“மகளிர் உரிமைத் தொகை ரூபாய் ஆயிரம்..!” – யாருக்கு கிடைக்கும்..!

திமுக அளித்த தேர்ருதல் வாக்குறுதிகளில் ஒன்றான மகளிர் உரிமைத் தொகை இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் என்ற திட்டம் வரும் 2023 – 24 ஆம் நிதியாண்டில் சட்ட பேரவையில் நிதியமைத்த பி டி ஆர் பழனிவேல் ராஜா வெளியிடப்பட்ட அரிசியின்படி வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அப்படி கூறப்பட்ட இந்தத் தொகையானது யார் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பதில் மாபெரும் குழப்பம் நிலவி வருகிறது. இந்த குழப்பத்தை தீர்க்கும் விதத்தில் இந்த மகளிர் உரிமைத் தொகை பணமான ரூபாய் 1000 மாதாமாதம் யார் யாருக்கு கிடைக்கும் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

1000-monthly-assistance

இலவச பஸ் பயணத்திற்கு பெண்களுக்கு வழிவகை செய்த திமுக அரசனது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதத்தில் தற்போது ஒவ்வொரு இல்லத்தரசிகளுக்கும் மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் வீதம் வரும் செப்டம்பர் செப்டம்பர் மாதம் பத்தாம் தேதிக்குப் பிறகு வழங்கும் என்று அறிவுத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்திதான்.

ஆனால் இந்தத் தொகையானது அனைத்து இல்லத்தரசிகளுக்கும் கிடைக்காது. குறிப்பாக அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தும் நபர்கள், சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கு இந்த ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கிடைக்காது என்பது தெரியவந்துள்ளது.

1000-monthly-assistance

அதுபோலவே NPHH -S, NPHH-NS போன்ற குறியீடு உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இந்த உரிமைத்தொகை கிடைக்காது. குடும்பத்தில் ஒரு நபர் அரசு ஊழியர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் மாதம் தோறும் வழங்கவிருக்கும் ஆயிரம் ரூபாய் கிடைக்காது.

இந்த உரிமை தொகையானது வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் விதத்தில் உள்ளது குறிப்பாக ரேஷன் அட்டையில் NPHH,PHH-AYY என்ற குறியீடு உள்ள ரேஷன் காரர்களுக்கு மட்டுமே இந்த மாதம் தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

1000-monthly-assistance

அதுமட்டுமல்லாமல் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பெறும் மாணவிகள் மாதாமாதம் ஆயிரம் ரூபாய் பெற்றாலும் அவர்கள் அம்மாக்களுக்கும் இந்த உரிமை தொகை வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை பெறும் பெண்களுக்கும் மாத உரிமைத் தொகை கிடைப்பதற்கு உரிமை உண்டு.

திமுக கூறிய இந்த வாக்குறுதி ஓராண்டு முழுமையாக முடிந்த முடிந்த பின்னும் அமலுக்கு வராத நிலையில் இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. எனினும் இந்த பட்ஜெட்டில் அறிவித்த படியாவது இந்தத் தொகை கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …