இன்றைய ராசிபலன் 18 பிப்ரவரி 2023 சனிக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 18 பிப்ரவரி   2023 சனிக்கிழமை. எப்போது ஜனனம் என்று ஒன்று உள்ளதோ அது போல மரணம் என்பது கட்டாயம் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றது போல் நாம் செயல்பட வேண்டும். இருக்கிறது என்று அதிக அளவு ஆடவோ, இல்லை என்று ஓவராக கவலைப்படுவதோ கூடாது.

ஒவ்வொரு மனிதனின் ஜாதக நிலைகளுக்கு ஏற்ப அவரது வாழ்க்கை பலாபலன் அமையும் எனவே கட்டாயம் இறைவன் மீது நம்பிக்கை கொண்டு நீங்கள் செயல்பட்டால் உங்கள் வாழ்வில் உச்சத்தை அடைவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எனவே உங்கள் எதிர்கால பலன்களை அறிந்து கொண்டு அதற்குத் தக்கவாறு திட்டங்களை நீங்கள் தீட்டிக் கொள்ளலாம். அதற்கு ஜோதிடம் என்ற அற்புதமான கலை உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

அந்த வரிசையில் இன்று எங்கள் மேஷம் முதல் மீனம் வரை 27 நட்சத்திரங்களுக்கான இன்றைய ராசிபலன் என்னென்ன என்பதை விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

 இன்றைய நாள் மேஷ ராசி நேயர்களுக்கு அவ்வளவு எளிதாக எதையும் பெற முடியாத நாளாக இருப்பதால் கவனமாகவும், உறுதியாகவும் எந்த ஒரு செயலிலும் நீங்கள் ஈடுபட வேண்டும் என்பதை நினைத்து கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும்.

 தொழிலைப் பொறுத்தவரை இன்று அதிக பலன் தரும் என்று எதிர்பார்த்து இருந்தால் அது உங்களுக்கு ஏமாற்றத்தை தான் தரும். பணி புரியும் பகுதிகளில் உங்களுக்கு கூடுதலாக பணி இருக்கும். எனவே நீங்கள் திட்டமிட்டு செயல்படுவதின் மூலம் மட்டுமே குறித்த நேரத்தில் உங்கள் பணிகளை முடிக்க முடியும்.

 நிதி நிலைமையும் சிறப்பாக இருக்காது. ஒவ்வொரு பணத்தையும் செலவு செய்யும் போது கவனம் தேவை. அதிக அளவு செலவு செய்ய வேண்டிய நாளாக உள்ளது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்கள் தாயாரின் உடல் நலத்தில் அக்கறை தேவை தாயாரின் உடல் நலத்திற்காக செலவு செய்ய வேண்டி வரும்.

ரிஷபம்

 ரிஷப ராசி அன்பர்களே இன்று எதிலும் வெற்றி காண வேண்டும் என்று நினைத்தாலும் பாதுகாப்பு இன்மை உணர்வு உங்களுள் அதிகமாக இருக்கும். எந்த விஷயத்தையும் நீங்கள் லேசாக எடுத்துக் கொண்டால் உங்களுக்கு பிரச்சனை இல்லை. இல்லை என்றால் மனவருத்தம் மிகுந்து விடும்.

 தொழிலைப் பொறுத்தவரை பொறுப்புக்கள் அதிகரித்து இருக்கக்கூடிய நாள். பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் ஆர்வத்தை மேம்படுத்திக் கொண்டால் பணியில் சிறப்பாக செயல்பட முடியும்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை அதிகளவு சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணம் இருந்தாலும் அந்த வாய்ப்புகள் இன்று உங்களுக்கு குறைவாக இருப்பதால் செலவுகளை தக்க முறையில் செய்யும் போது மிகவும் சிறப்பாக இருக்கும். கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் கட்டாயமாக நீங்கள் கவனத்தை செலுத்த வேண்டும்.

மிதுனம்

வெற்றி மேல் வெற்றியை குவிக்க கூடிய மிதுன ராசி நேயர்களுக்கு இன்று மகிழ்ச்சிகரமான உற்சாகமான நாள் என்று கூறலாம். நீங்கள் எடுக்கும் பணிகளை மிகச் சிறப்பாகவும், எளிதாகவும் செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் பட்டியல் இன்று அதிகரிக்கும். நண்பர்களிடம் நன்கு பழகுவீர்கள்.

 தொழிலைப் பொறுத்தவரை பணியில் முன்னேற்றம் அதிகளவு காணப்படுவதால் குறித்த நேரத்தில் உங்கள் பணிகளை முடித்து மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற்று விடுவீர்கள்.

 நிதி நிலைமையை பொருத்தவரை சிறப்பான நாளாக இருப்பதால் உங்களுக்கு ஊக்கத்தொகை கூட வந்து சேரும். பணத்தை கட்டாயம் நீங்கள் சேமிக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவு அதற்கு தக்கது போல் அதிகரிக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை நீங்கள் அக்கறை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. சீரும் சிறப்புமாக உங்கள் ஆரோக்கியம் இன்று உள்ளது.

கடகம்

அருமையான நாளாக இந்த நாள் கடக ராசி நேயர்களுக்கு இருப்பதால் சிறப்பான வளர்ச்சியை நீங்கள் திறம்பட பெறுவீர்கள். உங்கள் திறமைகள் மிளிரும். திறமைகளுக்கு ஏற்ப வாய்ப்புகளும் வந்து சேரும் உங்கள் அணுகு முறையில் நம்பிக்கை எப்போதும் இருக்கும்.

 தொழிலைப் பொறுத்தவரை நீங்கள் பணி இடத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டிய வாய்ப்புகள் உள்ளது. உங்கள் திறமையை பயன்படுத்தி நீங்கள் நன்மை அடைந்து விடலாம். குறிப்பிட்ட இலக்குகளை குறிப்பிட்ட நேரத்தில் அடைவீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணவரவு அதிக அளவு வந்தாலும் சிறிய அளவு கடன் வாங்க வேண்டி இருக்கும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் அளவுக்கு பணப்புழக்கம் உள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் திடகாத்திரத்துடன் இருப்பீர்கள்.

சிம்மம்

 எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று போராடக்கூடிய குணத்தை பெற்றிருக்கும் சிம்ம ராசி நேயர்கள் இன்று உங்கள் முயற்சியில் வெற்றி காண கடுமையான போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும். மனதில் ஏற்படுகின்ற பதட்டத்தை சமாளிக்க நீங்கள் தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்வது மிகவும் சிறப்பாக இருக்கும்.

 தொழிலைப் பொறுத்தவரை பணியிடத்தில் உங்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். இதனால் பதட்டம் ஏற்படும். இந்த பதட்டத்தை நீங்கள் சமாளிப்பது மிகவும் கடினமாக இருப்பதால் கட்டாயம்  தெய்வ வழிபாட்டில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

 நிதி நிலைமையும் மகிழ்ச்சிகரமாக இருக்காது. உங்களுடைய செலவுகள் அதிகரிக்கும். நிதி நிலைமையை சமாளிக்க கட்டாயம் திட்டமிடுதல் அவசியமாகும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை சளி, தலைவலி காரணமாக உடல் உபாதைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும்.

கன்னி

 வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் கன்னி ராசி நேயர்களே, உங்களுக்குள் எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக இருப்பதால் உங்கள் நம்பிக்கை குலையும். நீங்கள் நம்பிக்கை உணர்வை நேர்மறை ஆற்றலோடு சந்தித்தால் மட்டுமே வெற்றியை பெற முடியும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு மந்தமான சூழ்நிலை நிலவுவதால் உங்கள் செயல் திறன் அவ்வளவாக ஜொலிக்காது. உங்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். எனவே இந்த நாளை உங்களுக்கு சாதகமான நாளாக மாற்ற முயற்சி செய்வீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை மந்தமான நாளாக இருப்பதால் பணப்புழக்கம் குறைந்து இருக்கும்  எனவே மகிழ்ச்சி இருக்காது. நிதி நிலையில் ஏற்றத்தாழ்வுகளை நீங்கள் சந்திக்கலாம். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று ஆரோக்கியத்துக்கு உகந்த நாள் அல்ல பதக்கத்தோடு இருப்பீர்கள். எனவே ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

துலாம்

வெற்றிகளை வாரி குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கக்கூடிய துலாம் ராசி நேயர்கள் என்று பணிகளை விரைவாக முடித்து பாராட்டுதல்களை பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிக அளவு என்று உங்களிடம் காணப்படும்.

 தொழிற் ஸ்தானத்தைப் பொறுத்தவரை பணியில் இன்று அங்கீகாரம் உங்களுக்கு கிடைக்கும்.மேலும் அதிக வாய்ப்புகள் வந்து சேரும் உங்களுக்கு திருப்திகரமான நாளாக இன்றைய நாள் விளங்கும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை பணப்புழக்கம் சுமாராகவும் சுமூகமாகவும் இருப்பதால் உங்களுக்கு பணத்தை பொருத்தவரை எந்த பிரச்சனையும் இல்லை. அதுபோலவே ஆரோக்கியமும் சீராக இருப்பதால் பெரிய பிரச்சனைகள் ஏதும் ஏற்படாது.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே இன்று நீங்கள் செய்யக்கூடிய செயல்களை நீங்களே கண்காணித்து பாருங்கள். உங்கள் இலக்குகளை எளிதில் அடைய முடியாது. போராடித்தான் எதையும் பெற முடியும். எனவே நீங்கள் பொறுமையுடனும் உறுதியோடும் எதையும் எதிர்கொள்ளுதல் மிகவும் அவசியமானது.

 தொழிலைப் பொறுத்தவரை சக பணியாளர்களிடம் நட்புடன் பழகுங்கள். இன்று தொழில் நிமித்தமாக பயணம் மேற்கொள்ள வாய்ப்புக்கள் உள்ளது. பணிபுரியும் இடத்தில் கவனம் தேவை.

 நிதி நிலமையை பொறுத்தவரை இன்று அவ்வளவு சிறப்பான நாளாக இல்லை. அதிக செலவுகள் ஏற்படும். பணத்தால் பிரச்சனை உருவாகும் என்பதால் கவனத்தை கையில் கொள்ளுங்கள்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை பதட்டம் அதிகரித்து இருப்பதால் உங்களுக்கு தலைவலி ஏற்படும். எனவே தியானம் மற்றும் யோகாவை நீங்கள் தினமும் செய்வதை வழக்கப்படுத்திக் கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

தனுசு

எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் இன்றைய நாள் உங்களுக்கு உகந்த நாள் இல்லை என்பதால் அனைவரையும் அனுசரித்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்.

 தனுசு ராசி நேயர்களே உங்களது தொழில் ஸ்தானமும் என்று கடுமையாக இருப்பதால் எதையும் சமாளிக்க வேண்டும் என்ற மனநலையை நீங்கள் செட் செய்து கொள்ளுங்கள். பணியிடங்களில் உங்கள் திறமையை காட்டினாலும் அதற்கு ஏற்ற பலன் கிடைக்காது.

 நிதி நிலைமையும் அவ்வளவு சிறப்பாக இருக்காத காரணத்தால் பண இழப்புகள் அதிகளவு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதால் பண விஷயத்தில் கவனம் தேவை. ஆரோக்கியத்தை பொறுத்த வரை தலைவலி, முதுகு வலி ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அதிகமாக உள்ளது. எனவே ஆரோக்கியத்தை கட்டாயம் நீங்கள் கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம்.

மகரம்

 மகர ராசியினர்களுக்கு இன்று சிந்தனைகள் அதிகரிக்க கூடிய நாளாக இருப்பதால் செயல்களை திட்டமிட்டால் மட்டுமே வெற்றியை எட்டிப் பிடிக்க முடியும். பணியிடத்தை பொருத்தவரை மிதமான பலன்களை இன்று உங்களுக்கு கிடைப்பதால் பணி செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

 நிதி நிலைமையை பொருத்தவரை சமூகமான நாளாக இல்லை. உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக நீங்கள் முயற்சி செய்யும்போது கட்டாயமாக பண பற்றாக்குறை ஏற்படும். இதை கவனத்தில் கொண்டு நீங்கள் முன்னரே திட்டமிடுதல் அவசியமான ஒன்றாகும்.

 ஆரோக்கியத்தை பொறுத்த வரை தலைவலியால் பாதிப்புகள் ஏற்படலாம். எனவே ஓய்வு நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொண்டால் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள்  பாதுகாத்துக் கொள்ளலாம்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களுக்கு இன்று சாதகமான நாள் என்பதால் வளர்ச்சி மற்றும் வாய்ப்புகள் அதிக அளவு காணப்படும். சுய முயற்சியின் மூலமும் கடின முயற்சியின் மூலமும் நீங்கள் எண்ணற்ற லாபங்களை பெறக்கூடிய நாளாக இந்த நாள் விளங்குகிறது.

 தொழிலைப் பொறுத்தவரை உயர் பதவிகள் உங்களைத் தேடி வரும். கடின உழைப்புக்கு ஏற்ப பாராட்டுக்கள் உங்களுக்கு கட்டாயமாக கிடைக்கும்.

நிதி நிலையும் சிறப்பாக இருப்பதால் உங்கள் வங்கிகளில் இருப்புகள் உயரும். ஆரோக்கியமும் மிகவும் அற்புதமாக இருப்பதால் ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

மீனம்

எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற அற்புதமான குணத்தை கொண்டிருக்கும் மீன ராசி நேயர்களே, இன்று உங்கள் சமயோதத புத்தி மற்றும் புத்திசாலித்தனத்தை கொண்டு அதிகளவு நன்மைகளை அடைவீர்கள். இன்று முக்கிய முடிவுகளை நீங்கள் எடுப்பதன் மூலம் உங்களுக்கு நன்மைகள் ஏற்படும்.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை நீங்கள் சிறப்பாக பணி செய்வீர்கள். உங்கள் முயற்சிக்கு மேல் அதிகாரிகளின் பாராட்டு கட்டாயமாக உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையை பொறுத்தவரை உங்களிடம் கணிசமான தொகை இருப்பதால்  உங்களது தேவைக்கு ஏற்ப செலவுகளை செய்வீர்கள்.

பங்கு வர்த்தகம் மூலம் பணவரவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களது ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நம்பிக்கையோடு இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Tamizhakam