இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2023 வெள்ளிக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil :இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2023 வெள்ளிக்கிழமை. வாழ்க்கையில் நாம் நினைத்ததை எல்லாம் நினைத்தபடி நடக்குமா என்பது சந்தேகம் தான் ஒருவர் எவ்வளவு முயற்சி செய்தாலும் அவரது முயற்சியில் சரியான பலன் கிடைக்கவில்லை என்றால் அதற்கு அடிப்படையாக இருப்பது அவர்களது கால நேரம் என்றுதான் கூறுவார்கள்.

 அப்படிப்பட்ட கால நேரத்தை கணித்து சொல்லக்கூடிய திறமை மிக்க ஜோதிடத்தை ஒவ்வொருவரும் தங்களது கஷ்ட காலங்களில் பயன்படுத்தி வருகிறார்கள். தனது ஜனன ஜாதகத்தை  அடிப்படையாகக் கொண்டு ஏற்படும் கஷ்டங்களுக்கு காரணம் என்ன அதற்கான நிவாரணம் என்ன என்பதை தெரிந்து கொண்டு அதற்குரிய பரிகாரங்களை செய்து அதில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள்.அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே இன்று மந்தமான நாளாக இருந்தாலும் நீங்கள் எதார்த்தமான நடைமுறையை பின்பற்றுவதன் மூலம் உங்கள் இலக்குகளை எளிதில் அடையலாம்.நீங்கள் சோர்வாக இருக்காதீர்கள். சோர்வை விரட்டியடித்து மகிழ்ச்சியோடு இருக்க முயற்சி செய்யுங்கள்.

தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணிசுமை அதிகமாக இருக்கும். சவாலான சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் பணியில் கவனம் தேவை.

நிதி நிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் அதிகமாக இருக்காது. மருத்துவச் செலவுகளை தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று தலைவலிகள் அவதிப்பட நேரிடலாம். எனவே ரிலாக்ஸ் ஆக இருப்பதின் மூலம் உங்களுக்கு மன அமைதி ஏற்பட்டு தலைவலி குறையும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே இன்று இழப்புக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பெரிய அளவில் நீங்கள் சிந்திப்பதோ முடிவுகளை எடுப்பதோ இன்று அவ்வளவு சிறப்பாக இருக்காது. எதிலும் பொறுமையையும் உறுதியையும் கடைப்பிடிக்க வேண்டிய நாள் என்பதை புரிந்து செயல்படுங்கள்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை நேர்மறையான எண்ணத்தோடு நீங்கள் பணிகளை செய்ய வேண்டும். இல்லை என்றால் உங்கள் வேலையில் தடங்கல்கள் ஏற்படுவதோடு உங்கள் பணி உங்களுக்கு திருப்தி தராது.

நிதி நிலைமையை பொறுத்தவரை பண பற்றாக்குறை அதிகளவு இருக்கும். சேமிக்கும் முயற்சியில் ஈடுபடுவதற்கான அவசியத்தை புரிந்து கொள்ளுங்கள். கையில் இருக்கும் பணம் கணிசமான அளவு குறையும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சுமாரான நாளாக உள்ளது. கை, கால்களில் வலி ஏற்படலாம். யோகா மற்றும் தியானத்தை மேற்கொள்வது சிறப்பாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று உங்கள் ஆசைகளை போர்த்தி செய்து கொள்வதற்கு உகந்த நாளாக இருக்கும். சுய வளர்ச்சியில் சற்று கவனம் செலுத்தினால் சிறப்பாக இருக்கும். உங்கள் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இன்று அதிக அளவு காணப்படுகிறது.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை வேலை பளு அதிகமாக இருக்கும். அதை சரி செய்ய நீங்கள் திட்டமிட்டு பணிகளை செய்வது சிறப்பாக அமையும்.

நிதி நிலைமையை பொருத்தவரை இன்று சாதகமாக இல்லை. இழப்புக்களை தவிர்க்க கட்டுப்பாடுடன் பணத்தை செலவு செய்ய வேண்டும். எனவே நிதியில் நீங்கள் சிக்கனமாக இருப்பது நல்லது.

ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சுமாரான நாள். குறித்த நேரத்தில் உணவு அருந்துவதின் மூலம் ஜீரணக் கோளாறுகளிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று எந்த ஒரு செயலையும் நீங்கள் கவனமாக செய்ய வேண்டும். இதன் மூலம் லாபம் அல்லது இழப்பு இரண்டும் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உள்ளதால் கண்ணும் கருத்துமாக இன்று இருக்க வேண்டும்.

தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வீர்கள் உங்களது தீர்மானமான முயற்சியின் மூலம் அடுத்தடுத்த வெற்றிகள் வந்து சேரும்.மேலும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

நிதி நிலைமையை பொறுத்தவரை போதிய அளவு பணப்புழக்கம் இருக்கும். வங்கிகளில் நீங்கள் சேமிக்க கூடிய அளவுக்கு பண வரவு கிடைக்கும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று மிக சிறப்பாக உள்ளது மன அழுத்தம் இல்லாமல் இருப்பதால் உங்கள் ஆரோக்கியம் அதிகரித்து இருக்கும். எனவே ஆரோக்கியத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்.

சிம்மம்

சிம்மராசி நண்பர்களே இன்று நீங்கள் வெற்றிகரமாக செயலாற்ற வேண்டுமென்றால் திட்டமிடுதல் அவசியமானது. நீங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது போல ஒரு உணர்வு உங்களுக்குள் இருக்கும். மேலும் உங்களுக்குள்  நேர்மறை எண்ணத்தை அவசியம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காது. சக பணியாளர்களுடன் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வேலையின் போது சில இடர்களை சந்திக்க நேரிடலாம். எனவே தொழிலில் கவனத்தை செலுத்துங்கள்.

நிதி நிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் சீராக இருக்கும். வரவும், செலவும் கலந்து காணப்படும். சிக்கனமாக இருந்து பணத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பீர்கள். மன அழுத்தம் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வது மிகவும் நல்லது. இதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் மேன்மை அடையும்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இல்லை. அதிர்ஷ்டத்தை விட உழைப்பின் மீது நம்பிக்கை வைத்துத்தான் நீங்கள் எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.நீங்கள் முக்கியமான முடிவுகளை இன்று எடுப்பதை  தவிர்த்து விடுங்கள்.

தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியிடத்தில் உங்களது மேல் அதிகாரிகளுடன் பிரச்சனைகள் உருவாகும். உங்களது வேலைக்கான அங்கீகாரம் கிடைக்காது. இதனால் நீங்கள் வருத்தப்படுவீர்கள்.

நிதி நிலைமையை பொறுத்தவரை என்று என்று சாதகமாக இல்லை செலவுகள் அதிகமாக ஏற்படும் எனவே சிக்கனத்தை கடைபிடிப்பது அவசியமாகும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை தாய் மற்றும் தந்தையாரின் உடல் நிலையை பற்றி கவலை இருக்கும். அவர்களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி வரும் எனவே அக்கிரியாகவும் கவனத்தோடும் அவர்களை பார்த்துக் கொள்வது அவசியமாகும்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே நீங்கள் பேசும் வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நட்பான முறையை நீங்கள் மேற்கொள்ளும் போது உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். அனைத்து விஷயங்களும் சாதகமாக அமைய சமநிலையோடு நட்பு முறையில் எல்லாவற்றையும் அணுகவும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணி சுமை அதிகமாக இருக்கும் ஓய்வு என்பது கிடைக்காது. வேலைகளை திட்டமிட்டு செய்வதின் மூலம் எளிதில் முடிக்கலாம்.

நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று சாதகமான நாள் இல்லை செலவுகள் அதிகரித்து காணப்படுகிறது. எனவே உங்கள் பணம் எளிதில் கரையும். சிக்கனமாக செலவுகளை செய்ய திட்டமிடங்கள்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்றைய நாள் முழுவதுமே அசௌரியமாக இருக்கும். மன அழுத்தம் ஏற்பட்டு அதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களில் இன்றைய நாள் சில ஏமாற்றங்களை சந்திக்க கூடிய நாளாக இருக்கும். உங்கள் லட்சியங்களை அடைவதில் தடைகள் வந்து சேரும். எனவே எதையும் பொறுமையோடு அணுகுவது நல்லது.

தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிச்சுமை அதிகமாக இருக்கும். பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க திட்டமிடுதல் அவசியமாகும். பணிகளில் தவறு நேரிட வாய்ப்புகள் உள்ளதால் கண்ணும் கருத்துமாக பணியை செய்ய வேண்டும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் மிதமான அளவு இருக்கும். பணத்தை தக்க வைத்துக் கொள்வது கடினம் என்பதால் திட்டமிட்டு செலவுகளை செய்யவும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்கள் வாழ்க்கை துணையின் உடல் நலத்துக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். எனவே நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு அவ்வளவு சிறப்பான நான் இல்லை என்பதால் நீங்கள் எதிலும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். உங்கள் இலக்குகளை அடைய போராட வேண்டி இருக்கும். பொறுமையும் அமைதியும் கட்டாயம் உங்களுக்கு இன்று தேவை.

தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை சற்று பணியில் பின்தங்கி தான் இருப்பீர்கள். உங்கள் மேல் அதிகாரிகளிடம் நட்புகளை எடுக்க வாய்ப்புகள் இல்லை. எனவே பணியில் கண்ணும் கருத்துமாக இருக்கவும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை உங்கள் தேவைகளை சமாளிக்க சிறிய அளவிலான கடன்களை வாங்கலாம். எனவே பணத்தை சிக்கனமான முறையில் செலவு செய்ய என்ன வழி என்பதை யோசிங்கள்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை எண்ணெய் பதார்த்தங்களை தவிர்த்து விடுங்கள் தோல் எரிசலால் பாதிப்புகள் வந்து சேர வாய்ப்புகள் உள்ளதால் கண்ணும் கருத்துமாக ஆரோக்கியத்தில் இருப்பது அவசியம்.

மகரம்

மகர ராசி நண்பர்களே இன்று உங்கள் வசதிகளை பெருக்கிக் கொள்ள நினைப்பீர்கள்.உங்கள் இலக்கை அமைதியை நிலைநாட்ட நீங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள். இந்த நாளை நீங்கள் சிறப்பான நாளாக மாற்ற இறைவழிபாட்டில் உங்கள் மனதை செலுத்துவது நல்லது.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை உங்களுக்கு கீழ் பணிபுரிவோர் தவறுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதால் அதன்மூலம் உங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படலாம்.எனவே கவனக்குறைவாக இருக்க வேண்டாம்.தொழிலில் கவனத்தை செலுத்தவும்.

நிதி நிலைமையை  பொருத்தவரை லாபகரமான நாள் இல்லை.மேலும் வரவை விட செலவு அதிகமாக இருக்கும். பண பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு பதட்டம் ஏற்படலாம். இதன் காரணமாக தலைவலி ஏற்படும். தியானத்தை மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று உங்களுடைய உறுதியான முயற்சியின் மூலம் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் அதிர்ஷ்டகரமான நாளாக இருப்பதால் இந்த நாளை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். உங்கள் முயற்சிகளில் பல சாதனைகளை நீங்கள் நிகழ்த்தக்கூடிய நாள் என்று கூறலாம்.

நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று சாதகமான நாளாகவே உள்ளது. குடும்ப விஷயங்களுக்காக பணத்தை நீங்கள் செலவு செய்து மகிழ்வீர்கள்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை மிகவும் சிறப்பான நாள் என்று கூறலாம். எனவே ஆரோக்கியத்தில் எந்தவிதமான குறைபாடும் இல்லை ஆரோக்கியம் சீராகவே இருக்கும்.

மீனம்

மீன ராசி அன்பர்களே இன்று உணர்ச்சிபூர்வமாக இருப்பதை விடுத்துவிட்டு எதார்த்தமாக இருக்க வேண்டியது அவசியம். உங்களை பாதிக்கக்கூடிய எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்.

 தொழிலைப் பொறுத்தவரை இன்று வேலை சம்பந்தமாக பயணம் செல்லக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு வெற்றி கிடைப்பதோடு அதிக அளவு நன்மையும் கிடைக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை அதிர்ஷ்டமான நாள்.மேலும் நிறைய பணம் சம்பாதித்தீர்கள் . இப்படி சம்பாதித்த பணத்தை ஆன்மீக காரியங்களுக்காக பயன்படுத்துவீர்கள்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இன்றைய நாளை சிறப்பான முறையில் நீங்கள் கழிப்பீர்கள். எனவே ஆரோக்கியத்தை பற்றி அச்சப்பட வேண்டாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …