இன்றைய ராசிபலன் 16 பிப்ரவரி 2023 வியாழக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 16 பிப்ரவரி   2023 வியாழக்கிழமை. வாழ்க்கையில் எப்படிப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காமல் நாம் கடவுளை முழுமையாக நம்பி நமது ஜாதகத்திற்கு ஏற்ப தக்க பரிகாரங்களை செய்வதின் மூலம் ஆபத்துகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

அப்படி செய்யும் பரிகாரங்களால் எண்ணற்ற நன்மைகளை நாம் அடைய முடியும் அதில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மட்டுமே ஜாதகம் உங்களுக்கு சாதகமாக அமையும். அந்த வகையில் இன்று 27 நட்சத்திரங்களுக்கு உரிய ராசிபலன் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

 வாழ்க்கையில் எப்படியும் முன்னேற வேண்டும் என்ற துடித்துக் கொண்டிருக்க கூடிய மேஷ ராசி நேயர்களே இன்று வீண் வாக்குவாதம் எழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் நீங்கள் எதையும் பேசுவதற்கு முன்பு ஒரு முறைக்கு இருமுறை நன்கு யோசித்து தான் பேச வேண்டும்.

 நாவில் கிளம்பும் வார்த்தைகள் மூலம் நல்லதும் நடக்கலாம். கெட்டதும் நடக்கலாம். எனவே நா அடக்கத்தை இன்று நீங்கள் கையாளுவது மிகவும் நல்லது. எதையும் வெளிப்படையாக அனுசரித்து  நீங்கள் அணுகும் போது அதில் நலம் கிடைக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

 தொழிலைப் பொறுத்தவரை உங்கள் பணிகளை துல்லியமாக முடிக்கக்கூடிய நாள் என்பதால் நீங்கள் செய்யும் எந்தவிதமான பணிகளும் மிகத் தரமாக இருக்கும். நீதி நிலைமை என்று சீராக இல்லை தேவையற்ற செலவுகள் கட்டாயம் ஏற்படும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்கள் கண்களில் கவனத்தை செலுத்துவது அவசியம் சளி முதுகு வலி போன்ற உபாதைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் கடவுளை நினைத்து நீங்கள் தியானம் செய்வது நன்மை தரும்.

ரிஷபம்

இன்று ரிஷப ராசி நேயர்களுக்கு அட்டகாசமான நாள் என்பதால் நீங்கள் உங்கள் தேவைகளை அறிந்து அதற்கு தக்கவாறு நடந்து கொள்வீர்கள். உங்கள் முயற்சியில் வெற்றிகள் என்று வந்து சேரும் உங்களது திட்டம் சிறிய திட்டம் எனினும் பெரிய வெற்றிக்கு அது வழி செய்து தரும் என்பதை புரிந்து செயல்படுங்கள்.

 நிதி நிலையை பொறுத்த வரை பணம் வரவு சீராக உள்ளது. பயனுள்ள சேமிப்புகளில் உங்கள் பணத்தை பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படும். தொழிலைப் பொறுத்தவரை பணிகளை விரைந்து முடிக்க கூடிய ஆற்றல் இன்று உங்களுக்கு மேலோங்கும்.

 உறுதியும் நம்பிக்கையும் இருப்பதால் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி தொழிலில் நல்ல நிலவக்கூடிய நாள் இந்த நாள். ஆரோக்கியத்தில் எந்தவிதமான பிரச்சனைகளும் இன்று இல்லை என்பதால் இந்த நாளை நல்ல முறையில் பயன்படுத்தி முன்னேறுங்கள்.

மிதுனம்

வெற்றிகளை வாரிக் குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் மிதுன ராசி நேயர்களே இன்று உங்கள் விருப்பங்கள் எல்லாமே நிறைவேறும். மேலும் விருப்பங்களை நிறைவேற்ற நீங்கள் கிடைக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தினால் உங்களுக்கு சாதகமான பலன்கள் வந்து சேர கூடிய நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.

 தொழிலைப் பொறுத்தவரை பணி இடங்களில் உங்கள் செயல் திறன் நன்கு வெளிப்படும் உங்கள் திறமைகளை பார்த்து மேலதிகாரிகள் உங்களை பாராட்டி மழையில் நனைப்பார்கள். நிதி நிலையை பொறுத்தவரை இன்று எந்த விதமான குறையும் இல்லை.

 வளமான நாளாக இருக்கும் சேமிப்புகள் உயர்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும் ஆரோக்கியத்தை பொறுத்தவரை எந்தவிதமான பிரச்சனையும் உங்களுக்கு இல்லை. எந்த நாள் நல்ல விதமாக ஆரோக்கியத்தோடு இருப்பதால் நீங்கள் பல சாதனைகள் புரியலாம்.

கடகம்

கடக ராசி நேயர்களுக்கு இன்றைய நாளில் பதட்டம் அதிகளவு ஏற்படக்கூடிய சூழ்நிலை இருப்பதால் உங்கள் மூளைக்கு சற்று ஓய்வு கொடுப்பது நல்லது. எந்த ஒரு சிறந்த முடிவையும் இதன்மூலம் தான் நீங்கள் எடுக்க முடியும். பிரார்த்தனைகளை மேற்கொள்வதன் மூலம் உங்கள் உடல் நன்றாக இருக்கும்.

 செயல்களும் நல்ல முறையில் நடக்கும் என்பதை புரிந்து கொண்டு நல்ல பலன் கிடைக்க நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். தொழிலைப் பொறுத்தவரை பணி சுமை அதிகமாக இருப்பதால் தவறுகள் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே பணியிடத்தில் கவனத்தோடு இருப்பது மிகவும் நல்லது.

 பணப்புழக்கம் போதிய அளவு உள்ளதால் உங்கள் பொறுப்புக்களை கையாளும்போது பார்த்து கையாள வேண்டும். இது போன்ற பொறுப்புகளில் நீங்கள் கடினமாக இருக்கக்கூடிய சூழ்நிலையை சந்திக்க நேரிடும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும் ஆரோக்கியத்தில் சற்று சுணக்கமான நாள் என்பதால் உங்களுக்கு பதட்டம் காரணமாக முதுகு வலி ஏற்படலாம்.எனவே அமைதியாக எதையும் அணுக தியானம் மற்றும் பிரார்த்தனை இன்றி அமையாதது.

சிம்மம்

சிம்மராசி நேயர்களுக்கு இன்று வளர்ச்சி சற்று மந்தமாகவும் குறைந்தும் காணப்படும். தேவையற்ற கவலைகள் வந்து சேருவதோடு மனம் வருத்தத்தில் இருக்கும் இத்தகைய உணர்வுகளை நீங்கள் தவிர்ப்பது மிகவும் நல்லது. பணி செய்யும் இடத்தில் தவறுகள் காரணமாக உங்களுக்கும் மேலதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் அதிர்ச்சி ஏற்படுவதற்கு சூழ்நிலைகள் அதிகம் உள்ளது.

 எனவே பணியில் அதிக கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம். நிதி நிலைமை காரணமாக கூடுதல் செலவுகளை நீங்கள் செய்ய வேண்டி இருக்கும். எனவே பண சுமை அதிகரித்து செலவுகளை கட்டுப்படுத்தி சமாளிப்பது கடினம் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை பதட்டமான நாள் என்பதால் இன்று கால் தொடைகளில் வலி ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் கவனம் தேவை .

கன்னி

 கன்னி ராசி நேயர்களுக்கு இன்று அமோகமான நாளாக இருப்பதால் எதுவுமே சாதகமாக உங்களுக்கு அமையும். உங்கள் இலக்குகளை எளிதில் எட்டிப் பிடிப்பீர்கள். சிறந்த திட்டங்களை நீங்கள் இயற்றுவதின் மூலம் நல்ல நல்ல பலன்களை பெறுவீர்கள்.

 தொழிலைப் பொறுத்தவரை பணியிடத்தில் கூடுதல் பாராட்டு கிடைக்கும். ஊக்கத்தொகை வந்து சேரும் சலுகைகள் கிடைக்கும். எனவே இந்த நாளை நீங்கள் தொழிலை பொறுத்தவரை சரியாக பயன்படுத்திக் கொண்டால் பம்பர் பரிசு என்று கூறலாம்.

 நிதி நிலைமையை பொருத்தவரை வலுவான நிதி உங்களிடம் காணப்படுவதால் நீங்கள் சேமிப்பை அதிகரித்துக் கொள்ள சூழ்நிலைகள் அதிகரிக்கும். இதை உணர்ந்து உங்கள் சேமிப்பை என்று நீங்கள் அதிகரித்துக் கொள்ளலாம்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்கள் ஆற்றல் அதிகரித்து இருப்பதால் ஆரோக்கியம் வேறு லெவலில் இருக்கும் எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலை கொள்ள அவசியம் இல்லை.

துலாம்

துலாம் ராசி அன்பர்கள் இன்று ஆன்மீக உணர்வை அதிகளவு கையில் கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்கள் மனதில் மகிழ்ச்சி ஆறுதல் கிடைக்கும். அனுபவ அறிவு நல்ல ஆற்றல்களை கொடுக்கும் என்பதை புரிந்து எல்லா காரியங்களிலும் சற்று நிதானமாக செயல்பட வேண்டும்.

 தொழிலைப் பொறுத்தவரை இன்று மகிழ்ச்சிகரமான சூழல் இல்லை என்பதால் அதிக பணிகள் உங்களுக்கு இருக்கும் அதைப்பற்றி கவலை கொள்ளாமல் நீங்கள் உங்கள் இலக்குகளை அடைய பாடுபடுவது அவசியம். பணிகளில் சமூகமாக நடக்க வேண்டும் என்றால் தக்க ஆலோசனையை கேட்டு அதற்கு தக்கபடி நீங்கள் நடந்து கொண்டால் பணியிடத்தில் நல்ல பெயரை பெற முடியும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை தேவையற்ற செலவுகள் உங்களுக்கு வந்து சேர்வதால் அது வருத்தத்தை ஏற்படுத்தும். செலவுகளை செய்வதற்கு முன்பு திட்டமிடுதல் அவசியம். அதன் மூலம் உங்கள் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

 ஆரோக்கியத்தில் இன்று உங்கள் கை கால்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அது மட்டுமல்லாமல் பதட்டமான சூழ்நிலை காரணமாக மன அமைதியை நீங்கள் இழப்பீர்கள். எனவே தியானத்தை நீங்கள் கடைப்பிடிப்பது அவசியம்

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்று சற்று மந்தமான நாளாக இருப்பதால் பதட்டமான சூழ்நிலை உங்களுக்கு ஏற்படும். அதற்கு இடம் கொடுக்காமல் இருக்க நீங்கள் எதிலும் அமைதியை கடைபிடிப்பது மிகவும் நல்லது. தொழிலைப் பொறுத்தவரை பணியிடங்களில் திறமையாக பணியாற்றக்கூடிய தன்மை உள்ள நீங்கள் இன்று ஸ்திரத்தன்மை இழந்து காணப்படுவீர்கள்.

 எனவே சக பணியாளர்களிடமிருந்து உங்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்காது. மேலும் மேல் அதிகாரிகளின் அங்கீகாரம் இன்று உங்களுக்கு இல்லை என்பதை புரிந்து தொழிலில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

 நிதியை பொறுத்தவரை தேவையற்ற செலவுகள் ஏற்படும் அதற்காக நீங்கள் வருத்தப்படலாம். ஜாக்கிரதையாக இல்லை என்றால் பண இழப்பு ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அதிகமாக உள்ளது.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று அலர்ஜி ஒவ்வாமை போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் உண்ணும் உணவை கவனமாக உண்ண வேண்டும். கண்களில் பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் அப்படிப்பட்ட கண் பாதிப்பு ஏற்பட்ட உடனேயே நீங்கள் கண் மருத்துவரை அணுகி விடுவது மிகவும் நல்லது.

தனுசு

சவால்களை சந்திக்க வேண்டிய நாளாக இன்று தனுசு ராசி நேயர்களுக்கு உள்ளதால் எந்த ஒரு சூழ்நிலையிலும் நீங்கள் பாதுகாப்பு இன்மையோடு இருப்பதாக உணர்வீர்கள். இது உங்கள் மகிழ்ச்சியை கெடுத்து பணிகளில் குழப்பங்களை ஏற்படுத்தும்.எனவே நீங்கள் வெற்றி இலக்கை அடைய ஆன்மீக ஈடுபாடு அவசியம் தேவை.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளை குறித்த நேரத்தில் உங்களால் முடிக்க முடியாது.எனவே தவறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதால் திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ளவும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை குடும்ப பொறுப்பு காரணமாக அதிக செலவினங்கள் ஏற்படுவதால் உங்கள் போட்டி உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள சிறிய அளவு கடனை வாங்குவதற்கான சூழ்நிலைகள் உருவாகி உள்ளது.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை முதுகு வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. கால்களில் வலிகள் வருவதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதால் அந்த வழிகளை குறைத்துக் கொள்ள நீங்கள் தியானம் மூலம் நிவாரணத்தை பெற முடியும்.

மகரம்

 மகர ராசி நேயர்களே இன்று அட்டகாசமான நாளாக உங்களுக்கு இருப்பதால் ஆக்கபூர்வமான நாள் என்று இந்த நாளை கூறலாம் புத்துணர்ச்சியோடு காணப்படக்கூடிய நீங்கள் புதிய முயற்சிகளில் லாபகரமான பலனை பெற முடியும். பணியைப் பொறுத்தவரை தொழில் இடத்தில் சிறப்பாக இறக்கும் உங்கள் பணிகள் குறித்த நேரத்தில் முடிக்க நீங்கள் முயற்சி செய்தீர்கள்.

 தொழில் சார்ந்த முறையில் உங்கள் பணிகளை உற்சாகமாக முழுமையாக முடிக்க கூடிய நாளாக இந்த நாள் உள்ளது. உங்கள் நிதி நிலைமை இன்று பண தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய நாளாக இருப்பதால் அதிகமாக சேமிக்க கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு அமைந்துள்ளது.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை எந்தவிதமான சுணக்கமும் இல்லை என்று நீங்கள் மிகுந்த ஆரோக்கியத்தோடு இருப்பதால் எந்த விதமான கஷ்டங்களும் உங்களுக்கு ஏற்படாது.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக இருப்பதால் சுய முன்னேற்றத்திற்கான முயற்சிக்கு நீங்கள் வித்திடலாம். முயற்சிகளை செய்யும் போது உங்களுக்கு வெற்றிகள் வந்து சேரும். உங்களை நீங்கள் மேம்படுத்திக் கொள்வீர்கள்.

 தொழிலைப் பொறுத்தவரை பணிகள் திருப்திகரமாக நடந்து  முடிக்கப்படும். மேலதிகாரிகளின் நன்மதிப்பு கிடைக்கக்கூடிய நாளாக எந்த நாள் உள்ளது.

 நிதி நிலைமையை பொருத்தவரை பணப்புழக்கம் அதிக அளவு காணப்படுவதால் நீங்கள் இன்று உங்கள் பணத்தை சேமிப்பதற்கான திட்டங்களை போடலாம். ஆன்மீகச் செயல்களால் உங்களுக்கு அதிர்ஷ்டம் வந்து சேரும். உங்களிடம் இருக்கும் உறுதியும் மன தைரியமும் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கக்கூடிய நாள்.

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று உங்கள் நலத்திற்காக இந்த நாளை முழுமையாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். சுமூகமான அணுகு முறையின் மூலம் உங்களுக்கு எண்ணற்ற நன்மைகள் காத்திருக்கிறது. பணியிடத்தில் ஆக்கபூர்வமான பலன்கள் கிடைக்காது. திருப்தி நிலை குறைந்து இருப்பதால் சற்று கவனம் தேவை.

பண இழப்புக்கான வாய்ப்புகள் உள்ளதால் பணத்தை கவனமாக பாதுகாக்க வேண்டும். தாயாரின் உடல் நிலையில் அக்கறை காட்ட வேண்டும். இதற்கான செலவுகளை நீங்கள் செய்வதின் மூலம் தாயாரின் உடல் நிலையை மேம்படுத்தி விடலாம். இந்த நாள் உங்களுக்கு நன்றாக அமைய வேண்டும் என்றால் இறைவன் மீது நம்பிக்கை கொண்டு தியானத்தில் ஈடுபடுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam