இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2023 புதன்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2023 புதன்கிழமை. எதிர்கால பலன்களை அறிந்து கொள்வதற்காக ஜோதிடத்தை நாம் பயன்படுத்தி வருகிறோம். இதில் நாம் முன் ஜென்மத்தில் செய்த கர்ம வினைகளை தீர்ப்பதற்கான பரிகாரங்களை கூறியிருப்பார்கள். அந்த பரிகாரங்களை நாம் செய்து முடிப்பதின் மூலம் நமக்கு ஏற்படக்கூடிய தடங்கல்களை ஓரளவு தடுத்து நிறுத்த முடியும்.

அப்படிப்பட்ட ஜோதிடத்தில்  நமது பிறந்த நேரத்தை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படும் ஜாதகத்தில் இருக்கும் கிரக அமைப்பை கொண்டு நமக்கு பலன்கள் அமையும். அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி நேயர்களே இன்று உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரித்து இருக்கும். அதை முதலில் நீங்கள் நீக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் உற்சாகத்தோடும், நம்பிக்கையோடும் எதையும் செய்ய முடியும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணி அதிகமாக இருப்பதால் உங்களுக்கு இறுக்கமான மனநிலை ஏற்பட்டு கவலை தரும். சில ஆரோக்கியப் பிரச்சினைகள் காரணமாக இன்று உங்களால் பணிகளை விரைந்து முடிக்க முடியாது.

நிதிநிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் குறைந்த அளவே இருக்கும். பணப்புழக்கம் குறைவாக இருப்பதால் நீங்கள் பணத்தை சாதகமான முறையில் கையாள வேண்டும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று குழப்பமான மனநிலை காரணமாக ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும். எனவே அமைதியாக இருப்பது நல்லது. இதன் மூலம் எதையும் உங்களால் சாதிக்க முடியும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறக்கூடிய நாள் எனவே மனதில் மகிழ்ச்சி நிலவும் .தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து உங்கள் மனதிற்கு ஆறுதல் அளிக்கும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளுக்காக நீங்கள் பயணத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கும். உங்கள் பணிகளை எளிதாக முடிப்பீர்கள்.இதனால் அனைவரும் உங்களை பாராட்டக்கூடிய நிலை ஏற்படும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் சீராக இருப்பதால் நீங்கள் பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்ய முயற்சி செய்வீர்கள்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று தலைவலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் நீங்கள் தியானம் மற்றும் யோகா பயிற்சிகளை மேற்கொள்வதின் மூலம் அவற்றிலிருந்து தப்பித்து விடலாம்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். நீங்கள் அமைதியாகவும், சௌவுரியமாகவும் இருக்கலாம்.உங்களுக்கு நம்பிக்கை உணர்வுகள் அதிகரிப்பதின் மூலம்  மகிழ்ச்சி ஏற்படும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியில் நீங்கள் எளிதாக செயல்படுவீர்கள்.இதனால் நல்ல பெயர் வந்து சேரும். மற்றவர்கள் பாராட்டக்கூடிய நிலை உருவாகும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் சிறப்பாகவே இருக்கும். உங்களுடைய சேமிக்கும் ஆற்றல் உயர்ந்து வரும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை மகிழ்ச்சிகரமான மனநிலையில் நீங்கள் இருப்பதால் உங்கள் ஆரோக்கியத்தில் எந்த குழப்பமும் ஏற்படாது. இன்று ஆரோக்கியத்தில் நீங்கள் சிறப்பாக இருப்பீர்கள்.

கடகம்

கடக ராசி நண்பர்களே இன்று உங்களிடம் கவலை அதிகரித்து இருக்கும். நீங்கள் இந்த நாளை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் ஒரு கொள்கை பிடிப்போடு செயல்படுவது அவசியமானதாகும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியிடத்தில் மாற்றங்களுக்கான சாத்தியம் அதிகம் உள்ளது. நீங்கள் பயணத்தை மேற்கொள்வதின் காரணமாக நன்மைகள் ஏற்படும். பணிகளை செய்து முடிப்பதில் மும்மரமாக இருப்பீர்கள். எனவே திட்டமிட்டு நீங்கள் செயல்பட்டால் வெற்றி இலக்குகளை அடையலாம்.

