இன்றைய ராசிபலன் 15 பிப்ரவரி 2023 புதன் கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 15 பிப்ரவரி 2023 புதன் கிழமை. எதையும் திட்டமிட்டு செய்வதின் மூலம் வெற்றி காண முடியும். எதிர்காலத்தை மனதில் கருத்தில் கொண்டு  நாம் செய்யக்கூடிய காரியங்கள் சிறப்பாக அமைவதற்கு பிள்ளையாரை வழிபட்டு எந்த ஒரு காரியத்தையும் துவங்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் நமது ஜனன ஜாதக கட்டத்தின் படி ஒவ்வொரு மனிதருக்கும் நவகிரகங்களின் தாக்கம் மற்றும் சுப, அசுப பலன்கள் ஏற்படும். எனவே அதற்கு தக்கவாறு நாம் அதற்குரிய பரிகாரங்களை செய்து திட்டமிடுதல் மூலம் வருகின்ற ஆபத்தை தடுத்துக் கொள்ளவும் போதிய நற்பலன்களைத் பெறவும் முடியும்.அந்த வரிசையில் இன்று 27 நட்சத்திரங்களுக்கு உரிய ராசிபலன் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி நேயர்களே இன்று மனதில் நீங்கள் சற்று திடமான சிந்தனைகளை கொண்டிருந்தால் மட்டும் தான் உங்கள் பணிகளை கையாளும்போது தங்கு தடைகள் ஏற்பட்டாலும் அதை தகர்த்து எறிந்து முன்னேற முடியும்.

 முக்கியமான முடிவுகளை இன்று கட்டாயம் நீங்கள் எடுக்க வேண்டாம். அப்படி எடுத்தால் அது தவறாகத்தான் முடியும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நேர்மறையான அணுகு முறையை எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பு நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளுதல் நலம் பயக்கும்.

 பணிநிலையை பொறுத்தவரை இன்று பணிசுமை அதிகமாக உங்களுக்கு காணப்படுகிறது. இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக தொழிலில் இருப்பதால் திட்டமிட்டு செய்வதின் மூலம் தொழில் ஸ்தானத்தை அபிவிருத்தி செய்து கொள்ளலாம்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை சற்று சுணக்கமான நாளாக இருப்பதால் தேவையற்ற செலவுகள் வந்து சேரும். எனவே எதிலும் கருத்தோடு உங்கள் பணத்தை செலவு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.

 ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்படும் குறிப்பாக செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படலாம். முதுகு வலி ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே ஆரோக்கியத்தில் அதிகமாக அக்கறையை காட்ட வேண்டிய நாளாக இந்த நாள் உள்ளது.

ரிஷபம்

 மிக அற்புதமான நாளாக இந்த நாள் ரிஷப ராசி நேயர்களுக்கு இருப்பதால் எல்லா நிகழ்வுகளும் சீராக நடக்குமா என்பதில் எந்த ஐயமும் வேண்டாம். நண்பர்கள் பலரும் இன்று உங்கள் மீது அதிக நம்பிக்கையுடன் இருப்பார்கள். மகிழ்ச்சி நிறைந்து காணப்படும் நாளாக இந்த நாள் உங்களுக்கு விளங்குகிறது.

 பணியிடத்தில் சில இனிமையான ஆச்சரியங்களை நீங்கள் சந்திக்க நேரிடும். உங்கள் பணிகளை உற்சாகத்தோடு செயல்படுத்தக்கூடிய நாளாக இருப்பதால் உங்கள் செயல் மற்றும் தொழில் அபிவிருத்தி ஆகும்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை பணவரவு திருப்திகரமாக இருக்கும் எதையும் நல்ல வழியில் நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சேமிப்பு உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியம் உற்சாகமாக இருக்கக்கூடிய நிலையில் இருப்பதால் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் இன்று கவலை கொள்ள வேண்டாம்.

