இன்றைய ராசிபலன் 14 பிப்ரவரி 2023 செவ்வாய் கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 14 பிப்ரவரி   2023 செவ்வாய் கிழமைக்கான 27 நட்சத்திரங்களுக்கு உரிய ராசிபலன் பார்க்கலாம். மனித வாழ்க்கையை எதுவுமே நிரந்தரம் இல்லை. எனினும் குடும்ப வாழ்க்கையில் எண்ணற்ற சிக்கல்கள் ஏற்படும் போது மன தைரியத்தோடு அதை எதிர்கொண்டு எதிர்நீச்சல் போடுவது அவசியம் ஆகிறது.

குடும்பத்தில் ஏற்படும் சங்கடங்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள சில பரிகாரங்கள் உள்ளது. இந்த பரிகாரங்களை அவரவர் ஜோதிடத்தை கணித்த பின்பு அதில் இருக்கும் கூறுகளின் நிலையை அறிந்து கொண்டு அதற்கு தக்கபடி பரிகாரங்கள் செய்வதின் மூலம் நம்மை நாம் தற்காத்துக் கொள்ள முடியும் அதற்கு ஜாதகம் மற்றும் ஜோதிடம் பெரும் துணையாக உள்ளது.

மேலும் அந்த வரிசையில்  இன்றைய ராசிபலன் 14 பிப்ரவரி   2023 செவ்வாய் கிழமைக்கான 27 நட்சத்திரங்களுக்கு உரிய ராசிபலன் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மிகவும் சிறப்பான நாளாக இந்த நாள் மேஷ ராசி நேயர்களுக்கு அமைந்துள்ளதால் மனதில் நேர்மறை எண்ணங்கள் தோன்றும். இதனால் அதிக அளவு இன்று நன்மைகளை அடைவீர்கள். தொழிலைப் பொறுத்தவரை இன்று பரபரப்பான சூழ்நிலை உங்களுக்கு நிலவும் உங்கள் பணி இடத்தில் குறித்த நேரத்தில் உங்கள் பணிகளை முடிப்பதின் மூலம் உங்களுக்கு பாராட்டுக்கள் குவியும்.

 சக பணியாளர்களிடமிருந்து அதிக அளவு ஆதரவு உங்களுக்கு இன்று கிடைக்கும். நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று பணவரவு அதிகளவு காணப்படுவதால் பூர்வீக சொத்து வகையில் எதிர்பாராத பண வரவும் வந்து சேர்வதால் நீங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பீர்கள்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை  சுணக்கமான நாள் இல்லை. மிக சிறப்பாக உங்கள் ஆரோக்கியம் உள்ளது.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களுக்கு இன்று நன்மையும் தீமையும் கலந்து பலன் பெறக்கூடிய நாளாக இருப்பதால் இதை ஒரு சமநோக்கு நாள் என கூறலாம். புதிய நண்பர்கள் மற்றும் புதிய தொடர்புகள் உங்களுக்கு ஏற்படும் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாகவே இன்று இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

 தொழிலைப் பொறுத்தவரை உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கட்டாயம் கிடைக்கும். பணிகளை படு திறமையாக விரைவாக செயல்படுத்தி விடுவீர்கள். கொடுக்கின்ற பணிகளை எளிதாக செய்து முடிப்பதால் உங்களுடைய தன்னம்பிக்கை மேலோங்கி இருக்கும்.

நிதி நிலைமையை பொருத்தவரை அதிக அளவு பணவரவு இன்று உள்ளது. மேலும் இந்த பண வரவு காரணமாக உங்கள் வங்கி கணக்குகளில் உள்ள பண அளவு உயரும். இன்று ஆரோக்கியத்தில் படு சிறப்பான நாள் என்பதால் உங்கள் ஆரோக்கியம் மேம்பட்டு வலிமையுடனும் ஆற்றலுடனும் இருப்பீர்கள்.

