கே.ஆர்.விஜயா குறித்து பலரும் அறியாத 10 ரகசிய உண்மைகள்..!

பழம்பெரும் நடிகையான கே ஆர் விஜயா கேரள மாநிலத்தை சொந்த ஊராகக் கொண்டு அங்கு தன்னுடைய தந்தை நகை வியாபாரம் செய்து மிகப்பெரிய வசதி வாழ்ந்து குடும்பத்தில் இருந்து வந்தார்.

பின்னர் திடீரென தனது தந்தையின் வியாபாரம் நாளுக்கு நாள் நஷ்டமடைய குடும்பம் வறுமையில் சென்று இருக்கிறது.

இதனால் கே ஆர் விஜயா படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு நாடக கம்பெனி ஒன்றில் பணியாற்ற துவங்கினார்.

நடிகை கே ஆர் விஜயா:

அதன் மூலம் தான் அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து நட்சத்திர நடிகையாக ஜொலிக்க ஆரம்பித்தார் மேலும் கே ஆர் விஜயாவை பற்றி பலரும் அறியாத உண்மைகள் பற்றி இந்தஇந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

தந்தை நடத்தி வந்த வியாபாரம் பெறும் நஷ்டமடைந்ததால் வறுமை காரணமாக பழனி மலை அடிவாரத்தில் குடியிருந்த கே.ஆர். விஜயா அங்கு நடக்கும் கண்காட்சிகளில் பூ விற்று நடனமாடி வந்திருக்கிறார்.

குடும்ப வறுமை காரணமாக படிப்பை பாதிலேயே நிறுத்தி இருக்கிறார் விஜயா. 16வது வயதில் ராமசாமி என்கிற நாடக கம்பெனியில் நடிகையாக இணைந்து தனது கலைப் பயணத்தை ஆரம்பித்தார்.

ஒரு சில நாடகங்களில் நடித்து அங்கு பெரும் புகழ்பெற்ற தெய்வநாயகி எனும் கே ஆர் விஜயா பின்னர் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க சினிமாவில் சென்று ஜொலிக்க ஆரம்பித்தார்.

அவரது முதல் திரைப்படம் நடிகர் எம் ஆர் ராதாவுடன் இணைந்து நடித்த “மகளே உன் சமத்து” எந்த திரைப்படம் தான்.

எம். ஆர் ராதா வைத்த பெயர்:

இந்த திரைப்படத்தில் கே ஆர் விஜயா எம் ஆர் ராதாவுடன் இணைந்து நடிக்கும் போது உன்னுடைய பெயர் என்ன என்று கே ஆர் விஜயாவை பார்த்து கேட்டிருக்கிறார் எம் ஆர் ராதா.

அதற்கு அவர் தெய்வநாயகி என்று சொல்ல இது ரொம்ப ஓல்ட்டா இருக்கு விஜயா… கிஜயான்னு ஸ்டைலா பேர் வச்சுக்க அப்பதான் சினிமாவில் முன்னுக்கு வர முடியும் என்று கூறி இருக்கிறார் எம் ஆர் ராதா .

அவர் சொன்னதை கேட்டு தெய்வநாயகி என்று இருந்த தன்னுடைய பெயரை கே ஆர் விஜயா என மாற்றிக் கொண்டார்.

கே ஆர் விஜயாவின் கணவர் வேலாயுதம் மிகப்பெரிய தொழிலதிபாராகவும் பணக்காரராகவும் இருந்து வந்த சமயத்தில் சொந்தமாக ஹெலிகாப்டர், தியேட்டர் ,நீச்சல் குளம் , மிகப் பெரிய பங்களா வீடு வைத்துக்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார் கே ஆர் விஜயா.

சொகுசு வாழ்க்கை:

மேலும் தன்னுடைய கணவர் 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்து தயாரிப்பாளராகவும் இருந்து வந்தார். இதனால் கே ஆர் விஜயாக்கு பணம் விஷயத்தில் எந்த ஒரு குறையும் இல்லாமல் இருந்தது.

அந்த காலத்திலே சொந்தமாக ஹெலிகாப்டர் ஒன்றும் வைத்திருந்தார். திருச்சியில் நடந்த ஒரு விழாவிற்கு சென்றபோது அங்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இவரின் சிரிப்பு அழகில் மயங்கி போக புன்னகை அரசி என கோஷமிட்டு அவருக்கு பட்டம் கொடுத்தனர்.

ரசிகர்கள் கொடுத்த அந்த பட்டத்தையே பின்னாளில் அவர் புன்னகை அரசி என வைத்துக்கொண்டார் கே ஆர் விஜயா. திருமால் பெருமை என்ற திரைப்படத்தில் நடித்த போது அவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

அப்போது தன்னுடைய மேடான வயிற்றை மறைக்க நகை நட்டுகளை உடல் முழுக்க அணிந்து கொண்டு நடித்திருந்தார்.

புன்னகை அரசி பட்டம்:

ரசிகர்களால் புன்னகை அரசி என்று அழைக்கபட்ட கே ஆர் விஜயா பெருமை பட்டாலும் இல்லத்தரசி என்பதுதான் அவருக்கு மிகவும் பிடிக்கும் என அவரை பல பேட்டிகளில் கூட தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே தனது அன்பு கணவரின் மறைவுக்கு பிறகு மிகுந்த மனவேதனைக்கு உள்ளான கே.ஆர். விஜயா தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார்.

கணவரின் மரணத்திற்குப் பிறகும் பிள்ளைகளின் பாதுகாப்பு சரியாக இல்லாததால் சொத்துகளுக்கு ஆசைப்பட்டு பிள்ளைகள் தங்களை தனியாக தவிக்க விட்டார்கள் என்பதை மனதில் வைத்துக்கொண்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

கே ஆர் விஜயா குடி போதைக்கும் அடிமையாகி விட்டதாக கிசுகிசுக்கள் கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் 400க்கும் மேற்பட்ட நடித்துள்ளார்.

மேலும், தமிழக அரசு திரைப்பட விருது, கேரளா மணிலா திரைப்பட விருது, தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை பெற்று புகப்பெற்ற நடிகையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version