மிதுனம்

வெற்றி மீது வெற்றி வந்து சேரும் என்ற பாடலுக்கு ஏற்ப இருக்கக்கூடிய மிதுன ராசி நேயர்களே இன்று கடின முயற்சிகளின் மூலம் நீங்கள் அருமையான வெற்றிகளை பெற முடியும். தன்னம்பிக்கை அதிகரித்து இன்று காணப்படுவதால் முக்கிய முடிவுகளை நீங்கள் எடுத்தால் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

 தொழிலைப் பொறுத்தவரை உங்களின் நேர்மைக்கு நல்ல மதிப்பு இருக்கும் மன உறுதி காரணமாக பணியிடத்தில் நல்ல மதிப்பு உயர்ந்துவிடும். பணிகளைக் குறித்த நேரத்தில் முடித்து அதிகாரிகளிடம் நீங்கள் பாராட்டுகளை பெறுவீர்கள். நிதிநிலைமையை பொறுத்தவரை இன்று கடன்கள் மூலம் பணவரவு அதிகரித்து காணப்படும்.

 இதனைக் கொண்டு உங்கள் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்து கொள்ளலாம். பணத்தை தக்க வழியில் சேமிக்க இன்று திட்டமிடுதல் நல்லது. ஆரோக்கியம் மகிழ்ச்சிகரமாக இருப்பதால் உங்கள் மனநிலையும் ஆரோக்கியமாக உற்சாகமாக இருக்கும். எனவே ஆரோக்கியத்தை பற்றி இன்று நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.

கடகம்

 கடக ராசி நேயர்களே இன்று உங்களுக்கு சுமாராக நாளாக இருப்பதால் உங்களுக்கு கிடைக்கக்கூடிய பலன்களும் அதுபோலவே இருக்கும். எனவே உங்கள் செயல்களை மேற்கொள்ளும் போது சின்ன சின்ன சவால்களை சந்திக்க நேரிடும்.

 எனினும் நீங்கள் அவற்றை மிகச்சிறிய முறையில் மன தைரியத்துடன் சந்திப்பதின் மூலம் எதையும் எளிதாக செய்து முடிக்கலாம். இன்று சௌரியங்கள் குறைந்து காணப்படும் நாள் என்பதால்  எதிலும் கவனத்தோடு செயல்படுவது மிகவும் நல்லது.

 தொழிலை பொறுத்தவரை பணியில் தவறுகள் நேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் பணி இடத்தில் பணியை செய்யும் போது அதீத கவனத்துடன் பணியாற்றுங்கள். நிதி நிலைமையை பொறுத்தவரை வீட்டுக்கு பண செலவு அதிக அளவு செய்ய நேரிடும் நெறியில் சிறத்தன்மையை பராமரிக்க தேவையற்ற செலவுகளை நீங்கள் தவிப்பது அவசியம் என்பதை புரிந்து கொண்டு செயல்படவும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை தாயாரின் உடல் நலத்திற்கு அதிக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும். உங்களுக்கு வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

சிம்மம்

 நினைத்ததை முடிக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய சிம்ம ராசி நேயர்களே இன்று உங்களுக்கு பயணம் அதிகமாக ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. இந்த பயணத்தின் காரணமாக உங்களுக்கு பலன்கள் தாமதமாகவே கிடைக்கும். எனவே திட்டமிட்டு செயலாற்றுவது மிகவும் சிறப்பாக இருக்கும்.

 பணியை பொருத்தவரை அதிக பணிச்சுமை இருக்கும் பணிகளை திட்டமிட்டால் மட்டுமே ஒழுங்காக செய்ய முடியும். இல்லையென்றால் உங்கள் பணிகளில் சுணக்க நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

 நிதி நிலைமையை பொறுத்தவரை திருப்திகரமான நாள் என்று சொல்ல முடியாது. அதிக செலவுகள் ஏற்படும் எனவே நிதியை கையாளும்போது ஜாக்கிரதையாக கையாள வேண்டும். மேலும் பண பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

 இன்று ஆரோக்கியத்தில் உங்களுக்கு முதுகு சம்பந்தப்பட்ட இடங்களில் வலிகள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதால் உணவு விஷயத்தில் அக்கறை காட்டுங்கள். உடற்பயிற்சி தினமும் மேற்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

கன்னி

 வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்  என்ற பாடலை பாடக்கூடிய நிலையில் இன்று உங்களுக்கு வெற்றிகள் உங்கள் காலடியில் வந்து சேரக்கூடிய நாளாக இருப்பதால் நீங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கலாம்.

 பழகுவதற்கு இனிமையான சுபாவம் கொண்ட உங்களுக்கு நல்ல ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டிய எண்ணம் ஏற்பட வேண்டு.ம் எதிலும் உறுதியாகவும் நம்பிக்கையுடனும் இருந்து பல வெற்றிகளை குவிக்க கூடிய நாளாக இந்த நாள் விளங்குகிறது. தொழிலைப் பொறுத்தவரை பணியிடங்களில் நீங்கள் சவால்களை சந்தித்து வெற்றிகளை பெறுவீர்கள்.

 அனைவரையும் அனுசரித்துப் போகக் கூடிய அணுகுமுறை உங்களுக்கு பல மடங்கு ஆற்றலையும் வெற்றியையும் உங்களுக்குத் தேடித் தரும். உச்சத்தில் இன்று பணியில் திகழ்வீர்கள். நிதி நிலைமையை பொறுத்தவரை உங்களிடம் இருக்கும் பணம் போதுமானதாக இருக்கும்.

 மேலும் பணத்தை பயனுள்ள வகையில் சேமிப்பதற்கு முயற்சி செய்வீர்கள். உங்களின் மன உறுதி காரணமாக ஆரோக்கியம் இன்று நல்ல முறையில் இருக்கும். அதில் எந்தவிதமான சுணக்கமும் இல்லை என்பதால் ஆரோக்கியத்தில் அதிக அளவு அக்கறை காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

துலாம்

 துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று பொறுப்புக்கள் அதிகமாக இருப்பதால் அவற்றை சரியான வகையில் திட்டமிட்டு நீங்கள் செயல்படுத்துவதில் உறுதியை காட்டுங்கள். உணர்ச்சிவசப்படுதலை தவிர்ப்பதின் மூலம் நீங்கள் வெற்றி அடைய முடியும்.

 தொழிலைப் பொறுத்தவரை இன்று தொழில் விஷயமாக நீங்கள் பயணங்கள் மேற்கொள்ள கூடிய சூழ்நிலைகள் உள்ளது. ஆனால் அந்த பயணம் உங்களுக்கு திருப்தியை அளிக்காது. எனவே முடிந்தவரை பயணத்தை தள்ளிப் போடவோ தவிர்க்கவோ முயற்சி செய்வதே இன்று மிகவும் நல்லது.

நிதி நிலைமையை பொருத்தவரை பண வரவு குறைவாகவே காணப்படுவதால் பணத்தை இன்று சேமிப்பதற்கான வாய்ப்பே இல்லை. திட்டமிட்டு பண செலவை செய்வது அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை முதுகு வலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய விஷயங்களில் ஈடுபடுவதின் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் உற்சாகமாக வைத்துக்கொள்ள முடியும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் ஒரு சமநோக்கு நாளாக இருப்பதால் பயணத்தின் போது மட்டுமல்ல எந்த ஒரு செயலையும் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும் உங்கள் மனநிலையை மேம்படுத்திக்கொள்ள இசையை கேட்கலாம். அது உங்களுக்கு ஆதரவை தரும் தொழிலைப் பொறுத்தவரை பணியில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். இல்லை என்றால் திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

 இதன் மூலமே உங்கள் பணிகளை சீரிய முறையில் முடிக்க முடியும் நிதிநிலைமையை பொறுத்த வரை பண வரவும் இருக்கும் அதே அளவுக்கு செலவும் இருக்கு.ம் எனவே தேவையற்ற செலவுகளை தவிர்க்க நீங்கள் முயற்சி செய்வது அவசியம்.

 ஆரோக்கியம் என்று சற்று சுணக்கமாக இருப்பதால் நீங்கள் வீணாக கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.  கவலையின் காரணமாக உங்களுக்கு தூக்கம் இன்மை ஏற்படும். எப்போதும் இறை வழிபாட்டில் உங்கள் மனதை செலுத்துங்கள் யோகா மற்றும் தியானம் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.

தனுசு

தனுசு ராசி நேயர்களே நீங்கள் இன்று மற்றவர்களுடன் பழகும் போது சற்று எச்சரிக்கையோடு இருப்பது மிகவும் அவசியமானது. உங்கள் பிரியமானவர்களோடு பேசும்போதும் அதே கவனம் உங்களுக்கு அவசியம் தேவை. இன்று எடுக்கின்ற எந்த முடிவுகளும் சிறந்த பையனை உங்களுக்கு அளிக்கப் போவதில்லை. எனவே முடிவுகளை எடுப்பதை தள்ளிப் போடுங்கள்.

 தொழிலைப் பொறுத்தவரை பணிச்சுமை அதிகமாக காணப்படுவதால் நீங்கள் செய்யும் பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதை உணர்ந்து குறித்த நேரத்தில் உங்கள் வேலையை முடிக்க பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை அதிகளவு பணப்புழக்கம் உள்ள நாள் என்பதால் உங்கள் கையில் பணம் தாராளமாக புழங்கும். எனினும் இதை நீங்கள் சரியான வழியில் பயன்படுத்தாவிட்டால் உங்கள் பண நஷ்டம் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

 தனுசு ராசி நேயர்களுக்கு இன்று சளி சம்பந்தப்பட்ட சுவாச பிரச்சனைகள் இருப்பதால் ஃப்ரிட்ஜில் வைத்திருக்கும் குளிர்ந்த உணவுகளை சாப்பிடுவதை நீங்கள் தவிர்த்து விடுதல் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

மகரம்

 மகர ராசி நேயர்களுக்கு இன்று அட்டகாசமான அற்புதமான நாளாக இருப்பதால் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் சிறிது என்றாலும் அதன் பலன் உங்களுக்கு பெரிதாக வந்து சேரும். சாதகமான பலன்களை அள்ளித் தரக்கூடிய நாளாக இன்று இருப்பதால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் இருந்து உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும்.

 தொழிலைப் பொறுத்தவரை புதிய தொழில் வாய்ப்புகள் வந்து சேரும். அந்த வாய்ப்புகளை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுதல் மூலம் நல்ல வளர்ச்சியை பெற முடியும். வாழ்க்கையில் வரக்கூடிய இந்த வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 நிதி நிலைமையை பொருத்தவரை வளர்ச்சிகரமான நாள் என்று சொல்லலாம். உங்கள் சேமிப்பு உயரும் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் எந்த குறையும் இல்லாததால் என்று ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் எனவே வேண்டாம். மிக அற்புதமாக உள்ளது உங்கள் நம்பிக்கை உணர்வை நீங்கள் எப்போதும் கைவிடாமல் இருந்தால் ஆரோக்கியத்தில் எப்போதும் குறையும் ஏற்படாது.

கும்பம்

 ஆற்றல் நிறைந்த கும்ப ராசி நேயர்களே இன்று பயணங்கள் ஏற்படுவதற்கு உரிய நாளாக உள்ளது. ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு ஆதரவுகளை அளிக்கும் என்பதால் ஆன்மீகத்தில் உங்கள் மனதை செலுத்துவது மிகவும் அவசியம்.

 தொழிலை பொறுத்தவரை பணியிடத்தில் நல்ல செயல் திறனுடன் பணியாற்றக்கூடிய தன்மை இன்று உங்களுக்கு உள்ளது. உங்கள் திறமையை பார்த்து மேலதிகாரிகளின் பாராட்டுகளை நீங்கள் கட்டாயமாக பெறுவீர்கள்.

 பணப்புழக்கம் இன்று அதிகமாக இருக்கும் நாள் என்பதால் எதிர்கால நலன் கருதி முதலீடுகளை நீங்கள் அதிகமாக செய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.

 உற்சாகமாக இருக்கும் உங்களின் ஆரோக்கியம் இன்று படு சூப்பராக இருப்பதால் ஆரோக்கியத்தை பற்றி எந்த ஒரு கவலையும் நீங்கள் கொள்ள வேண்டியது இல்லை இன்று சுறுசுறுப்பாக நீங்கள் செயல்படுவீர்கள்.

மீனம்

 மீன ராசி நேயர்களுக்கு இன்று பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் பணிகளை கவனமாக கையாளுவது அவசியம் எனவே திட்டமிட்டு பணியாற்றுவதை நீங்கள் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

 மேலும் உங்கள் திறனை அறிவதற்கு குறைந்த வாய்ப்புகள் மட்டுமே காணப்படும் எனவே திட்டமிட்ட செயல்களில் எதார்த்தமான அணுகு முறையை மேற்கொள்வதன் மூலம் நீங்கள் வெற்றி அடையலாம்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை பணவரவு அதிகளவு காணப்பட்டாலும் எதிர்பாராத செலவும் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதிர்ஷ்டத்தை இன்று நீங்கள் நம்ப வேண்டாம்.

 உங்கள் கடின உழைப்பு மூலமே உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு தலைவலி ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் உள்ளது. எனவே உணவை குறித்த நேரத்தில் உண்ணுங்கள் அதிக அளவு நீரை பருகுங்கள் இதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை இன்று நீங்கள் பேணி பாதுகாக்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam