இன்றைய ராசிபலன் 11 பிப்ரவரி 2023 சனிக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : ஒவ்வொரு மனிதனுக்கும் ஜாதகம் சாதகமாகவே அமையும் என்பதில் உறுதியாக இருங்கள். உங்களுக்கு ஏற்படக்கூடிய எண்ணற்ற இடங்களை சமாளிக்க இந்த ஜாதகம் உங்களுக்கு ஒரு துருப்பு சீட்டாக பயன்படும் என்பதில்  முழு நம்பிக்கையோடு இருந்தால் எத்தகைய இடர்களையும் நீங்கள் தகர்த்து எறிய முடியும். அந்த வரிசையில்  இன்றைய ராசிபலன் 11 பிப்ரவரி   2023 சனிக்கிழமை 27 நட்சத்திரங்களுக்கு உரிய ராசிபலன் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக விளங்குவதால் புதிய வளர்ச்சியை நோக்கி நீங்கள் முன்னேறி செல்வீர்கள். எதிலும் முறையாக திட்டமிடுதல் நடைபெறும்.

 மேலும் தொழில் சார்ந்த உங்களுடைய அணுகுமுறை வெற்றியை கொடுக்கும். தொழிலைப் பொறுத்தவரை பணியில் நல்ல பெயரும் புகழும் அடைவதற்கான சூழ்நிலைகள் சிறப்பாக விளங்குவதால் தடையின்றி எல்லா பணிகளையும் செய்து முடிப்பீர்கள்.

 நிதி நிலைமையை பொருத்தவரை மிகவும் சிறப்பாக இருக்கும் பண வரவு உங்களிடம் அதிகமாக காணப்படுவதால் உங்கள் சேமிப்பை உயர்த்த முயற்சி செய்வீர்கள். தங்கு தடையற்ற ஆரோக்கியம் இன்று நிலவுவதால் ஆரோக்கியத்தை பற்றி எந்த கவலையும் படத் தேவையில்லை.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களுக்கு இன்று அருமையான நாளாக இருப்பதால் உங்கள் இலக்குகளை நோக்கி நீங்கள் முன்னேறி செல்வீர்கள். உங்களுக்கு சாதகமான பலன்கள் கண்டிப்பாக கிடைக்கும். மேலும் இன்று உங்களுக்கு திருப்தியான பலன்கள் கிடைப்பதின் மூலம் நீங்கள் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள்.

 நண்பர்களின் ஆதரவு இன்று உங்களுக்கு கட்டாயம் கிட்டும். தொழிலைப் பொறுத்தவரை நீங்கள் கடின உழைப்பின் மூலம் வெற்றி காண்பீர்கள். சக பணியாளர்களுடன் எப்போதும் நல்லுறவு கொண்டு இருப்பதால் பணிகள் மள மளவென எளிதில் முடியும்.

 நிதி நிலையை பொறுத்த வரை இன்று சிறப்பாக இருப்பதால் கணிசமான தொகை உங்கள் கையில் புரளும்ஶ்ரீ திருப்திகரமாக   மனநிலையில் நீங்கள் இருப்பதால் அந்த பணத்தை சேமிப்பதில் உங்கள் எண்ணம் செல்லும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்கள் ஆற்றல் இன்று மிகுந்து காணப்படுவதால் எந்த விதமான சிரமங்களும் ஆரோக்கியத்தில் ஏற்படாது.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே இன்று பதட்டம் மற்றும் பாதுகாப்பின்மை இருப்பது போல இருக்கும் உணர்வு உங்களுக்கு ஏற்படும். அதிகளவு எதிர்மறை ஆற்றல் உங்களிடம் இன்று உலா வருவதால் அதை தகர்க்க கூடிய நம்பிக்கை உணர்வை வளர்த்துக் கொள்வது அவசியம்.

தொழிலைப் பொறுத்தவரை திடமான நம்பிக்கையோடு நீங்கள் செயல்பட்டால் மட்டுமே வெற்றியை அடைய முடியும்.அதே நேரம் தடைகளை சமாளிக்க கூடிய நேர்மறை எண்ணங்களை உங்களுடன் உங்களிடம் வளர்த்துக் கொள்வது அவசியமான ஒன்று.

அப்போதுதான் பணியிடத்தில் நீங்கள் சிறப்பாக பணியாற்ற முடியும். நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று குறைந்த அளவு பணப்புழக்கம் உங்களிடம் இருக்கும். ஆனால் எதிர்பாராத விதமாக அதிக செலவுகள் வந்து சேரும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை சற்று மந்தமான நாளாக இது இருப்பதால் நீங்கள் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. தொண்டை எரிச்சல் சம்பந்தப்பட்ட நோய்கள் உங்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் கவனம் தேவை.

கடகம்

வெற்றியை அள்ளித் குவிக்கும் கடக ராசி நேயர்களே இன்று உங்களிடம் ஒரு விதமான உத்வேகம் காணப்படுவதால் எந்த காரியத்தையும் விரைந்து முடிக்க கூடிய ஆற்றல் உங்களுக்கு ஏற்படும். உங்கள் நலனுக்காக பயனுள்ள முடிவுகளை நீங்கள் இன்று எடுக்கலாம். மேலும் உங்கள் மனநிலையில் எப்போதும் நேர்மறையான எண்ணங்களை இருக்கும்.

 தொழிலைப் பொறுத்தவரை சிறப்பு தகுதி இருப்பதால் நீங்கள் எந்த செயலையும் மிகவும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இதனால் உங்கள் பணிக்கு உரிய அங்கீகாரம் எல்லோரிடமிருந்தும் உங்களுக்கு கிட்டும்.

 நிதி நிலையை பொறுத்தவரை மிகவும் சிறப்பாக இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிப்பதோடு வங்கிகளில் நீங்கள் பணத்தை சேமிப்பதும் அதிகரிக்கும். இதனால் உங்களுக்கு திருப்திகரமான நாளாக இந்த நாள் விளங்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உற்சாகமாக இருப்பீர்கள் எந்தவித ஆரோக்கிய குறைபாடும் இன்று உங்களுக்கு ஏற்படாது.

சிம்மம்

தடைகளை உடைக்கக்கூடிய சிம்ம ராசி நேயர்களுக்கு சாதகமான நாளாக இன்றைய நாள் இருப்பதால் நீங்கள் உங்கள் இலக்குகளை அடைய நேர்மறையான எண்ணங்களோடு முயற்சி செய்வது மிகவும் முக்கியமானது. உங்களின் உறுதியும், தைரியமும் உங்களுக்கு நல்ல நிலையை ஏற்படுத்தித் தரும். கூடவே தன்னம்பிக்கையோடு எப்போதும் இருங்கள்.

 தொழிலைப் பொறுத்தவரை பணி செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். உங்கள் பணி மிகச் சிறப்பாக இருக்கிறது என்று மேல் அதிகாரிகளால் பாராட்டுகளை பெறக்கூடிய சூழ்நிலை உருவாகும். இன்று பணப்புழக்கம் அதிகரித்து காணப்படுவதால் வங்கி இருப்பை அதிகரிக்க முயற்சி செய்வீர்கள்.

இதனால் பணத்தை பொருத்தவரை நல்ல வளர்ச்சி இருக்கும். ஆரோக்கியமாக இருக்க அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள். உங்கள் மனதளவில் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதாக நினைப்பது மிகவும் நல்லது.

 அப்படி நினைத்தால் உங்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறப்பான நாளாக அமைவதோடு அனைத்தையும் ஆற்றலோடு செய்து முடிப்பீர்கள்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். மகிழ்ச்சி குறைந்த நாளாக காணப்படும் இந்த நாளில் நீங்கள் பாதுகாப்பு இன்மை உணர்வு உங்களிடம் ஏற்பட்டு இருப்பதால் எதிலும் அமைதியை கையாளுவது உங்களுக்கு கூடுதல் பலமாக இருக்கும்.

 தொழிலைப் பொறுத்தவரை நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். பணியில் தவறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் மேலதிகாரிகளிடம் இருந்து நல்ல மதிப்பை உங்களால் பெற முடியாது. எனவே எதிலும் நிதானத்துடனும் கவனத்துடனும் செயல்படுவது அவசியம்.

 உங்கள் பணத்தை நல்ல முறையில் இன்று செலவழிக்க முடியாத நிதி நிலைமை இருப்பதால் தேவையற்ற செலவுகளை கட்டாயம் குறைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தை பொறுத்தவரை தொண்டை பகுதியில் எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

 எனவே பிரிட்ஜில் வைத்திருக்கும் உணவு பண்டங்களை உண்ணுவதை தவிர்த்து விடுங்கள். எதையும் சற்று சூடாக அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே இன்று உங்கள் இலக்குகளை அடைவதற்காக நீங்கள் கடுமையான முயற்சி மட்டுமல்லாமல் உழைக்கவும் வேண்டும். முக்கிய முடிவுகளை இன்று தயவு செய்து எடுப்பதை தவிர்த்து விடுங்கள். இந்த நாள் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் நீங்கள் பொறுமையை அதிகளவு கடைபிடிக்க வேண்டும்.

 தொழிலைப் பொறுத்தவரை பணிகள் அதிக அளவு இருந்தாலும் ஒரு சற்று சுணக்கமான மந்த நிலையை உள்ளது. இது உங்களை கவலையில் ஆழ்த்தும்.மேலும் உங்களுடன் பணியாற்றும் சக பணியாளர்களிடம் ஜாக்கிரதையாக நீங்கள் இருக்க வேண்டும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை மகிழ்ச்சிகரமான நாள் என்று சொல்லலாம். பயனுள்ள முதலீடுகளில் உங்கள் பணத்தை முதலீடு செய்ய இன்று முயற்சி செய்வதோடு மட்டுமல்லாமல் முழுமூச்சாக செயல்பட உகந்த நாள். ஆரோக்கியம் சுமாராகவே இருப்பதால் நீங்கள் ஜாக்கிரதையாக உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும் கண் எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவு உள்ளது.

விருச்சிகம்

வெற்றி மேல் வெற்றியை குவிக்க கூடிய விருச்சிக ராசி நேயர்களே இன்று நீங்கள் சகஜமாக எதையும் எடுத்துக் கொள்ளுதல் நல்லது. உங்கள் வளர்ச்சியை தடுக்கும் எந்த உணர்வுக்கும் நீங்கள் இடம் கொடுக்கக் கூடாது. உங்கள் அணுகு முறையில் விவேகமாக நீங்கள் செயல்படுவது முக்கியமானதாகும்.

 தொழிலைப் பொறுத்தவரை பணியிடச் சூழலில் சற்று அனுகூலம் குறைந்து தான் உள்ளது. எனவே சக பணியாளர்களிடம் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்த்து விடுங்கள். திட்டமிட்டு பணிகளை நீங்கள் செய்வதின் மூலம் திறமையாக பணிபுரியலாம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

 நிதி நிலைமையில் இன்று பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் தேவையற்ற செலவுகளை தவிர்த்து விடுங்கள். ஆரோக்கியங்களில் இன்று அசவுரியம் இருப்பதால் நீங்கள் உடல் ஆரோக்கியத்தை கட்டாயம்  பாதுகாக்க வேண்டும்.

 தோல் மற்றும் கணுக்கால்களில் வலிகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அதிக அளவு நிலவுவதால் உடலில் அக்கறை செலுத்துவது அவசியம்.

தனுசு

 தனுசு ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான நாளாக இருப்பதால் கடும் முயற்சியின் மூலம் நீங்கள் வெற்றி அடைவீர்கள். அதே சமயத்தில் உங்களுக்கு எதிலும் திருப்தி இருக்காது.எனவே உங்களுக்கு திருப்தி தேவை என்றால் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது அவசியம்.

 பணியிடத்தை பொருத்தவரை நீங்கள் சிறப்பாக பணியாற்றக்கூடிய நாளாக இன்று விளங்கும். குறித்த நேரத்தில் அனைத்து பணிகளையும் முடிப்பீர்கள் எல்லோரது பாராட்டுக்களும் இதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும்.

 நிதி நிலையை பொறுத்த வரை பண வரவு அதிகமாக இருப்பதால் பயனுள்ள விஷயங்களை செலவுகளை செய்வது அவசியம். ஆரோக்கியத்தை பற்றி இன்று கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை முழு ஆரோக்கியத்தோடு இன்று சுறுசுறுப்பாக நீங்கள் இருப்பீர்கள்.

மகரம்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று செயல்களை மேற்கொள்வதற்கு சற்று கடினமாக இருக்கும். உங்கள் கட்டுப்பாடு உங்கள் கையில் இல்லை என்று கூறக்கூடிய நிலையில்தான் இன்றைய ராசி பலன் உங்களுக்கு உள்ளது. எனவே அணுகு முறையை மாற்றி பொறுமையையும் உறுதியையும் அவசியம் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

 தொழிலைப் பொறுத்தவரை இன்று பணிகள் நல்ல முறையில் நடப்பதற்கான சூழ்நிலை இல்லை. எனவே அமைதியை கையாண்டு சக பணியாளர்களிடம் உங்களது உறவை இணக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.

 அதுபோலவே நிதி நிலைமையும் இன்று மகிழ்ச்சியை உங்களுக்கு தராது. மன குழப்பம் அடிக்கடி ஏற்படும் எதிர்பாராத பணவரவு இருந்தாலும் அதை சரியான வழியில் உங்களால் பயன்படுத்த முடியாது.

 ஆரோக்கியத்தில் கண்ணும் கருத்துமாக இருத்தல் என்று அவசியம் கண் தொடை போன்ற பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அந்த பகுதிகளில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி விடுவது நல்லது. ஆரோக்கியத்துக்காக நீங்கள் பணம் செலவிடுவது அவசியமாகும்.

கும்பம்

இன்று கும்ப ராசி நேயர்களுக்கு தடைகளும் தாமதமும் அதிகமாக இருப்பதால் எந்த ஒரு முக்கியமான முடிவையும் நீங்கள் எடுக்காமல் அதை தள்ளிப் போடுவது தான் மிகச் சிறப்பான வழியாக இருக்கும். உங்கள் மனது சஞ்சலத்தோடு இருப்பதால் அதை தவிர்ப்பதற்காக இசையை கேட்பது மிகச் சிறப்பாக இருக்கும்.

 தொழிலைப் பொறுத்தவரை சமூகமான பணி சூழல் இல்லை. சகப் பணியாளர்களை அனுசரித்து செல்வதின் மூலம் நீங்கள் பணியை விரைவில் செய்ய முடியும். எனினும் இன்று பணி சுமை அதிகமாக உங்களுக்கு இருக்கும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை தேவையில்லாத செலவுகள் அதிகமாக ஏற்படும் அது மட்டுமல்லாமல் வீட்டை புனரமைப்பதற்காக நீங்கள் பணத்தை செலவு செய்வீர்கள். ஆரோக்கியத்தை பொருத்தவரை முதுகு வலி கால் வலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதால் சற்று ஓய்வு எடுப்பது உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

மீனம்

எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் மீன ராசி நேயர்கள் இன்று உறுதியுடன் இருந்தால் நல்ல வளர்ச்சியை அடைய முடியும். நம்பிக்கையோடு எதிலும் வெற்றி பெறக் கூடிய உங்களுக்கு வாய்ப்புகள் உங்கள் வாயில் கதவை வந்து தட்டும்.

 தொழிலைப் பொறுத்தவரை உங்களுக்கு பாராட்டு மழை என்று பொழியும் என்று கூறலாம். ஆற்றலோடு விளங்கும் நீங்கள் அந்த ஆற்றலை உங்கள் பணியிடத்தில் வெளிப்படுத்தி அதிகாரிகளிடம் இருந்து நல்ல மதிப்பை பெற முடியும். நிதி நிலைமை இன்று சிறப்பாக இருந்தாலும் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரலாம்.

 ஆரோக்கியம் அருமையாக இருக்கும் நேர்மறை எண்ணங்களை மனதில் வளர்த்துக் கொள்ளுங்கள் இதன் மூலம் உங்களது ஆரோக்கியத்தில் எந்த குறையும் ஏற்படாது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version