இன்றைய ராசிபலன் 13 பிப்ரவரி 2023 திங்கட்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : நவகிரகங்களின் ஆதிக்கத்தில் செயல்பட்டு வரும் மனிதர்களின்  கடந்த காலம், நிகழ் காலம், மற்றும் எதிர்காலத்தை அவசியமாக தெரிந்து கொள்வது மிகவும் நல்லது. இதன் மூலம் நவகிரக தாக்கங்களிலிருந்து நாம் நம்மை  பாதுகாத்துக் கொள்ள முடியும். அதற்காக  நவகிரகங்களுக்கு பீரித்தி செய்து அதிகளவு நன்மைகளை பெற முடியும். அந்த நிலையானது ஜோதிட சாஸ்திரத்தில் மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளதால் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய பிறந்த நேரத்தை வைத்து ஜாதகத்தை கணித்து பிறந்த உடனே எழுதிக் கொள்வது மிகவும் நல்லது.

 மேலும் அந்த வரிசையில்  இன்றைய ராசிபலன் 13 பிப்ரவரி 2023 திங்கட்கிழமைக்கான 27 நட்சத்திரங்களுக்கு உரிய ராசிபலன் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

அட்டகாசமான செயல்களில் ஈடுபடக்கூடிய மேஷ ராசி அன்பர்களே, இன்று தியானம் அல்லது பிரார்த்தனை மேற்கொள்வதின் மூலம் இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

 வெற்றி பெறுவதற்கான உறுதி உங்களிடம் அதிக அளவு காணப்படுவதால் முக்கிய முடிவுகளை எடுப்பதின் மூலம் கட்டாய வெற்றி உங்களுக்கு கிடைக்கும்.

 தொழிலைப் பொறுத்தவரை பாராட்டு மழை இன்று உங்களுக்கு மேலதிகாரிகளிடமிருந்து கிடைக்கும். இதன் மூலம் மனதில் உற்சாகம் பிறப்பதால் தொழிலை விரைந்து முடிக்கக்கூடிய ஆற்றலை பெறுவீர்கள்.

 நிதி நிலைமையை பொருத்தவரை இன்று சிறப்பான நாட்களாக நாளாக இருப்பதால் முக்கிய முதலீடுகளில் பணத்தை சேமிக்க கூடிய பழக்கம் ஏற்படுவதோடு சொத்துக்களை வாங்கி நீங்கள் குவிக்கலாம். ஆரோக்கியத்தை பொறுத்தவரை உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. ஆரோக்கியத்தில் எந்த விதமான குழப்பமும் இல்லை.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான நாளாக இருப்பதால் முன்னேற்றகரமான செயல்களில் அதிக அளவு ஈடுபடுவீர்கள். உங்களிடம் தைரியம் மற்றும் உறுதி மேலோங்கி காணப்படுவதால் எதிலும் வெற்றியை பெறுவதற்கான நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள்.

 தொழிலைப் பொறுத்தவரை பணி செய்யும் இடத்தில் அதிக அளவு வளர்ச்சி காணப்படும். நீங்கள் உங்கள் பணிகளை விரைவாகவும் எளிதாகவும் செய்து பலரது பாராட்டுக்களை பெறக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது.

 நிதியை பொறுத்தவரை எந்தவித சுணக்கமும் இன்று இல்லை. சரியான முறையில் நிதி நிலை இருப்பதால் உங்கள் சேமிப்பு உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டிய அவசியம் இல்லை இன்று நல்ல ஆரோக்கியத்துடன் தான் நீங்கள் இருப்பீர்கள்.

மிதுனம்

வெற்றிகளை வாரிக் குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கக்கூடிய மிதுன ராசி நேயர்களுக்கு இன்று பதட்டமும் கவலையும் அதிக அளவு காணப்படுவதால் உங்கள் புத்திசாலித்தனத்தை எதிலும் பயன்படுத்தி அதன் மூலம் செயல்பாடுவது மிகவும் நல்லது. எந்த ஒரு செயலையும் செய்வதற்கு ஒரு முறை அல்ல பலமுறை யோசித்து தான் நீங்கள் செயலாற்ற வேண்டும்.

 தொழிலைப் பொறுத்தவரை பணி இன்று அதிக அளவு உங்களுக்கு இருப்பதால் எதையும் திட்டமிட்டு செய்தால் மட்டுமே அந்த செயல் சிறப்பாக அமையும் என்பதை புரிந்து கொண்டு செயல்படுங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பங்கு சந்தை மூலம் உங்களுக்கு பண வரவு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனினும் எவ்வளவு வரவு வந்தாலும் உங்களால் சேமிக்க முடியாது என்பதை உணர்ந்து தக்கபடி சேமிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள்.

ஆரோக்கியத்தில் சற்று பின்னடைவான நாள் என்று கூறலாம். செரிமான சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் தண்ணீரை அதிகளவு பகல் நேரத்தில் அருந்த பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

கடகம்

அற்புதமான நாளாக இருக்கவேண்டிய இந்த நாள் கடக ராசி நேயர்களுக்கு சற்று இழப்புகள் நேருவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தி தந்திருப்பதால் எதிலும் பொறுமையை கையாள வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட்டால் போதுமானது. நீங்கள் இன்று எந்தவித முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம். அப்படி எடுத்தால் அது உங்களுக்கு சிரமத்தை தான் ஏற்படுத்தும்.

 தொழில் சில சிக்கல்கள் காணப்படுவதால் பணியை முடிக்காமல் நீங்கள் அப்படியே நிலுவையில் வைத்து விடக்கூடிய சூழ்நிலை உள்ளதால் குறித்த நேரத்தில் நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே உங்கள் பணிகளை முடிக்க முடியும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று பொறுப்புக்கள் காரணம் உங்களுக்கு பண அதிக அளவு செலவாகும். தேவையற்ற செலவுகளை செய்ய வேண்டிய இன்று உங்களுக்கு உண்டு ஆரோக்கியத்தை பொறுத்தவரை வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். வாயுத்தொல்லை, வயிறு உப்புசம் இவை கட்டாயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

 எனவே காரசாரமான உணவுகளை தவிர்த்து விட்டு மிதமான ஆகாரங்களை எடுத்து பகல் நேரத்தில் தண்ணீரை அதிக அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று ஓய்வில்லாமல் உழைக்கக்கூடிய நாளாக இருப்பதால் உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைப்பதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் அதிகளவு உள்ளது. எனவே இன்று பயனுள்ள முக்கிய முடிவுகளை எடுத்து உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளலாம்.

 தொழிலைப் பொறுத்தவரை பணி நிமித்தமாக பல இடங்களுக்கு பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலை உருவாகும். இதனால் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

 நிதி நிலைமை சிறப்பாக இருப்பதால் எதிர்காலத்திற்கான பணத்தை சேமிப்பதில் நீங்கள் இன்று மும்மரம் காட்டுவீர்கள். ஆரோக்கியத்தை எந்தவிதமான குழப்பமும் இல்லாததால் இன்று ஆரோக்கியமாக நீங்கள் இருப்பீர்கள்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களது முயற்சிகள் கைகூடிய நாளாக இருப்பதால் எல்லா சூழ்நிலைகளும் உங்களுக்கு இன்று சாதகமாக இருப்பதாலும் நீங்கள் செயல்படுத்த வேண்டிய செயல்களை திட்டமிட்டு செயலாற்றினாலே போதுமானது. முக்கிய முடிவுகளை வேறு நாளுக்கு தள்ளி போடுங்கள்.

 தொழிலைப் பொறுத்தவரை இன்று பணி சுமை கூடுதலாக இருப்பதால் தவறுகள் நேர அதிக வாய்ப்புள்ளது. எனவே எச்சரிக்கையுடன் எதிலும் செயல்படுங்கள்.பண வரவு இன்று குறைந்து காணப்படுவதால் செலவுகளை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. இல்லையெனில் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலையை இன்றைய நாள் உங்களுக்கு ஏற்படுத்தித் தரும்.

 உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்த போதிலும் கண்கள் பற்றிய அக்கறை உங்களுக்கு தேவை கண்களுக்கு போதிய கவனத்தையும் சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டிய நாளாக இந்த நாள் உள்ளது .

துலாம்

 துலாம் ராசி நேயர்கள் இன்று சில ஏமாற்றங்களை சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளதால் உங்களுக்கு வருத்தம் அதிக அளவு ஏற்படும். அடுத்தவர் தரும் வாக்குறுதியை நம்பி எதிலும் இறங்க வேண்டாம். உங்கள் கடின உழைப்பை மற்றும் நம்பி செயலாற்றினால் மட்டும்தான் நீங்கள் வெற்றியடைய முடியும்.

 தொழிலைப் பொறுத்தவரை என்று பணி சூழல் மகிழ்ச்சிகரமாக அமையவில்லை. எனவே சக பணியாளர்களிடம் அனுசரித்துப் போவது அவசியம் தேவை. நிதிநிலைமையை பொறுத்த வரை பண வரவுகள் பல பக்கம் இருந்து வந்து சேர்ந்தாலும் செலவுகள் அதுபோல உங்களுக்கு அதிகம் ஏற்படும் எனவே பணத்தை சேமிப்பது இன்று கடினம் திட்டமிட்டு செலவு செய்தால் வரும் பணத்தை மிச்சம் செய்வதற்காக சூழ்நிலைகள் ஏற்படலாம்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை உழைப்பு காரணமாக கால்களில் வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. முறையான உடற்பயிற்சியை இன்று செய்யவும் மன அமைதிக்காக தியானத்தில் ஈடுபடுவது சிறப்பான நிலையைத் தரும்.

விருச்சிகம்

தொட்டதெல்லாம் துலங்கிவிடும் என்ற நிலையில் இருக்கும் விருச்சிக ராசி அன்பர்களே இன்று ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு நல்ல பலனை தரும் எனவே பிரார்த்தனை மற்றும் இறை வழிபாடுகளை மேற்கொள்ளக்கூடிய நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.

 தொழிலை  பொறுத்த வரை குறித்த நேரத்தில் உங்களால் அந்தப் பணியை முடிக்க இயலாது பணிகளில் தவறுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதால் கவனமாக நீங்கள் பணிபுரிவது அவசியம் ஆகிறது. நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று சிறப்பான நாள் என்று கூற முடியாது.

 உங்கள் செலவுகளில் கூடுதல் செலவு ஏற்படும் ஆரோக்கியத்தை பொருத்தவரை பரபரப்பாக நீங்கள் இருப்பதால் தலைவலி, கால்வலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் யோகா மூலம் இவற்றை நீங்கள் நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.

தனுசு

 உற்சாகத்தை அதிக அளவு விரும்பக்கூடிய தனுசு ராசி அன்பர்களே இன்று உறுதியான நற்பலன்கள் உங்களுக்கு வந்து சேரும் எனவே உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நாளாக இந்த நாள் திகழ்கிறது. தொழிலைப் பொறுத்தவரை நல்ல வளர்ச்சி இருக்கும் சக பணியாளர்கள் அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் தொழிலில் சுனக்கம் ஏற்படாது.

 நிதிநிலைமையை பொறுத்தவரை பூர்வீக சொத்துக்கள் வகையில் இன்று வரவு அதிக அளவு ஏற்படுவதால் உங்கள் சேமிப்பு உயர்வதற்கான வாய்ப்புகள் அதிக அளவு உள்ளது. படு பக்காவான ஆரோக்கியம் என்று உங்களுக்கு விளங்குவதால் நீங்கள் ஆற்றலுடன் இருப்பீர்கள்.

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று தடைகளையும் சங்கடங்களையும் நீங்கள் சற்று சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். எந்த முயற்சி எடுத்தாலும் அது தாமதமாகத்தான் வெற்றி வரும.  எனவே மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்.

 தொழிலைப் பொறுத்தவரை பணிசுமை உங்களுக்கு அதிகமாக இருக்கும் பணி புரியக்கூடிய இடத்தில் உங்களுக்கு போதுமான அளவு ஆதரவு இல்லாத காரணத்தால் பணிகளை உங்களால் குறித்த நேரத்தில் முடிப்பது தாமதம் ஏற்படும்.

நிதி நிலமையை பொறுத்தவரை பணவரவு சற்று குறைந்து இருப்பதால் பண இழப்புக்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே கவனமாக செலவுகளை செய்யுங்கள் ஆரோக்கியத்தை பொறுத்தவரை மனதில் குழப்பமான எண்ணங்கள் நிலவுவதால் தலைவலி ஏற்படுவதற்கான சூழல் சூழ்நிலை உள்ளது. எனவே இறை வழிபாட்டில் உங்களது கவனத்தை செலுத்துவது நல்லது.

கும்பம்

குடத்தில் இட்ட விளக்காய் ஜொலிக்கும் கும்ப ராசி அன்பர்கள் இன்று செயல்களை மேற்கொள்ளும்போது தடைகள் அதிகளவு ஏற்படும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்துத்தான் ஒவ்வொரு செயலையும் நீங்கள் செய்ய வேண்டும். தகவல் பரிமாற்றத்தில் குறைபாடு உள்ள நாடாக இந்த நாள் உங்களுக்கு விளங்கும்.

 தொழிலைப் பொறுத்தவரை மந்தமான சூழ்நிலை உள்ளதால் நீங்கள் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். உங்களுக்குள் ஈகோ தலை தூக்கக் கூடிய நாளாக இன்றைய நாள் இருப்பதால் பணிபுரியும் இடத்தில் சற்று ஜாக்கிரதையாக பணியாற்ற வேண்டும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று சாதகமான நாடாக இல்லை. தேவையற்ற செலவுகள் ஏற்படுவதால் உங்களுக்கு கவலை ஏற்படும். ஆரோக்கியத்தை பொருத்தவரை கண் பாதுகாப்பு மிகவும் அவசியம் ஏனெனில் கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

மீனம்

தொட்டதெல்லாம் துலங்க கூடிய மீன ராசி நேயர்கள் இன்று மனதில் குழப்பம் அதிகளவு நிலவுவதால் பாதுகாப்பற்ற உணர்வு உங்களுக்குள் ஏற்படும் எனவே முக்கிய முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்ப்பது மிகவும் நல்லது. தொழிலைப் பொறுத்தவரை இன்று பணிகளை மேற்கொள்வதில் சற்று தாமதம் ஏற்படலாம்.

 இது உங்களுக்கு வருத்தத்தை தரும் உங்கள் பணிகளை திறமையாக ஆற்றல் நீங்கள் திட்டமிடல் மிகவும் அவசியமான ஒன்று. நிதி நிலைமையை பொருத்தவரை இன்று அவ்வளவு சிறப்பான நாள் இல்லை.

கூடுதல் செலவுகள் ஏற்படுவதால் சற்று கவனத்தோடு செயல்படுங்கள் உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றிய கவலை உங்களுக்கு ஏற்படும். அவர்களின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படலாம். எனவே பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள் உங்களது ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version