இன்றைய ராசிபலன் 12 பிப்ரவரி 2023 ஞாயிற்றுக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 12 பிப்ரவரி 2023 ஞாயிற்றுக்கிழமை . இந்த பூவுலகில் ஜெனிக்கும் எல்லோருமே கட்டாயமாக  நவகிரகங்களின் பார்வை மூலம் எண்ணற்ற பயன்களை அடையலாம். அந்தப் பயனானது அவரவர் ஜெனிக்கும் காலத்தை பொறுத்து அமைவது உண்மை. தற்போதைய அறிவியலால் விளக்க முடியாத சிலவற்றை நமது முன்னோர்கள் ஜாதகத்தின் மூலம் அற்புதமாக விளக்கி இருந்தார்கள்.

 அதுமட்டுமல்லாமல் அந்தந்த நவகிரகங்களுக்கு ஏற்ப அவற்றைத் திருப்திப்படுத்தும் வகையில் பரிகாரங்களை கூறி நமது வாழ்க்கை மேம்படக்கூடிய வழிகளை  ஜோதிடத்தில் மூலம் கூறியிருக்கிறார்கள். அந்த வரிசையில்  இன்றைய ராசிபலன்  27 நட்சத்திரங்களுக்கு உரிய ராசிபலன் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

 வெற்றிகளை வாரிக் குவிக்க கூடிய மேஷ ராசி நேயர்களே, உங்கள் எண்ணங்களில் நேர்மறை ஆற்றல்  இன்று அதிகளவு இருப்பதால் புதிய வாய்ப்புகள் வர உள்ளது. உங்கள் விருப்பங்கள் அதற்கு தகுந்தது போல் நிறைவே நிறைவேறுவதற்கான உகந்த நாளாக இன்று திகழ்வதால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையும்.

 தொழிலைப் பொறுத்தவரை நீங்கள் சிறப்பாக பணியாற்றக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. சக பணியாளர்களிடம் எப்போதும் நட்புடன் பழகும் நீங்கள் உங்கள் திறமையை வெளிப்படுத்துவதின் மூலம் மேலதிகாரிகளிடம் இருந்து பாராட்டுகளை பெற்று மகிழ்வீர்கள்.

 நிதி நிலைமையை பொருத்தவரை மிகவும் சிறப்பான நாள் என்பதால் உங்கள் சேமிப்பு உயரும். அதுபோலவே ஆரோக்கியமும் அற்புதமாக இருக்கக்கூடிய நாள் என்பதால் ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலை கொள்ள தேவையே இல்லை.

ரிஷபம்

உங்கள் பொறுமைக்கு இன்று சோதனை ஏற்படக்கூடிய நாளாக இருப்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் இருக்க வேண்டும். தகவல் பரிமாற்றம் சரியான வழியில் இன்று அமையாததின் காரணமாக உங்களுக்கு பிரியமான ஒருவருடன் மோதல் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிக அளவு உள்ளது.

 இன்று நல்ல பலன்களை நீங்கள் அடைய வேண்டும் என்றால் உங்கள் புத்திசாலித்தனத்தை காட்ட வேண்டும். தொழிலைப் பொறுத்தவரை எல்லாவற்றிலும் வெற்றி கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளது. மேலும் நீங்கள் பணியிடத்தில் உங்கள் சமயோதிட புத்தியை பயன்படுத்துவது அவசியம். அதன் மூலம் பயன்கள் பெறலாம்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை சராசரியான நாளாக இருப்பதால் உங்கள் தேவைகளை சரியான வகையில் பூர்த்தி செய்யக்கூடிய நிலை ஏற்படாது. கடன்கள் வாங்கக்கூடிய சந்தர்ப்பம் இருப்பதால் ஜாக்கிரதையாக இருக்கவும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை உடல் சூடு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் அதிகளவு நீரை உட்கொண்டு அந்த நிலையை நீங்களே மாற்றிக் கொள்ளலாம்.

மிதுனம்

அற்புதமான நாளாக இருக்கக்கூடிய இந்த நாளில் மிதுன ராசி நேயர்கள் அனைவரும் அதிகளவு விருந்து, கேளிக்கைகளில் புத்தியை செலுத்துவார்கள். மேலும் உங்களுக்கு முக்கியமான நபர் ஒருவர் வீட்டுக்கு வருவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளது உங்கள் முயற்சியின் மூலமே நீங்கள் உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்வீர்கள்.

பணியை பொறுத்தவரை விரைந்து முடிக்கும் ஆற்றல் இன்று இருப்பதால் நீங்கள் பதட்டத்தோடு இருப்பீர்கள். தொழிலில் எந்த குழப்பமும் இல்லை எனவே நிதானமாக எதையும் செய்யவும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட அளவு கடன் வாங்கக்கூடிய யோகம் உள்ளது. மேலும் பணத்தை இழக்காமல் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் சேமிப்பை கட்டாயம் கையாள வேண்டும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்கள் தாயாரின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள் இல்லையெனில் அதற்கான ஒரு செலவை நீங்கள் செய்ய வேண்டி இருக்கு.ம் எனினும் அவரது உடல் நிலையில் பெரிய அளவு பாதிப்பு இல்லை எனவே கவலைப்பட வேண்டாம்.

கடகம்

கடக ராசி நேயர்களுக்கு இன்று வெற்றிகரமான நாளாக இருப்பதால் உங்கள் வாழ்வில் சிறந்த வளர்ச்சியை நீங்கள் அடைவீர்கள். உங்கள் செயல்களில் அதிகளவு உத்வேகத்தை காட்டுவதால் எல்லாவற்றையும் படு விரைவாக செய்து முடிக்க கூடிய ஆற்றல் உங்களுக்கு ஏற்படும்.

தொழிலைப் பொறுத்தவரை வெளிநாடு செல்லக்கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கிறது. உங்கள் வளர்ச்சியை பார்த்து நீங்களே மகிழ்ச்சி அடையக் கூடிய நாளாக இந்த நாள் உங்களுக்கு அமையும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை அதிர்ஷ்டகரமான நாள் என்று கூறலாம். பல பக்கம் இருந்து பணம் உங்களுக்கு வந்து சேரும் ஆனாலும் உங்கள் பணத்தை நீங்கள் சம்பாதிக்க கூடிய வேகத்திலேயே செலவையும் செய்வீர்கள். ஆரோக்கியத்தில் எந்த விதமான தடையும் இல்லை துடிப்பாகவும் ஆற்றலோடும் காணப்படுவீர்கள்.

சிம்மம்

நீங்கள் ஒருவரிடம் பேசும் போது கடுமையாக பேசக்கூடியவற்றை தடுக்க வேண்டும். எதிலும் வன்மமான அணுகுமுறை வேண்டாம். அமைதி காத்தல் நல்லது. நிறைவேறாத லட்சியங்களுக்காக நீங்கள் வருந்துவதால் எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

 தொழில் செய்யும் இடத்தில் உங்களுக்கு போட்டிகள் இருக்கும் பனிச்சுமை கூடுதலாக காணப்படுவதால் திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே முன்னேற்றம் ஏற்படும்.

 நீதி நிலைமை பொறுத்த வரை உங்களிடம் பணப்புழக்கம் குறைவாகவே இருப்பதால் செலவுகளை கண்காணித்து அதற்கு தக்கவாறு நீங்கள் செலவு செய்ய வேண்டும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை செரிமான சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படக்கூடிய நாள் என்பதால் எண்ணெய் பதார்த்தங்கள் உட்கொள்வதை நீங்கள் அறவே தவிருங்கள்.

கன்னி

நினைத்ததை முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்ற கன்னி ராசி நேயர்களே. உங்கள் வளர்ச்சியில் இன்று அதிக அளவு தடைகள் காணப்படுவதால் வெற்றி என்பதை இன்று பெற முடியாது. எனினும் நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டால் கட்டாயம் வெற்றி உங்கள் காலடியில் வந்து சேரும்.

தொழிலைப் பொறுத்தவரை இன்று பல தவறுகள் நிகழ்வதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதால் கவனமாக உங்கள் பணிகளை முடித்து மேல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும். நிதிநிலைமையை பொறுத்தவரை இன்று வளர்ச்சி குறைந்த நாள் என்பதால் பணப்புழக்கம் அதிக அளவு இருக்காது.

 பூர்வீக சொத்து அல்லது எதிர்பாராத வகையில் பண வரவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இல்லை. எனினும் பணி சுமை காரணமாக உங்களுக்கு தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

துலாம்

துலாம் ராசி நேயர்களுக்கு என்று அற்புதமான நாளாக இருப்பதால் மகிழ்ச்சி உங்கள் மனதில் துள்ளி விளையாடும் எந்த செயலையும் செய்வதற்கு முன்பு உணர்த்தி வசப்படுவதை தவிர்த்து விடுங்கள். இசை கேட்பதன் மூலம் உங்கள் மன ஆறுதல் மேம்படும். தொழிலைப் பொறுத்தவரை இன்று பணி சற்று அதிகமாக இருப்பதால் அதை திறம்பட செய்வதற்கு நீங்கள் திட்டமிடுதல் அவசியம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை செலவுகள் அதிகமாக இருக்கக்கூடிய நாள் என்பதால் அனாவுவசியமாக உங்கள் பணத்தை செலவிடுவதை தவிர்க்க நீங்கள் கட்டாயம் முயற்சி செய்ய வேண்டும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உழைப்பு அதிகமாக உங்களுக்கு இருப்பதால் தலைவலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேலும் வாகனங்களில் செல்லும்போது அதீத கவனம் தேவை. இல்லை என்றால் காயம் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளது. எனவே கவனம் அவசியம் தேவை என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே இன்று உங்கள் தொடர் முயற்சிகளின் மூலம் வெற்றியை அடையக்கூடிய நாள், உங்கள் நல விரும்பிகள் மற்றும் நண்பர்களின் ஆதரவு அமோகமாக இருப்பதால் இந்த நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமைந்துள்ளது.

 தொழிலைப் பொறுத்தவரை சக பணியாளர்களிடம் இருந்து உங்களுக்குத் தேவையான அனைத்தையும் பெற்று விட்டு விடுவீர்கள். பணியை பொறுத்தவரை திறமையாக செயல்படுவதால் உங்களுக்கு பாராட்டு மழை வந்து குவியும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை ஊக்கத்தொகை மற்றும் சலுகை வகையில் எல்லாம் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டமான நாள் என்பதால் பண வரவுக்கு பஞ்சம் இல்லை. ஆரோக்கியத்திலும் எந்த குழப்பமும் இல்லாமல் இருப்பதால் நிறைந்த ஆற்றலோடு ஆரோக்கியமாக நீங்கள் எல்லா பணிகளிலும் சிறப்பாக விளங்குவதற்கு உரிய அற்புதமான நாள்.

தனுசு

தனுசு ராசி நேயர்களுக்கு இன்றைய நாளில் உணர்ச்சிகளை கட்டாயம் கட்டுப்படுத்தினால் மட்டுமே வெற்றிகள் வந்து குவியும் என கூறலாம். உங்கள் லட்சியங்களை நீங்கள் அடைவதற்கு மனதில் உறுதி இருப்பதோடு மட்டுமல்லாமல் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 உங்களுக்கு தொழிலைப் பொறுத்தவரை நல்ல அங்கீகாரம் கிடைத்திருக்கக் கூடிய நாள் என்பதால் உங்கள் செயல் திறன் முழுமையாக ஜொலிக்கும். அதோடு இன்று நீங்கள் அதிகளவு பணிகளை செய்வீர்கள். எனினும் நீங்கள் செய்த பணி சிறப்பாக இருந்தாலும் அது உங்களுக்கு திருப்திகரமாக அமையாது.

 நிதி நிலையை பொறுத்தவரை காப்பீடு போன்றவற்றிலிருந்து எதிர்பாராத பண வரவு ஏற்படுவதால் உங்கள் மனம் மகிழ்ச்சியில் கிடைக்கும். எனினும் பணத்தை கவனமாக செலவு செய்வது முக்கியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 ஆரோக்கியம் படு சிறப்பாக இருக்கும் இருந்தாலும் நீங்கள் பிரார்த்தனை மற்றும் தியானத்தில் ஈடுபடுவதை இன்னும் கூடுதல் சிறப்பை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்.

மகரம்

வாழ்க்கையில் எல்லாவற்றையும் பெற வேண்டும் என நினைக்கும் மகர ராசி நேயர்கள் இன்று சகஜமான அணுகுமுறையை மேற்கொள்வதின் மூலம் நன்மைகளை பெற முடியும். பிறருடன் நட்பாக இருக்கக்கூடிய நிலையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் முடியவில்லை என்ற நிலையை நீங்கள் தகர்த்து எறிய முயற்சி செய்ய வேண்டும். வெட்டியாக புலம்புவதை தவிர்த்து விடுங்கள்.

தொழிலைப் பொறுத்தவரை பதட்டம் காரணமாக பணியில் தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளதால் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். நிதியை பொறுத்தவரை என்று நீங்கள் அதிகளவு சம்பாதிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கிறது.

 எனினும் வீணான செலவு காரணமாக உங்கள் சில உங்கள் சேமிப்பு உயராது. ஆரோக்கியத்தில் அசௌரியங்கள் ஏற்படக்கூடிய நாள் என்பதால் கட்டாயம் தியானம் மற்றும் அமைதியை கடைப்பிடிப்பது நலம் பயக்கும்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களின் மனதிலிருந்து எதிர்மறை எண்ணங்கள் போகாவிடில் வளர்ச்சி  கட்டாயம் பாதிக்கும். மதிப்பு மிக்க பொருளை இழக்க கூடிய சூழ்நிலைகள் இருப்பதால் கவனமாக செயல்படுவது இன்று மிகவும் சிறப்பாக இருக்கும்.

 தொழிலைப் பொறுத்தவரை சக பணியாளர்களிடம் நீங்கள் காட்டக்கூடிய கருத்து வேறுபாடு காரணமாக குறித்த நேரத்தில் எந்த ஒரு வேலையையும் செய்து முடிக்க முடியாது. இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். நிதியை பொறுத்தவரை சில கட்டுப்பாடுகளை உங்களுக்குள் நீங்களே விதித்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு செலவுகள் அதிகரிப்பதால் செலவுகளை கண்காணிக்கவும்.

 உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை செரிமான பிரச்சனை மற்றும் கண் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் இன்று உள்ளது. எனவே கவனம் தேவை.

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று உங்கள் மனதில் குழப்பம் நிலவுவதால் பிரச்சனைகள் மேலோங்கலாம். இன்றைய நாளை அனுபவிக்க கூடிய மனநிலை உங்களிடம் இருக்காது. எதிலும் அமைதி தேவை.

 உங்கள் பணிகளை திறம்பட செயல்படுத்துவீர்கள் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காத காரணத்தால் எதிர்பாராத ஏமாற்றத்தை நீங்கள் அடைவீர்கள். கணிசமான தொகையை நீங்கள் சம்பாதித்தாலும் நிதி நிலைமையில் அதிக செலவுகள் ஏற்படுவதால் நீங்கள் பணத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாது.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை பெரியளவு பிரச்சனைகள் இல்லை என்றாலும் சின்ன சின்ன அசௌகரியங்களை உணர்வதால் கட்டுப்பாடுடன் உணவு பதார்த்தங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam