கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பரிச்சயமான நடிகையாக இருப்பவர் ரஷ்மிகா மந்தனா.
இவருடைய சின்ன சின்ன சேட்டைகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்து விட்டது. அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் தெலுங்கு படங்கள் தொடர்ந்து பிளாக்பஸ்டர் வெற்றிகள் பெற்று வருகின்றன.
தெலுங்கில் முன்னணி நடிகையான பிறகு அடுத்த கட்டமாக தமிழிலும் பட வாய்ப்புகளை தேடிக் கொண்டிருக்கிறார். நடித்தால் முன்னணி நடிகர்களுடன் தான் என தீர்க்கமாக இருக்கிறாராம் ரஷ்மிகா மந்தனா.
அந்த வகையில் தமிழில் ரஷ்மிகா மந்தனா நடிப்பில் முதன்முதலாக வெளியாக உள்ள திரைப்படம் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் தான்.அதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் காணப்படுகிறது.
தளபதி 65 படத்திற்காக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பட வாய்ப்பு ஒன்றை தவிர்த்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், கடைசி நேரத்தில் பூஜா ஹெக்டே அந்த படத்தில் விஜய்யுடன் என்ட்ரி கொடுப்பது என முடிவாகி படக்குழு சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது.
இதற்கிடையில் சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ள ராஷ்மிகா தொடை முழுதும் தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை வெளியிட்ட ஒரே மணி நேரத்தில் 16 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது.