இன்றைய ராசிபலன் 17 பிப்ரவரி 2023 வெள்ளிக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 17 பிப்ரவரி   2023 வெள்ளிக்கிழமை. எத்தனை கஷ்டங்கள் ஏற்பட்டாலும் அதை எதிர்த்து சமாளிக்க கூடிய வைராக்கியம் நமக்கு வேண்டும் எனில் அதற்கு இறை நம்பிக்கை அவசியம் தேவை. இறை நம்பிக்கையோடு இருந்தால் கஷ்டங்களை தகர்த்து எறிய உங்கள் ஜாதகத்தில் இருக்கக்கூடிய நவகிரகங்களின் பார்வைக்கு ஏற்றபடியே உங்களுக்கு விதமான ஆற்றல் கிடைக்கிறது.

அந்த ஆற்றலை நல்ல விதத்தில் பயன்படுத்தி உங்கள் ஜென்ம ராசிக்கு நீங்கள் பலாபலனை அடைய முடியும். அந்த வரிசையில் இன்று எங்கள் மேஷம் முதல் மீனம் வரை 27 நட்சத்திரங்களுக்கான இன்றைய ராசிபலன் என்னென்ன என்பதை விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களுக்கு இந்த நாள் அற்புதமான நாளாக இருக்கும் நீங்கள் எப்போதும் ஆன்மீக ஈடுபாட்டில் ஈடுபடுவதன் மூலம் மன ஆறுகள் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் வெற்றி மேல் வெற்றி உங்களுக்கு வந்து சேரும். இன்று எதில் வெற்றி பெறலாம் என்பதை யோசித்து நீங்கள் செயல்படுத்தக்கூடிய  சூழ்நிலை விளங்கும்.

 தொழிலைப் பொறுத்தவரை பணியிடங்களில் அதிக அளவு தவறு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் பணியில் உங்கள் கவனத்தை செலுத்துவது அவசியம். உங்கள் மனதில் தேவையற்ற எண்ணங்கள் வந்து வந்து நீங்கும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று வரவும் செலவும் சமமாக இருப்பதால் பண வரவுக்கான சாதகமான நாள் என்று கூற முடியாது .பணத்தை பொருத்தவரை திட்டமிட்டு செலவு செய்வதை நீங்கள் கையாள வேண்டும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை அதிக அளவு உடல் உழைப்பு காரணமாக கால்களில் வலி ஏற்படலாம். எனவே உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனத்தில் செலுத்துவது அவசியம் தேவை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ரிஷபம்

எப்போதும் வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று விரும்பக்கூடிய ரிஷப ராசி நேயர்களுக்கு இன்று பொறுமையை சோதிக்கக்கூடிய நாளாக இருக்கும். எனினும் மகிழ்ச்சியாகவும், திருப்திகரமாகவும் இதையும் நீங்கள் இருப்பது உங்களுக்கு நன்மை தரும்.

 தெளிவான மனதின் மூலம் நீங்கள் உங்களுக்கு சாதகமான முடிவுகளை எடுக்க நேரிடும். தொழிலைப் பொறுத்தவரை பணியிடத்தில் சில கடினமான சவால்களை நீங்கள் சந்திக்க நேரலாம். சூழ்நிலையை திறமையாக கையாண்டு அதில் வெற்றி கொள்ள வேண்டும்.

 தவறு நேராமல் இருக்க நீங்கள் எதிலும் அமைதியாக இருப்பது மிகவும் நல்லது. இன்று உங்களுக்கு தேவையற்ற வீண் விரயங்கள் வந்து சேரலாம். உங்களுக்கு சிறிது மன வருத்தம் ஏற்படும்.

 பண இழப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புக்கள் இருப்பதால் எச்சரிக்கையாக இருங்கள். ஆரோக்கியத்தை பொருத்தவரை முதுகு வலியால் பாதிப்புகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உள்ளதால் ஓய்வுக்கான நேரத்தை ஒதுக்கி விடுவது உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு உதவி செய்யும்.

மிதுனம்

 மிதுன ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு சமநிலை உணர்வு இருப்பதால் எதில் நிதானத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது. உங்கள் நண்பர்கள் மற்றும் உடன் இருப்பவர்கள் உங்களுக்கு வேண்டிய ஆதரவை மற்றும் உதவியை தருவார்கள். பொதுவாக இன்று நீங்கள் மகிழ்ச்சியோடு இருப்பதற்கான நாளாக இந்த நாள் உள்ளது.

 தொழிலைப் பொறுத்தவரை நீங்கள் கொடுக்கின்ற பணியை மிகச் சிறப்பாக முடித்து தருவீர்கள். பணிகளை திறமையாக கையாளுவதோடு உங்களிடம் சுறுசுறுப்பும் அதிக அளவு இருக்கும். நிலைமையை பொறுத்தவரை பங்கு சந்தைகளின் மூலம் அதிக அளவு வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

 பணத்தை சேமிக்க கூடிய நாளாக இந்த நாள் உள்ளது. ஆரோக்கியத்தை பொருத்தவரை என்று அற்புதமான நாள் என்பதால் ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

கடகம்

வெற்றியை பெற வேண்டும் என்று நினைக்கக்கூடிய கடக ராசி நேயர்கள் இன்று பிரார்த்தனை மூலம் நீங்கள் அதிக அளவு நன்மைகளை பெற முடியும். இந்த இறை வழிபாடு மூலம் நீங்கள் உங்களுக்கு நன்மையை பெறுவதோடு மிகுந்த தெளிவோடு இருப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இன்று உங்கள் சிந்தனைகள் மேலோங்க கூடிய நாளாக உள்ளது.

தொழிலைப் பொறுத்தவரை நீங்கள் நேர்மையான அணுகு முறையோடு இருப்பதால் உங்களுக்கு சாதகமான பலன்கள் வந்து சேரும். பணியில் பலவித பணி உயர்வு வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

நிதியை பொறுத்தவரை இன்று அதிர்ஷ்டகரமான நாள் என்பதால் உங்களுடைய சேமிப்பு உயர்வதற்கான சூழ்நிலை உள்ளது.ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சிறப்பான நாள் என்பதால் எந்த நாளை நீங்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சிம்மம்

அற்புதமான நாளை எதிர் கொள்ளக்கூடிய சிம்மராசி நேயர்களே என்று நீங்கள் செய்யும் செயல்களில் பொறுமையோடு சமயோசித புத்தியோடும் செயல்படுவது மிகவும் முக்கியமான ஒன்று. உங்களுக்குள் ஏற்படும் எதிர்மறை ஆற்றல்களால் மனதில் குழப்பங்கள் உண்டாகும்.

 எனவே அந்த எதிர்மறை ஆற்றல்கள் உண்டாவதை தவிர்த்து விடுங்கள். பணியிடத்தில் அதிக சுமை காணப்படுவதால் திட்டமிட்டு பணிகளை முடிக்க பழகிக் கொள்ளுங்கள். நீதி நிலைமையை பொறுத்தவரை பணம் சம்பாதிக்க குறைந்த வாய்ப்பே உள்ளது.

 மேலும் பணத்தை சேமிப்பது உங்களுக்கு மிக கடினம். எனவே நிதி சம்பந்தமான செயல்களில் செய்யும் போது நீங்கள் அதிக அளவு யோசித்து ஆழ்ந்த சிந்தனை செய்து தான் முடிவுகளை எடுக்க வேண்டும்.

 ஆரோக்கியத்தில் இன்று சுனக்கமாக இருக்கக்கூடிய நாள் என்பதால் சளி மற்றும் முதுகு வலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளதா? ஆரோக்கியத்தில் அதிக கவனத்தை காட்டுவது அவசியம்.

கன்னி

வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் கன்னி ராசி நேயர்களே இன்று உங்களுக்கு சில சௌரியங்களை விட்டுக் கொடுத்துப் போகக்கூடிய சூழ்நிலையை உருவாவதால் நீங்கள் எதிலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். நண்பர்கள் மற்றும் உடன் இருப்பவர்களின் ஆலோசனை கேட்டு சில செயல்களை செய்வதற்கு முன்பு நீங்கள் செயல்படுவது உங்களுக்கு நன்மை பயக்கும்.

தொழிலை பொறுத்தவரை பணியிடத்தில் பதட்டமான சூழ்நிலை காணப்படுவதால் உங்கள் தொழிலை நீங்கள் திட்டமிட்டு செய்வதால் மட்டுமே நல்ல பலன்கள் உங்களுக்கு வந்து சேரும். நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று வரவும் செலவும் இணைந்து இருப்பதால் நிதியில் சிறத்தன்மை இல்லாமல் உள்ளது.

 எனவே அவற்றை கருத்தில் கொண்டு நீங்கள் செலவுகளை செய்வது முக்கியம். ஆரோக்கியத்தை பொருத்தவரை அதிக உடல் உழைப்பு காரணமாக உங்களுக்கு கால் வலி மற்றும் முதுகு வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.

துலாம்

 துலாம் ராசி நேயர்களே இன்று உங்களுக்கு சாதகமான நாள் என்பதால் எதிலும் உறுதியோடும் நம்பிக்கையோடும் செயல்படுவதின் மூலம் உங்கள் இலக்குகளை எளிதாக எட்டிப் பிடித்து வெற்றி மேல் வெற்றியை பெறலாம்.

 பணியில் பொருத்தவரை பணியிடத்தில் சிறப்பான வளர்ச்சி இன்று உள்ளது. உங்கள் பணிகளை நீங்கள் திறமையாக முடிப்பதின் மூலம் மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். மேலும் எந்த ஒரு பணியையும் நீங்கள் துல்லியமாக கணிப்பு செயல்படுவீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை அதிகளவு பணம் புழக்கம் இன்று இருக்கும் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய நாளாக இந்த நாள் உள்ளது. ஆரோக்கியத்தில் உங்களுக்கு எந்த விதமான இடையூறும் இல்லதால் இல்லாததால் என்று சிறப்பாக உங்கள் ஆரோக்கியம் இருக்கும்.

விருச்சிகம்

எல்லோருக்கும் உதவ வேண்டும் என்று அற்புதமான குணத்தை பெற்றிருக்கக் கூடிய விருச்சிக ராசி நேயர்கள் என்று ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் எந்த நாளை சிறந்த நாளாக மாற்றி அமைக்க முடியும். உங்களுக்கு இதன் மூலம் திருப்தி ஆற்றல் இரண்டுமே கிடைக்கும் நல்ல பயனை பெறுவதற்காக நீங்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

 தொழிலைப் பொறுத்தவரை உங்கள் மேல் அதிகாரிகளுடன் நீங்கள் நல்ல உறவை பேணி பாதுகாக்க வேண்டும். விருப்பமில்லாத சூழ்நிலையை நீங்கள் கையாள திறமையாக செயல்படுவது அவசியமாகிறது. நீதி நிலைமையை பொருத்தவரை எதிர்பாராத சூழ்நிலை காரணமாக உங்களுக்கு அதிக அளவு செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

 எனவே பண விஷயத்தில் அக்கறை செலுத்துவது மிகவும் நல்லது. ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் எண்ணெயில் செய்த பொறித்த உணவு பண்டங்களை உண்ண வேண்டாம். மிதமான ஆகாரங்களை இன்று எடுத்துக் கொண்டால் போதுமானது.

தனுசு

அற்புதமான நாளாக இன்றைய நாள் தனுசு ராசி நேயர்களுக்கு இருக்குமா என்றால் சௌரியங்களை விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போவதின் மூலமே இந்த நாள் இனிய நாளாக உங்களுக்கு இருக்கும். தடைகள் பல வந்தாலும் திட்டமிட்டு அதை நீங்கள் சமாளித்து விடுவீர்கள்.

 தொழிலைப் பொறுத்தவரை கவனக்குறைவு காரணமாக பணி இடத்தில் அதிக அளவு தவறுகள் நிகழ வாய்ப்புகள் உள்ளதால் கவனத்தை செலுத்த வேண்டும். நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று உங்களுக்கு செலவினங்கள் அதிகரிக்கும்.

எனவே பணத்தை ஜாக்கிரதையாகவும் சாகுரியமாகவும் கையாளுவதின் மூலம் தான் செலவை நீங்கள் மட்டுப்படுத்த முடியும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று முதுகு வலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதால் தினமும் உடற்பயிற்சி செய்வதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று சில மாற்றங்கள் உங்களுக்கு ஏற்படும் அதற்காக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு நிலவும். பிறருக்கு உதவுவதின் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சி கிட்டும் சாதாரண செயல்களை கூட இன்று படு தாமதமாகத்தான் உங்களால் செய்து முடிக்க முடியும்.

பணியிடத்தில் சவால்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் பணிகளை திட்டமிட்டு திறமையாக செய்து முடிப்பதில் நீங்கள் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று பண வரவு குறைவாக இருப்பதால் பணத்தை தக்க வைத்துக்கொள்ள என்ன செய்யலாம் என்பது பற்றி திட்டமிடுங்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை என்று அவ்வளவு சிறப்பான நாளாக இல்லை. கை மற்றும் கால்களில் வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் சற்று நேரம் ஓய்வெடுப்பதற்காக நீங்கள் நேரத்தை ஒதுக்க வேண்டும்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களுக்கு இன்று செழிப்பான நாளாக இருப்பதால் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும் உங்கள் வளர்ச்சிக்கு உதவக்கூடிய வகையில் நீங்கள் உங்கள் முடிவுகளை எடுக்கும் போது உங்களுக்கு அது சாதகமாகவே அமையும்.

 தொழிலைப் பொறுத்தவரை பணியிடத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவு வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கும் மேலதிகாரிகளின் ஆதரவும், பாராட்டுக்களும் கிடைக்கும்.

 நிதி நிலைமை இன்று மகிழ்ச்சிகரமாக இருப்பதால் உங்கள் சேமிப்பு உயரக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இன்று ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இல்லாததால் உங்கள் ஆரோக்கியம் பணி சிறப்பாக இருக்கும்.

மீனம்

மீன ராசி நேயர்களுக்கு இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள் என்பதால் திறமையாக செயல்பட்டு எதிலும் திட்டமிட்டு வெற்றியை பெற முடியும். இன்று உங்களுள் ஆற்றலும் உறுதியும் நிறைந்து இருப்பதால் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய நாளாக இந்த நாளை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.

 தொழிலைப் பொறுத்தவரை பணிகளை விரைவாக முடிக்க நேரிடலாம் உங்கள் பணிகளை எளிதாக கையாளக்கூடிய நம்பிக்கை மற்றும் அணுகுமுறை  சிறப்பாக இருக்கும்.

 பணத்தை அதிகளவு சம்பாதிக்கக்கூடிய ஆற்றல் உங்களுக்கு ஏற்படும் ஸ்திரமான நிதி நிலைமைகளுக்கான வாய்ப்புகள் இன்று உள்ளதால் நிதி நிலைமையில் என்று தேக்கம் இல்லை. உங்களுடைய நம்பிக்கையான மனநிலை காரணமாக ஆரோக்கியம் சீராக இருக்கும் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியது இல்லை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam