பாலினை காய்ச்சும் போது ஒன்று இரண்டு நெல்லினை அதில் போட்டு காய்ச்சுவதின் மூலம் கறந்த பால் காலை முதல் இரவு வரை அப்படியே கெடாமல் இருக்கும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam