மும்பை, ஆந்திரம் மற்றும் கேரளத்தில் இருந்து வந்த நடிகைகளே தமிழ்த் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தியுள்ளார்கள். தமிழ் இயக்குநர்களும் தமிழ்ப் பெண்களை விடவும் வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்களையே கதாநாயகியாக ஒப்பந்தம் செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
அது என்னவோ அப்படியொரு விநோத நடைமுறை தமிழ்த் திரையுலகில் பல ஆண்டு காலமாக நிலவி வருகிறது. தமிழ் ரசிகர்களும் எந்தப் பேதமும் பார்க்கமால் இதர மொழிக் கதாநாயகிகளைக் கொண்டாடி வருகிறார்கள்.
1999-ல் முதலில் மிஸ் சேலம் பட்டத்தை வென்ற த்ரிஷா, அதே வருடத்தில் மிஸ் சென்னை பட்டத்தையும் வென்று கவனம் ஈர்த்தார். உடனே, ஊடகங்களில் த்ரிஷாவின் புகைப்படங்களும் பேட்டிகளும் வெளியாகின. அட்டைப் படங்களிலும் த்ரிஷாவின் புகைப்படம் மின்னியது.
விளம்பரப் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தன. ஆரம்பத்தில் சினிமாவில் நடிப்பதில் தயக்கம் காட்டியவர், நல்ல வாய்ப்புகள் கதவைத் தட்டியபோது மறுக்காமல் ஏற்றுக்கொண்டார்.
1999-ல் வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக சில காட்சிகளில் நடித்தார் த்ரிஷா. கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை முதலில் வழங்கியவர் ப்ரியதர்ஷன். லேசா லேசா படத்துக்காக.
இந்தப் படம் வெளிவரும் முன்பு த்ரிஷா நடிப்பில் மெளனம் பேசியதே, மனசெல்லாம் ஆகிய படங்கள் வெளிவந்தன. முதல் வாய்ப்பை லேசா லேசா வழங்கினாலும் அமீர் இயக்கிய மெளனம் பேசியதே (2002) தான் த்ரிஷா, கதாநாயகியாக நடித்து வெளிவந்த முதல் படம்.
இளம் வயதிலேயே மாடலிங் துறைக்குள் நுழைந்து விட்ட திரிஷா, விளம்பர படங்களில் நடித்து வந்தார். அதன் மூலம், சினிமாவில் துணை நடிகையாக பணியாற்றிய இவருக்கு அடுத்தடுத்து ஏறுமுகம் தான்.
இந்நிலையில், தன்னுடைய 17 வயதில் பருவ மொட்டாக இருக்கும் போது நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.