நிதி நிலைமையை பொருத்தவரை சுமாரான வளர்ச்சி இருக்கும்.நீங்கள் தான தர்மங்களை செய்வதற்கு உகந்த நாளாக இந்த நாள் இருப்பதால் இதை சரியான முறையில் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை அதிகப்பணியின் காரணமாக உங்களுடைய அமைதியின்மை இருக்கும். எனவே தலைவலியை இதை ஏற்படுத்தித் தரும். தியானம் மற்றும் யோகாவை மேற்கொள்வதின் மூலம் உங்களுக்கு இந்த சிக்கல் ஏற்படாது.

சிம்மம்

சிம்மராசி நண்பர்களே இன்று முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள் அல்ல. அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இல்லை. கடினமான உழைப்பை நீங்கள் செய்வதின் மூலம் உங்களுக்கு பணிகள் சுலபமாக முடியும். எனினும் பொறுப்புக்கள் அதிகமாக இருப்பதால் கவனத்தோடு இருக்கவும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளை சிறப்பாக நீங்கள் செய்ய முடியாது.உங்கள் மேல் அதிகாரிகளுடன் சண்டை ஏற்படும். பணியில் கவனக் குறைவு இருக்கும். எனவே கவனத்தை கட்டாயம் நீங்கள் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் குறைந்து இருக்கும். நீங்கள் அதிகமாக சேமிக்க முடியாது. எனவே சிக்கனமாக பணத்தை செலவு செய்யுங்கள்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை தாயாரின் உடல் நலத்திற்காக செலவு செய்ய நேரிடலாம். இது சற்று கவலையை உங்களுக்கு தரும் எனினும் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது அவசியம்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே இன்று நீங்கள் நம்பிக்கையோடு செயல்பட்டால் உங்கள் செயல்களில் வெற்றி கிடைக்கும். திட்டமிட்டு செயலாற்ற வேண்டிய அவசியத்தை உணர்ந்து நீங்கள் செயல்படுங்கள்.

தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை பணி செய்யும் சூழல் சிறப்பாக இருக்கும். எனினும் சில சவால்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். எனவே நீங்கள் உங்கள் தொழிலை கண்ணும் கருத்துமாக இருக்கவும்.

நிதி நிலைமையை பொருத்தவரை பணப்புழக்கம் சிறப்பாகவே இருக்கும். பண பரிவர்த்தனையில் கவனம் தேவை. பணத்தை சிக்கனமான முறையில் செலவு செய்யவும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறிது நேரம் ஓய்வெடுப்பதின் மூலம் உங்கள் ஆரோக்கியம் அதிகரிக்கலாம். இன்று ஆரோக்கியமாக இருக்க ஓய்வு அவசியம் தேவை.

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று உங்களின் அனுசரனையான அணுகுமுறையால் வெற்றிகளை ஈட்டுவீர்கள். உங்கள் உறவினர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் நல் உறவு ஏற்படும். இந்த நாளில் நீங்கள் வெற்றிகளை அதிக அளவு பார்க்கலாம்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை சிறப்பாகவே உள்ளது. பல தொழில் வாய்ப்புகள் வந்து சேரும். சக பணியாளர்கள் உங்கள் வேலைகளை முடிக்க உதவி செய்வார்கள்.

நிதி நிலைமையை பொறுத்தவரை முன்னேற்றமான நாள் என்று கூறலாம். அதிகளவு பணத்தை சம்பாதிக்க கூடிய தன்மை ஏற்படும். எனவே நிதி நிலைமையை பற்றி கவலை கொள்ள வேண்டாம்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சிறப்பான நாள் என்பதால் நீங்கள் சற்றும் அச்சப்பட வேண்டாம். உங்கள் துணையின் ஆரோக்கியத்திற்காக பல செலவு செய்ய நேரலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே இன்று உங்கள் குடும்பத்தின் வளர்ச்சிக்காக சில செயல்களை துவங்குவீர்கள். நீங்கள் நினைக்கும் காரியங்களில் நன்மையான பலன்கள் கிடைக்க புத்திசாலித்தனத்தோடு செயல்படுவது அவசியமாகும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை திறமைகளை சிறப்பாக பயன்படுத்தி உங்கள் பணியில் வெற்றி அடைவீர்கள். இன்று கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நிதி நிலைமையை பொறுத்தவரை சில தடைகளை சந்தித்த பிறகு உங்கள் நிதியில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சிறிய அளவில் கடன் வாங்க நேரிடும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு அதிக அளவு வளர்ச்சி காண்பதற்கான நாள் என்று கூறலாம். உங்கள் ஆற்றல் முழுவதையும் பயன்படுத்தி வெற்றியடைவீர்கள். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் நல்லுறவை பேணுவதின் மூலம் நன்மைகளை அதிகரித்துக் கொள்ளலாம்.

தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிகளை குறித்த நேரத்தில் முடித்து விடலாம் என்று நினைத்தாலும் பதட்டம் ஏற்பட்டு அதன் மூலம் பணிகள் தடைபடலாம். எனவே பதட்டத்தை குறைத்துக் கொள்ளுங்கள். குறித்த நேரத்தில் பணிகளை முடித்து விடலாம்.

நிதி நிலைமையை பொறுத்தவரை பூர்வீக சொத்து மற்றும் பங்கு வர்த்தகம் செய்வதின் மூலம் உங்களுக்கு பணவரவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. நிதிநிலைமையை சீரான முறையில் இருப்பதால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை சிறப்பாக நீங்கள் வைத்துக் கொள்ள  ஆரோக்கியத்தை ஆன்மீக சொற்பொழிவை கேட்கலாம். இதன் மூலம் உங்களுக்கு மன அமைதி ஏற்பட்டு ஆரோக்கியம் மேம்படும்.

மகரம்

மகர ராசி அன்பர்களே இன்றைய நாள் நீங்கள் புத்திசாலித்தனத்தை அதிகரித்துக் கொண்டால் எதையும் எளிதில் சாதித்து விடலாம். உங்கள் சுய முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் நீங்கள் இன்று ஈடுபடலாம்.

தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியில் லாபகரமான பலன்கள் கிடைக்கும். உங்களுக்கு திருப்தியான மனநிலை இருப்பதால் பணியில் அதிக அளவு நீங்கள் ஜெயிக்க கூடிய சூழ்நிலை உருவாகும்.

நிதி நிலமையை பொறுத்தவரை பணப்புழக்கம் சிறப்பாக உள்ளதால் நிதியின் ஸ்திரத்தன்மையை பராமரிக்க உகந்த நேரம் இது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சிறப்பான நாள் தேவையற்ற கவலைகளிலிருந்து விலகி உங்கள் வாழ்க்கையை சீரான முறையில் வாழுங்கள்.

கும்பம்

கும்பராசி நண்பர்களே இன்று நீங்கள் குடும்பத்தினரின் நலன் குறித்த எண்ணங்கள் பற்றிய சிந்தனை உங்களுடைய அதிகரித்து காணப்படும். உங்கள் நேரத்தின் ஒரு பகுதியை அதற்காக ஒதுக்கி விடுவீர்கள்.

தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பதட்டம் அதிகரித்து இருப்பதால் உங்களுக்கு கவனம் இன்மை பணியில் ஏற்படும். எனவே பணிகளை கவனத்தோடு செய்ய வேண்டும்.

நிதி நிலைமையை பொருத்தவரை இன்று அதிகளவு பணத்தை உங்களால் சம்பாதிக்க இயலும். சம்பாதித்த பணத்தை சேமிக்க கூடிய வாய்ப்புகள் உள்ளதால் சீரான முறையில் அதை பயன்படுத்திக் கொள்ளவும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சுமாரான நாள். சூடு சம்பந்தமான பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படும். எனவே குளிர்ச்சியான பண்டங்களை உண்டு உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.

மீனம்

மீன ராசி அன்பர்களே இன்று அதிக அளவு சிந்தனை உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்திவிடும். எனவே சிந்திக்காமல் அமைதியாக இருப்பதின் மூலம் உங்களுக்கு எல்லாம் நன்மைகள் முடியும்.

தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிகளில் பதட்டம்  ஏற்படும் அதுதான் வேணும். பொறுமையும், நேர்மையும் உங்களுக்கு வளர்ச்சியை உருவாக்கிக் கொடுக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை அதிக செலவுகள் காணப்படும். நிதியில் ஸ்திரதன்மையை பராமரிப்பது கடினம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்கள் ஆரோக்கியம் சுமாராக இருக்கும் கண்களை பரிசோதித்து கொள்வது மிகவும் சிறப்பானது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …