இன்றைய ராசிபலன் 20 மார்ச் 2023 திங்கட்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 20 மார்ச் 2023 திங்கட்கிழமை.ஜோதிடமானது பொதுவாக இந்திய ஜோதிடம் இன்று ஜோதிடம் வேத ஜோதிடம் இயன்று பல்வேறு வகைகளில் பேசப்பட்டு வருகிறது தமிழ்நாட்டில் தமிழ் ஜோதிடம் என்ற பெயரில் இது அழைக்கப்படுகிறது பொதுவாக ஜோதிடத்தில் சூரியனை வைத்து பலன் சொல்லும் முறையும் சந்திரனை வைத்து பலர் சொல்லக்கூடிய இரண்டு முறைகளை பின்பற்றி வருகிறார்கள் மேல்நாட்டில் ஜோதிடம் பார்ப்பவர்கள் சூரியனை அடிப்படையாகக் கொண்டு பலனை சொல்லுவார்கள் ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை சந்திரனை அடிப்படையாக வைத்து தான் ஜாதகத்தை கணித்து பலன்களை கூறுவார்கள்.

அந்த ஜாதகத்தின் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி நேயர்களே இன்றைய நாள் மகிழ்ச்சியுடன் கொண்டாட கூடிய நாளாக உங்களுக்கு அமைந்துள்ளது. வெற்றி பெறுவோம் என்ற உறுதியோடு நீங்கள் இருப்பதால் எதிலும் எளிதில் வெற்றி அடைவீர்கள். சிறப்பான நாளான இந்த நாளை உங்களது நாளாக மாற்றி விடுங்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிகளை நீங்கள் மகிழ்ச்சியோடு செய்து முடிப்பீர்கள். பொதுவான விஷயங்களை பகிர்ந்து கொள்வதின் மூலம் சக பணியாளர்களிடம் கூடுதல் ஒத்துழைப்பை பெற முடியும். எனவே தொழில் ஸ்தானம் என்று சிறப்பாக உள்ளது என கூறலாம்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை நிதி வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். உங்கள் கையில் இருக்கும் பணம் உங்களுக்கு மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கும். பணத்தை நீங்கள் பயனுள்ள வகையில் செலவு செய்து மகிழ்வீர்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சிறப்பான நாள் என்பதால் மன உறுதி நம்பிக்கை காரணமாக உங்கள் ஆரோக்கியம் மேலோங்கி இருக்கும்.எனவே ஆரோக்கியத்தை பற்றி அச்சப்பட வேண்டாம்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே என்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்த உகந்த நாள் முக்கிய முடிவுகளை நீங்கள் எடுப்பதின் மூலம் இன்று நல்ல நன்மைகள் கிடைக்கும். இந்த நாளை சிறப்பான நாளாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். புதிய வாய்ப்புகள் வந்து சேரும் உங்கள் முயற்சிக்கு கூடுதல் பலன் கிடைக்கும். சிறப்புடன் பணியாற்றி நல்ல பெயரை பெறுவீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை நிதி வளர்ச்சி சிறப்பாக இருப்பதால் உங்கள் சேமிப்பு உயரும். பணப்பழக்கம் அதிகரிக்கும் இந்த நாளை நீங்கள் திட்டமிட்டு பயன்படுத்தினால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உற்சாகமாகவும் ஆற்றலோடும் இருக்கக்கூடிய உங்களுக்கு ஆரோக்கியத்தில் எந்த சுணக்கமும் இல்லை. ஆரோக்கியம் மிகச் சிறப்பாக உள்ளது.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே இன்றைய நாள் எதிர்மறையான எண்ணங்களை நீங்கள் விளக்கிவிட்டு நேர்மறையாக எதையும் சிந்திக்க வேண்டும். தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் மட்டுமே உங்கள் வெற்றி இலக்குகளை அடைய முடியும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை தவறான புரிந்து உணர்வு காரணமாக சகப் பணியாளர்களோடு உங்களுடன் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளது. எனவே இது பணியின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதால் தொழிலில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது.

 நிதிநிலைமையை பொறுத்தவரை நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை குடும்பத்திற்காக செலவு செய்ய நேரிடும். இன்று கணிசமான தொகை இழப்புக்கான வாய்ப்புகள் உள்ளதால் பணத்தை செலவு செய்யும் போது கண்ணும் கருத்துமாக செலவு செய்யவும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு அஜீரண கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் உண்ணும் உணவில் அக்கறை காட்டுங்கள். மிதமான உணவுகளை எடுத்துக் கொள்வதின் மூலம் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று உங்களுக்கு தவறுகள் செய்ய வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் புத்திசாலித்தனத்துடன் உங்கள் செயல்களை மேற்கொள்வதன் மூலம் அந்த தவறுகளை நீங்கள் குறைக்க முடியும். பொறுமையும் உறுதியும் என்று அதிகளவு இருந்தால் மட்டும்தான் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இந்த பண்புகளை நீங்கள் வளர்த்துக் கொள்வதின் மூலம் இன்றைய நாளை சிறப்பான நாளாக மாற்றி அமைக்கலாம்.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிகள் சிறப்பாக இருக்கும். நீங்கள் பணிகளில் தவறுகள் செய்யக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் கவனத்தோடு இருக்கவும் இல்லையென்றால் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை செலவுகள் அதிகரிக்கும் நாள் என்பதால் இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்திக் கொடுக்கும். திட்டமிட்டு செலவுகளை பயனுள்ள வகையில் செலவு செய்யுங்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை மன உளைச்சல் காரணமாக இன்று தொண்டை வலி ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற ஆரோக்கிய சீர்கேட்டை சரி செய்ய யோகா மற்றும் உடற்பயிற்சியை தினமும் சிறிது நேரம் மேற்கொள்ளுங்கள்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று நீங்கள் தொலைதூர நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஆதரவை பெறுவீர்கள். அதிகளவு பயணங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுவீர்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். பணியில் உங்கள் முயற்சிக்கு நல்ல பெயர் வந்து சேரும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை அதிகளவு பணவரவு காணப்படும். சேமிப்பு உயரும் உங்கள் பணத்தை பயனுள்ள வகையில் நீங்கள் செலவுகளை செய்வீர்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை என்று ஆரோக்கியத்தை எந்தவிதமான குறையும் இருக்காது. கடினமான சூழ்நிலைகள் காணப்பட்டாலும் அவற்றை தகர்த்தெறிந்து உற்சாகத்தோடு இருப்பீர்கள். மனநிலையிலும் நல்ல தெளிவு இருக்கும். மகிழ்ச்சியோடு இருக்கக்கூடிய அற்புதமான நாளாக இன்று உங்களுக்கு உள்ளது.

கன்னி

கன்னி ராசி நேயர்களுக்கு இன்று வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் நாளாக உள்ளது. இந்த வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வதின் மூலம் நல்ல நல்ல பலன்கள் உங்களை வந்து சேரும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை என்று நீங்கள் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றுவீர்கள். உங்கள் புரிந்துணர்வு சக்தி மூலம் கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடித்து பலர் பாராட்டுகளை பெறக்கூடிய நாளாக இந்த நாள் விளங்குகிறது.

 நிதி நிலைமையை பொறுத்தவரை சீராக இருப்பதால் நிதியை பற்றிய குழப்பமே தேவையில்லை. இன்று உங்கள் குடும்ப நலனுக்காக பல செலவுகளை செய்வீர்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை சிறப்பாக இருக்கும். உங்களுடைய மன உறுதி காரணமாக ஆரோக்கியம் மிக நல்ல முறையில் பேணப்படும் எனவே அதைப் பற்றி நீங்கள் அச்சப்பட வேண்டாம்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று நீங்கள் தினசரி செயல்களையும் மேற்கொள்ளும்போது சற்று எச்சரிக்கையோடு இருப்பது மிகவும் அவசியம். உங்கள் வெற்றிப் பாதைக்கு குறுக்கே பதட்டமும் ஏமாற்றமும் இருப்பதால் நீங்கள் பொறுமையுடனும் நிதானத்துடனும் எதையும் கையாள வேண்டும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை குறித்த நேரத்தில் உங்கள் பணியை முடிப்பது கடினம். எனவே பணியை மேற்கொள்ளும் போது நீங்கள் முன்கூட்டியே துவங்குங்கள் அப்போது தாமதத்தை நீங்கள் தவிர்க்கலாம்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை உங்கள் குடும்பத்திற்காக நீங்கள் அதிக அளவு செலவுகளை செய்வீர்கள். இது வீண் செலவாக இருக்கும் திட்டமிட்டு கட்டுப்பாடுடன் செலவுகளை செய்வது மிகவும் நல்லது. அதன் மூலம் நீங்கள் உங்கள் பணத்தை சேமிக்க இயலும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை கை கால்களில் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்திக் கொடுக்கும் எனவே ஆரோக்கியத்தில் நீங்கள் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே இன்று அதிக கவலையுடன் நீங்கள் இருப்பீர்கள். உற்சாகமாக இருப்பதற்கு முயற்சிகள் செய்யுங்கள். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வதின் மூலம் நீங்கள் உற்சாகமாக இருக்க முடியும்.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிகளை முடிப்பதற்கு முன்பு கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பணிகள் கடினமாக இருக்கும். தவறுகள் நேர வாய்ப்புகள் இருப்பதால் திட்டமிட்டு பணிகளை செய்வது அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்த வரை இன்று பண இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். எனவே கவனத்தோடு பணத்தை கையாள வேண்டும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை நீங்கள் யோகா உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். இருமல் பிரச்சனையால் அவதிகள் ஏற்படலாம். எனவே ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்தவும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே இன்று நீங்கள் சுய முயற்சியின் மூலம் உங்கள் இலக்குகளை எளிதில் அடைய முடியும். எந்த செயலையும் நம்பிக்கையோடு துவங்குங்கள். நிச்சயம் நன்மை ஏற்படும். உற்சாகத்தோடு உங்கள் மனநிலையை வைத்துக் கொள்ளுங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை மேலதிகாரிகளின் நம்பிக்கையை நீங்கள் எளிதில் பெற்று விடுவீர்கள். கடின உழைப்புக்கான பாராட்டுக்கள் கிடைக்கும். எனவே தொழில் ஸ்தானத்தை பற்றி கவலை கொள்ள வேண்டாம்.

 நிதி நிலைமையை பற்றி பார்க்கும் போது பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும் சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் முதல் பங்கு சந்தைகளில் எப்படி பணத்தை முதலீடு செய்யலாம் என்பதை பற்றி யோசிக்கவும்.

ஆரோக்கியத்தை பற்றி இன்று எந்த பிரச்சனையும் இல்லை. நீங்கள்  உற்சாகத்தோடும் இருப்பீர்கள். எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

மகரம்

மகர ராசி நேயர்களே என்று கடினமான சவால்களை சந்திக்கக்கூடிய நாள் ஆன்மீக ஈடுபாடு மட்டுமே உங்களுக்கு ஆறுதலை ஏற்படுத்திக் கொடுக்கும். எனவே உங்கள் மனதை ஆன்மீகத்தின் பக்கம் திருப்பி விடுங்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிகள் அதிகமாக இருக்கும் சிலர் பணிகளை சவாலாக நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை நிலவுவதால் உங்களுக்கு அது கவலையை ஏற்படுத்தும். எனினும் நீங்கள் இறை நம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி மேல் வெற்றி பெற முடியும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை கையில் பணப்புழக்கம் அதிக அளவு இல்லை மருத்துவச் செலவுகளை சந்திக்க வேண்டி இருப்பதால் கையில் இருக்கும் பணம் சிறிது கரைய நேரிடும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று தோல் எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பத்தியமான உணவுகளை உட்கொள்ளுங்கள். குறிப்பாக காரம் அதிகம் உள்ள உணவுகளை தவிர்த்து விடுங்கள். இதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று முக்கியமான விஷயங்களை நீங்கள் தள்ளி போட்டு விடுங்கள். சுய முயற்சியில் நீங்கள் மனப்போராட்டங்களை சந்திக்க நேரிடும். எனவே மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை தவறுகள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உங்கள் மேல் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். எனவே கண்ணும் கருத்துமாக தொழிலை கவனிக்கவும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்காது என்று ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். எனவே கவனத்தோடு நீங்கள் இருக்க வேண்டும். பணத்தை கட்டாயம் திட்டமிட்டு செலவிடுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் பாதிப்புகள் ஏற்படலாம். வறுத்த காரசார உணவுகளை தவிர்த்து விடுவதின் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.

மீனம்

மீன ராசி அன்பர்களே என்று சாதகமான நாளில்லை. கவலையோடு இருப்பீர்கள். எனவே கவனத்தோடு இருங்கள். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வது உங்களுக்கு நன்மை தரும்.

 தொழிலைப் பொறுத்தவரை என்று பணிகளை கையாளுவது அவ்வளவு எளிதாக இருக்காது. சுமூகமான நாளாக இருக்க நீங்கள் உங்கள் சௌரியங்களை விட்டுக் கொடுத்த நேரிடும். பணிகளை கவனத்தோடும் நம்பிக்கையோடும் மேற்கொள்ளுங்கள்.

நிதி நிலைமையை பொறுத்தவரையில் சிறப்பாக இருக்காது. சேமிப்புக்கான வாய்ப்பு குறைவு.இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்திக் கொடுக்கும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றிய கவலை இருக்கும். உங்கள் குழந்தைக்கு தகுந்த மருத்துவம் தேவை. என்பதை புரிந்து கொண்டு உரிய ஆகாரங்களை கொடுத்து குழந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். உங்களது ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் சற்று கவனத்தோடு இருப்பதும் நல்லது.

--- Advertisement ---

Check Also

ratan tata

ரத்தன் டாடாவின் மோசமான அந்த பழக்கம் என்ன மனுஷன்யா நீ.. டாடா இறப்பதற்கு பின் தெரிந்த உண்மை..

இருந்தாலும் மறைந்தாலும் ஊர் சொல்ல வேண்டும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நம்மை விட்டு பிரிந்து சென்ற இந்திய தொழில் …