Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 21 பிப்ரவரி 2023 செவ்வாய்கிழமை.மனிதன் தான் பிறந்து வளர்ந்து எண்ணற்ற இன்னல்களையும் எளிதாக கடக்க கூடிய வழிகளை நமது முன்னோர்கள் நமக்கு முன்கூட்டியே அறிவிக்க தான் ஜாதகத்தை உருவாக்கினார்களா?
இந்த ஜோதிடக் கலை மூலம் நீங்கள் உங்கள் எதிர்கால பலனை அறிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் இறந்த காலத்தில் நீங்கள் செய்த தர்ம வினைகளுக்கு ஏற்ப பல பரிகாரங்களை செய்து நிகழ்கால வாழ்வில் என் கூற்று வாழ்வதற்கான வழிமுறைகளை வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள் இதனை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையை வளமாக நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.
மேஷம்
தொட்டதெல்லாம் உடனே துலங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கக்கூடிய மேஷ ராசி அன்பர்களே, இன்று உங்கள் நலனை மேம்படுத்திக் கொள்ளக்கூடிய அற்புதமான நாளாக இருப்பதால் பயனுள்ள முடிவுகளை இன்று நீங்கள் எடுத்து விடுங்கள்.இன்று திருப்தியான நிலை இருப்பதால் திடமான முடிவுகளை எடுப்பது உங்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
தொழிலைப் பொறுத்தவரை பணியிடத்தில் இன்று சாதகமான நிலை நிலவுவதால் உங்கள் மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டுதல் மற்றும் நன் மதிப்பை பெறுவீர்கள். தொழில் ஸ்தானம் ஸ்திறமாக உள்ளது.
நிதி நிலைமையை பொருத்தவரை கையில் போதுமான அளவு பணம் இருப்பதால் திருப்திகரமாக இருக்கும் சேமிப்புகள் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று சிறப்பான நாள் என்பதால் உங்களது ஆரோக்கியம் திறமாகவும் திடமாகவும் இருப்பதால் கவலை வேண்டாம்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே இன்று சாதகமான நாளாக இந்த நாளை மாற்ற வேண்டுமென்று நீங்கள் கடுமையான முயற்சிகளை எடுக்க வேண்டும். தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை உங்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது. நீங்கள் தைரியத்துடனும் உறுதியுடனும் உங்கள் பணிகளை இன்று சிறப்பாக முடிக்கலாம்.
நிதிநிலைமையை பொறுத்தவரை இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருப்பதால் பண விஷயத்தில் நீங்கள் பயனுள்ள முடிவுகளை எடுக்கலாம். வரவு உங்களுக்கு சாதகமாகவே உள்ளது.
அதுபோலவே ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால் உங்கள் மனதிலும் எண்ணத்திலும் நம்பிக்கை மேலோங்கி காணப்படும். இதனால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே இன்று வழிபாடு, பிரார்த்தனை என நீங்கள் கடவுள் வழிபாட்டில் அதிகளவு புத்தியை செலுத்துவீர்கள். இதன் மூலம் உங்களுக்கு ஆறுதல் மகிழ்ச்சி அதிகளவு கிடைக்கும். கடவுள் வழிபாடு செய்வதோடு மட்டுமல்லாமல் சில தொண்டு செயல்களில் ஈடுபதின் ஈடுபடுவதன் மூலம் உங்கள் மன நிலையில் உற்சாகம் ஏற்படும்.
தொழிலைப் பொறுத்தவரை பயணங்கள் ஏற்படக்கூடிய காலகட்டங்கள் இன்று உள்ளது. உங்கள் முயற்சிக்கு சிறந்த பலன் கிடைக்கும். நிதி நிலைமையை பொறுத்தவரை மிதமான நிதி வளர்ச்சி இருக்கும். செலவுகள் ஏற்படும் வரவும் செலவும் சரியாக இருக்கும்.
ஆரோக்கியத்தை பொறுத்தவரை பெரிய பிரச்சனைகள் ஏதுமில்லை சிறப்பாக ஆரோக்கியம் இருப்பதால் கவலை கொள்ள வேண்டாம்.
கடகம்
கடக ராசியின் நேயர்களே இன்று திரைப்படம், பாடல் இசைகளை கேட்டல் போன்றவற்றில் உங்கள் ஈடுபாடு அதிக அளவு இருக்கும். அமைதியும் ஆற்றலும் உங்களுள் பிறக்கும். தொழிலைப் பொறுத்தவரை பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனத்தோடு பணியாற்றுவது அவசியம்.
இல்லை எனில் மேல் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். இதனால் உங்களுக்கு கவலை ஏற்படும். எனவே தொழிற் ஸ்தானத்தில் கவனத்தை செலுத்தவும். நிதி நிலைமையை பொருத்தவரை இன்று வளர்ச்சிக்குரிய நாள் இல்லை.
பணத்தை கையாளும்போது முன் எச்சரிக்கையோடு கையாள வேண்டும்.மேலும் செலவுகள் அதிகரிக்கலாம். உங்கள் தாயாரின் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டி இருக்கும். இதன் மூலம் உங்களுக்கு மன வருத்தம் ஏற்படலாம். எனவே ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்தவும்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் சில மாற்றங்களை கொண்டு வந்து சேர்க்கும்.நீங்கள் சூழ்நிலையை சமாளித்து உங்களுக்கு சாதகமாக மாற்ற முயற்சி செய்வீர்கள். எதிலும் தைரியத்துடன் செயல்படுங்கள். பயணங்கள் மூலம் உங்களுக்கு நன்மை ஏற்படலாம்.
தொழிலைப் பொறுத்தவரை பணிபுரியும் இடத்தில் நேர்மை, அர்ப்பணிப்பு காரணமாக நன்மை கிடைக்கும். பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ள வேண்டும். நிதி நிலைமையை பொறுத்தவரை வரவும், செலவும் கலந்து காணப்படும்.
ஆனால் பண வரவை விட செலவுகளை அதிகரித்து இருக்கும். உடல் நிலையை பொறுத்த வரை உங்கள் துணையின் உடல்நிலை பற்றிய கவலை மேலோங்கும். அதற்காக மருத்துவ செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்று பலன்கள் பொருத்தவரை இரண்டும் கலந்து இருக்கும் என்று சொல்லக்கூடிய சூழ்நிலைதான் உள்ளது. எனவே எந்த செயலையும் செய்வதற்கு முன்பு பலமுறை யோசித்து செயல்படுங்கள். உங்கள் திறமையின் மீது நம்பிக்கை இருப்பது நல்லது.
எனினும் கவனம் தேவை எந்த ஒரு செயலையும் செய்யும்போது நீங்கள் அதீத கவனத்துடன் செயல்பட வேண்டும். தொழிலைப் பொறுத்தவரை இன்று பணியிடங்களில் சவால் நிறைந்து இருக்கும் என்பதால் பணிகளை முடிக்க நீங்கள் தீவிரம் காட்டுவீர்கள். புத்திசாலித்தனத்தோடு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வெற்றிகளை உங்களதாக்கிக் கொள்ளலாம்.
நிதி நிலைமையை பொறுத்தவரை சிறப்பாக இருக்கும் ஆனால் நீங்கள் குடும்பத்திற்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டி இருக்கும். செலவு அதிகரிப்பதால் பண வரவு பற்றிய சிந்தனையில் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படாது. ஆரோக்கியத்தை பொருத்தவரை எந்தவிதமான பிரச்சனையும் இல்லாத சிறப்பான நாளாக இருப்பதால் ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்.
துலாம்
அனைவருக்கும் உதவ வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டிருக்கக் கூடிய துலாம் ராசி நேயர்களே, இன்று உங்கள் செயல்களை மேற்கொள்ளும் போது புத்திசாலித்தனத்தை கையாள வேண்டும் என்பதை மறக்க வேண்டாம். பதட்டமான சூழ்நிலை காரணமாக பல பாதிப்புகள் வந்து சேர்வதால் பதட்டத்தை தவிர்த்துக் கொள்ளவும்.
தொழிலைப் பொறுத்தவரை சக பணியாளர்கள் வளர்ச்சி பெற்று முன் நிலையில் இருப்பார்கள். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். எனவே தொழில் ஸ்தானத்தில் கவனத்தை செலுத்துவது அவசியம்.
நிதி நிலைமையில் பொருத்தவரை பணவரவு செலவு இரண்டும் கலந்து காணப்படுவதால் பண பரிவர்த்தனைகளில் நீங்கள் ஆர்வம் காட்டுவீர்கள். பணத்தை பாதுகாக்க சேமிப்பை உயர்த்த எப்படி செயல்படு செயல்படுவது என்பது பற்றி திட்டங்களை நீங்கள் போடலாம்.
ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று செரிமான பிரச்சனைகள் அதிக அளவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உண்ணக்கூடிய உணவு பற்றிய விஷயத்தில் நீங்கள் கவனமாக இருப்பதோடு ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே இன்று உங்கள் தாயின் ஆதரவு உங்களுக்கு பரிபூரணமாக கிடைத்திருப்பதால் மகிழ்ச்சி மேலோங்கும். கடினமாக உழைத்து எல்லா காரியங்களிலும் வெற்றியைத் பெற முயற்சி செய்வீர்கள். எனினும் பொறுமை மிகவும் அவசியம். நீங்கள் காயம் அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.
தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை இன்று நீங்கள் எடுத்திருக்கும் பணிகளை அதிக முயற்சி கொண்டு முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.தொழிலில் கஷ்டமான சூழ்நிலையை நீங்கள் உணர்வீர்கள். எனவே உங்கள் பணிகளை திட்டமிட்டு செயலாற்றுங்கள்.
நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று வளர்ச்சி குறைவாக இருக்கும் பணப்புழக்கம் அதிகம் இல்லை. பண இழப்புக்கான வாய்ப்புகள் உள்ளதால் இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.
ஆரோக்கியத்தில் உங்கள் தாயாரின் உடல் நிலையில் அக்கறை செலுத்த வேண்டிய நேரம் இது அவர்களுக்காக செலவுகள் செய்ய நேரிடலாம். எனவே கண்ணும் கருத்துமாக ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்துவது நல்லது.
தனுசு
தனுசு ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு பலன்கள் அதிக அளவு உள்ளதால் பூர்வீக சொத்து மூலம் பணம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. உங்கள் செயல்களில் கவனத்தோடு கையாண்டால் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.
தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை கடினமான முயற்சிகள் மேற்கொள்வதின் மூலம் தான் பணியில் சிறப்பான வளர்ச்சியை அடைய முடியும். சில சமயம் பணியின் போது சிறு சிறு தடைகளை நீங்கள் சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகளவு உள்ளது. எனவே தொழிலில் கவனத்தை செலுத்துவது அவசியம் தேவை.
நிதி நிலைமையை பொறுத்தவரை சிறப்பாக இருக்கும் காப்பீடு போன்றவற்றை நீங்கள் முதலீடு செய்யலாம். கடன் வகையில் பணம் கிடைக்கக்கூடிய வாய்ப்புள்ளதால் எளிதில் கடன்கள் வசூல் ஆகும்.
ஆரோக்கியத்தை பொருத்தவரை எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. உங்கள் ஆரோக்கியம் மேம்பட்டு காணப்படுவதால் கவலை தேவையில்லை.
மகரம்
மகர ராசி நேயர்களே இன்று புதிய தொடர்புகள் உங்களுக்கு ஏற்படும். அதன் மூலம் நல்ல முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் தொடர்ந்து பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு நன்மையை பெறக்கூடிய அமைப்பு இன்றைய நாளில் உங்களுக்கு உள்ளது.
தொழிலைப் பொறுத்தவரை பணி செய்யும் இடத்தில் நீங்கள் அனுசரித்து செல்வதின் மூலம் முன்னேற்றமான பலன்களை அடைய முடியும். எனவே நீங்கள் தொழிலில் ஆர்வத்தோடு இருங்கள் பணி தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள சூழ்நிலை வாய்த்தால் கண்டிப்பாக அந்த பயணத்தை நீங்கள் மேற்கொள்ளலாம். அதன் மூலம் உங்களுக்கு நன்மைதான் ஏற்படும்.
நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று சிறப்பாக இருப்பதால் சிறிதளவு பணத்தை சேமிப்பதற்கு நீங்கள் முயற்சி செய்வீர்கள். செலவு அதிக அளவு இன்று ஆகாது. ஆரோக்கியத்தை பொருத்தவரை சிரத்தன்மையோடு இருப்பீர்கள் ஆரோக்கியம் மேளம் இருப்பதால் அமைதி உங்களிடம் இருக்கும்.
கும்பம்
கும்ப ராசி நேயர்களுக்கு இன்று பயணம் செய்யக்கூடிய நாளாக இருக்கிறது எதையோ எண்ணி நீங்கள் மனதில் கவலை அடைவீர்கள். கவலைகளை எல்லாம் தூக்கி போட்டு விட்டு நீங்கள் இயல்பான நிலைக்கு திரும்பி உங்கள் பணிகளை நல்ல முறையில் செய்யலாம்.
தொழிலைப் பொறுத்தவரை என்று சில தடைகளை நீங்கள் சந்திக்க வேண்டியுள்ளது. பணியிடத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. எனவே கவனத்தோடு பணியாற்றுவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
நிதி நிலைமையை பொறுத்தவரை பண வரவுக்கு இன்றைய நாள் சாதகமாக இல்லை. இன்று கடன் பிரச்சனையால் அவதிப்பட நேரிடலாம். எனவே இது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை சளி மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்துவது கட்டாயம் என்று கூறலாம்.
மீனம்
அற்புதமான நாளாக இந்த நாள் மீன ராசி நேயர்களுக்கு விளங்குவதால் இன்று முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாளாக இருக்குமா என்றால் அந்த நாள் இந்த நாள் அல்ல என்று தான் கூற வேண்டும். நீங்கள் தியானம் மற்றும் யோகா மூலம் ஆறுகளை பெற முடியும்.
தொழிலைப் பொறுத்தவரை பணியில் சுமாரான வளர்ச்சி காணப்படும் உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாமல் வருத்தத்தில் இருப்பீர்கள்.
நிதி நிலைமையை பொறுத்தவரை பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் பணத்தை கவனமாக கையாள வேண்டும். ஆரோக்கியத்திலும் அதுபோல சிறப்பான நாளாக இந்த நாள் இல்லை என்பதால் கை கால்களில் வலிகள் ஏற்படும். எனவே ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.