மிதுனம்

அதிர்ஷ்டமான நாளாக இன்று மிதுன ராசி நேயர்களுக்கு இருப்பதால் எதிர்பாராத தடைகளை கூட நீங்கள் உடைத்து சமாளிக்கக்கூடிய திறன் பெற்று இருப்பீர்கள். எதையும் எளிதில் சமாளிக்க கூடிய ஆற்றல் உங்களுக்கு ஏற்படும்.

 இன்று எல்லாமே உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தொழிலைப் பொறுத்தவரை உங்கள் ஆற்றல் அதிக அளவு உள்ளதால் குறித்த நேரத்தில் பணிகளை படு சிறப்பாக செய்து முடிப்பதால் உங்களுக்கு மேல் அதிகாரிகளின் பாராட்டு கட்டாயம் கிட்டும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை அதிகளவு பணம் சம்பாதிப்பாதற்கான  திறன் உங்களிடம் உள்ளது. அந்த திறனை பயன்படுத்தி ஆக்கபூர்வமான விஷயங்களின் மூலம் நீங்கள் பணத்தை எளிதில் சம்பாதிக்கலாம்.

 குறிப்பிட்ட விஷயங்களுக்கு பணத்தை செலவு செய்து மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தை பொருத்தவரை மிகவும் நன்றாக இருப்பதால் எந்த விதமான குழப்பமும் இல்லை. உற்சாகமாக உங்கள் ஆரோக்கியத்தை பராமரித்து சிறப்பாக இருப்பீர்கள்.

கடகம்

கடக ராசி அன்பர்களே இன்று தடைகளை எல்லாம் தகர்த்து முன்னேற்றத்தில் முழு முயற்சியோடு ஈடுபடக்கூடிய நீங்கள் இது வரை நம்பிக் கொண்டிருந்த ஒன்றில் வாய்ப்பை பெற முடியாமல் தவிப்பீர்கள். எனவே அதிர்ஷ்டம் இன்று உங்களுக்கு சாதகமாக இல்லை என்று தான் கூற வேண்டும்.

 இதனால் உங்களுக்கு கவலை ஏற்படும். தொழிலை பொறுத்தவரை பணிகளில் அதிக அளவு தவறு நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் எதிலும் சற்று கவனத்தோடு பணியாற்றுவது அவசியம்.

உங்களுக்கு ஓய்வே இல்லாத நாள் என்று சொல்லலாம். அவ்வாறு ஓய்வின்றி தான் நீங்கள் பணிகளை செய்ய முடியும் நிதி நிலைமையை பொறுத்தவரை அதிகளவு பணம் செலவாக கூடிய நாள்.

 எனவே நிதியை கையாளும் போது சற்று கடினமாக இருக்கும் எதையும் யோசித்து செய்வது மிகவும் நல்லது. ஆரோக்கியம் இன்று அந்த அளவுக்கு திருப்திகரமாக இல்லை சளி, இருமல் பாதிப்புகள் ஏற்பட உள்ளதால் சற்று கவனத்தோடு இருங்கள் .

சிம்மம்

ஓய்வு இல்லாமல் இன்று உழைக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் அதிக அளவு சிம்ம ராசி நேயர்களுக்கு இருப்பதால் கடுமையான முயற்சிகளில் மட்டுமே நீங்கள் வெற்றி அடைய முடியும்.

 எனவே பயனுள்ள முடிவுகளை நீங்கள் எடுக்கலாம்.அதன் மூலம் உங்களுக்கு நன்மை கிடைக்கும் பணி நிமித்தமாக நீங்கள் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். புதிய வாய்ப்புகள் இதன் மூலம் உங்களுக்கு உருவாகும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை சிறப்பாக இருப்பதால் எதிர்காலத்திற்கான பணத்தை நீங்கள் இன்று சேர்ப்பைப்பதற்கான திட்டங்களை தீட்டுவீர்கள். ஆரோக்கியம் அற்புதமாக இருப்பதால் அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.

கன்னி

கன்னி ராசி நேயர்களுக்கு இன்று எதிலும் சாதகமான சூழ்நிலை நிலவுவதால் வெற்று மேல் வெற்றி வந்து சேரும். உங்கள் காரியங்களை திட்டமிட்டு செயலாற்றுவதின் மூலம் நன்மைகள் அடையலாம். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.முடிவுகளை தள்ளி வைக்க வேண்டும்.

 தொழிலைப் பொறுத்தவரை பணி சுமை அதிகமாக இருப்பதால் தவறுகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உள்ளது. எனவும் மிகுந்த எச்சரிக்கையுடன் நீங்கள் செயல்படவும். பண வரவு சற்று குறைந்து காணப்படுவதால் தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

ஆரோக்கியத்தை பொருத்தவரை ஆரோக்கியம் சிறப்பாக இருந்தாலும் உங்கள் கண்களில் கோளாறு ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அதிக கவனம் தேவை. கண்களில் ஏதேனும் பாதிப்பு உங்களால் உணரப்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு ஏமாற்றங்கள் ஏற்படக்கூடிய நாளாக இருப்பதால் வருத்தத்தில் இன்று இருப்பீர்கள். அடுத்தவருக்கு தரக்கூடிய வாக்குறுதியை உங்களால் நிறைவேற்ற முடியாது. அது போலவே அடுத்தவர் உங்களுக்கு தருகின்ற வாக்குறுதியும் சரியாக இருக்காது.

 எனவே உங்கள் உழைப்பை பற்றி உழைப்பை மட்டும் நம்பி செயலாற்றுங்கள் வெற்றி நிச்சயம் கிட்டும். பணியை பொறுத்தவரை இன்று சகஜமான சூழ்நிலை இல்லை. சகப்பணியாளர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்காது.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணவரவுகள் அதிகளவு காணப்பட்டாலும் அதற்கு ஏற்ப செலவுகள் வந்து நிற்பதால் சமாளிப்பது சற்று கடினம். எனவே உங்கள் பணத்தை சேமிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை உழைப்பு காரணமாக கால் கைகளில் வலிகள் வந்து செல்லலாம். முறையான உடற்பயிற்சி தியானம் கட்டாயம் தேவை.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே இன்று ஆன்மீகத்தில் உங்கள் மணம் லயிப்பதின் மூலம் என்னற்ற நன்மைகளை அடையலாம். பிரார்த்தனைகள் வழிபாடுகள் உங்களுக்கு ஏற்றத்தை தருவதால் இறைவழிபாடுகளை மேற்கொள்வது சிறந்தது. உங்கள் பணி குறித்த நேரத்தில் முடிக்க முடியாத சூழ்நிலைகள் நிலவுவதால் தவறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

 எனவே தொழிலை பொறுத்தவரை சற்று கவனம் தேவை. நிதி நிலைமையும் சிறப்பாக இல்லாத காரணத்தால் கூடுதல் செலவுகளை நீங்கள் சந்திக்கலாம்.  எனவே கவனமாக இருக்கவும் பரபரப்பான பணி காரணமாக உங்களுக்கு ஆரோக்கியம் சற்று சுனக்கம் ஆக இருக்கும்.

 தலைவலி கை கால் வலி போன்றவை ஏற்படுவதால் யோகா செய்வதை மறக்க வேண்டாம் யோகா செய்வதின் மூலம் உங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே இன்று உறுதியான நல்ல பலன்கள் உங்களுக்கு அதிக அளவு கிடைக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேற கூடிய நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. தொழிலைப் பொறுத்தவரை பணியில் நல்ல வளர்ச்சி இருக்கும்.

 சக பணியாளர்களின் ஆதரவு உங்களுக்கு கிட்டும் நிதி நிலையை பொறுத்த வரை உங்களுக்கு சற்று வரவு அதிகமாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வந்து சேரும். உங்களின் சேமிப்புகள் பல மடங்காக உயர்வதற்கான சூழ்நிலைகள் உள்ளது.

 ஆரோக்கியமும் ஆற்றலுடன் இருப்பதால் எந்த விதமான பிரச்சினையும் உங்கள் உடலுக்கு இன்று ஏற்படாது.

மகரம்

தங்கு தடைகளை உடைத்தெறிந்து கஷ்டங்களை சமாளிக்க கூடிய நாளாக இன்றைய நாள் மகர ராசி நேயர்களுக்கு இருந்தாலும் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் மூலம் அடுக்கடுக்கான வெற்றிகளை நீங்கள் குவிக்கலாம். பனிச்சுமை அதிகமாக இருக்கும் பணிபுரியக்கூடிய இடங்களில் நீங்கள் குறித்த நேரத்தில் எதையும் முடிக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருங்கள்.

 தொழில் ஸ்தானம் இன்று சற்று சுமார் என்பதை உணர்ந்து செயல்படுங்கள் நிதி நிலைமை பொறுத்த வரை பண வரவு சற்று குறைந்து இருப்பதால் பண இழப்புக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும்.

 பணத்தினை கையாளும்போது கவனம் உங்களுக்கு தேவை ஆரோக்கியத்தை பொறுத்தவரை தேவையற்ற எண்ணங்கள் உங்கள் மனதில் ஏற்படுவதால் மனக்குழப்பம் ஏற்படுவதோடு மட்டுமின்றி தலைவலி போன்ற சின்ன சின்ன பாதிப்புகள் உங்களுக்கு ஏற்படும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே உங்கள் செயல்களை பக்குவமாக மேற்கொண்டாலும் இன்று தடைகள் அதிக அளவு உங்களுக்கு ஏற்படுவதால் ஒரு முடிவை செயலாற்றுவதற்கு முன்பு பலமுறை யோசிக்க வேண்டும். இப்படி செய்தால் எந்த விதமான தீமைகளும் உங்களுக்கு ஏற்படாது.

 பணியில் சற்று சுழக்கமான சூழ்நிலை இருப்பதால் தன் அடக்கத்தோடு நாவடக்கத்தையும் கையாளுவது அவசியம் இல்லை என்றால் சின்ன சின்ன பிரச்சனைகள் உருவாகும். அதை சமாளிப்பது கடினம்.

 நிதி நிலைமையும் சாதகமாக இல்லாத காரணத்தால் பணவரவு குறைவாக இருக்கும். தேவையற்ற வீண் செலவுகளில் ஈடுபடுவீர்கள்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை கண் பகுதிகளில் பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை இருப்பதால் அவசியம் ஒரு முறை கண் மருத்துவரை சென்று பாருங்கள்.

மீனம்

மீன ராசி நேயர்களே உங்கள் மனதில் குழப்பம் ஏற்படுவதின் காரணமாக பலவிதமான தடங்கல்களையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதால் இன்று எந்த விதமான முடிவுகளையும் எடுக்காமல் நீங்கள் தள்ளிப் போடுவது மிகவும் சிறப்பாக இருக்கும்.

 தொழிலை பொறுத்தவரை நீங்கள் மேற்கொள்ளும் தொழில்களில் தாமதம் ஏற்படக்கூடிய நிலை இருப்பதால் பணிகளை நீங்கள் திறமையாக நிறைவேற்ற திட்டமிடுதல் அவசியம் ஆகும். நிதி நிலைமையும் சங்கடத்தில் இருப்பதால் போதிய பண வரவு இருக்காது.

 கூடுதல் செலவுகள் ஆவதற்கான சூழ்நிலைகள் உள்ளது. எனவே பணத்தை செலவு செய்வதில் சற்று கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை சற்று சுணக்கமான நாள் என்பதால் அதற்காக பண செலவு செய்ய வேண்டிய நாளாக இந்த நாள் இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam