ராசிபலன் 25 ஏப்ரல் 2023 – செவ்வாய்க்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2023 செவ்வாய்க்கிழமை. நடப்பவை எல்லாம் நல்லதாகவே நடக்க வேண்டும். அதற்காக உங்கள் மனதை இறை வழிபாடு ஈடுபடுத்துவது மிகவும் நல்லது. நாளை என்ன நடக்கும் என்பதை நீங்கள் உங்கள் ஜாதகத்தைக் கொண்டு கணித்து விடலாம். அவ்வாறு உங்கள் ஜாதகத்தில் கூறப்பட்டிருக்கும் தகவல்களை வைத்து நீங்கள் எதையும் திட்டமிட்டு செய்வதின் மூலம் நன்மைகள் ஏற்படும்.

அது மட்டுமல்லாமல் நிகழக் கூடியவற்றை முன்பே நாம் அறிந்து கொள்வதின் மூலம் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் திட்டமிடுதல் மூலம் வரக்கூடிய அசுப பலன்கள் இல் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும். அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. எனவே எல்லோரையும் அனுசரித்து செல்வது மிகவும் அவசியமானது என்பதை உணர்ந்து செயல்படுவது மிகவும் நல்லது.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியிடச் சூழல் என்று கடுமையாக இருப்பதால் உங்கள் பணிகளை சிறப்பாக செய்ய நீங்கள் உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த ஒரு பணியும் செய்வதற்கு முன்பு திட்டமிடுதல் என்பது அவசியமானது.

நிதிநிலைமையை பொறுத்தவரை நிதி வளர்ச்சியில் சிறப்பாக இல்லை. பண இழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் நீங்கள் கண்ணும் கருத்துமாக பணத்தை செலவு செய்வதில் சிக்கனத்தையும் கடைபிடிப்பது அவசியமாக இருக்கும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சிறப்பாக இல்லை. தலைவலி, முதுகு வலி போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தியானத்தை மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்க முடியும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே இன்று சிறப்பான நாளாக உங்களுக்கு இருக்கும். உங்களது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற கூடிய வகையில் இன்றைய தினம் உங்களுக்கு அமைந்திருப்பதால் நேர்மையான முயற்சிகள் செய்து நல்ல பலன்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். இன்று ஆற அமர ஓய்வெடுக்க உங்களுக்கு நேரம் கிடைக்கும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிச் சூழல் என்று சிறப்பாக இருக்கும். நீங்கள் சிறப்பாக பணியாற்றி உங்கள் திறமைகளை நிரூபிப்பீர்கள். இதன் மூலம் மேல் அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும்.

நிதி நிலைமையை பொருத்தவரை வளர்ச்சி அபாரமாகவே உள்ளது என்று சொல்லலாம். தொலைதூரத்திலிருந்து நீண்ட நாள் நிலுவையில் இருந்த பணம் உங்களுக்கு வந்து சேரும். எனவே நிதி பற்றாக்குறை இல்லாத நாள்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறப்புடன் இருக்கும். உங்கள் தைரியமான மனநிலை உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்யும். எனவே ஆரோக்கியத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்.

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே இன்று சமூகமான நாளாக உங்களுக்கு இல்லை. நீங்கள் தொண்டு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது நல்லது. இதுபோலன் மூலம் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை சக பணியாளர்களிடம் சகஜமான உறவை மேற்கொள்ள முடியாது. நீங்கள் எதையும் பொருட்படுத்தாமல் உங்கள் பணிகளை செய்யும் போது தான் அதை தவறு நிகழாமல் பார்த்துக் கொள்ள முடியும். எனவே செய்யும் தொழிலில் அதீத கவனம் தேவை.

நிதி நிலைமையை பொறுத்தவரை குடும்பத்திற்கு தேவைப்படும் பொருட்களை வாங்கி கொடுக்க நீங்கள்  செலவுகளை செய்யலாம் .மேலும் அதற்காக கடனை வாங்கவும் முயற்சி செய்வீர்கள்.

ஆரோக்கியத்தை பொறுத்த வரை இன்று சிறப்பான நாள் என்று சொல்ல முடியாது. உங்கள் கை மற்றும் கால்களில் வலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் நீங்கள் ஆரோக்கியத்தில் கவனத்தில் செலுத்துவது அவசியம் ஆகும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே இன்று நீங்கள் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் என்று நினைத்து இருந்தால் அது நடக்காது. உங்கள் முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படும் புத்துணர்ச்சியோடு உங்களை வைத்துக்கொண்டால் தான் ஆற்றலோடு செயல் புரிய முடியும்.

தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை பரபரப்பாக இருப்பீர்கள். பொறுமையோடும் திட்டமிடுதல் இருந்தால் மட்டுமே திறமையாக உங்கள் பணிகளை செய்து முடிக்க முடியும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று செலவுகள் அதிகமாக காணப்படும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நீங்கள் செலவுகள் செய்வீர்கள். எனவே என்று எந்தவிதமான சேமிக்கக்கூடிய வழிமுறைகளையும் நீங்கள் பின்பற்ற முடியாது.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை பதட்டமான மனநிலைக்கு காணப்படுகிறது இதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் பாதிப்படைகலாம். எனவே அமைதியோடு இருந்து ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுதல் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்

சிம்மராசி நேயர்களே இன்று உங்களுக்கு திடீர் என்று விரைவான முடிவுகளை எடுப்பீர்கள் .பல மதிப்பு மிக்க வாய்ப்புகளை இன்று இழப்பதோடு மட்டுமல்லாமல் மதிநுட்பத்தோடு செயல்பட முயற்சி செய்தால் மட்டும் தான் வெற்றியை தக்கவைத்துக் கொள்ள முடியும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணி சூழலில் சவால்கள் நிறைந்து இருக்கும். சகப் பணியாளர்கள் மற்றும் மேல் அதிகாரிகளோடு வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். பணி இழப்புக்கான வாய்ப்பு அதிக அளவு காணப்படுகிறது.

நிதி நிலைமையை பொறுத்தவரை கவனம் இன்மை அஜாக்கிரதை காரணமாக பண இழப்புகள் அதிக அளவு ஏற்படும். பணத்தை சேமிக்க முடியாது. எனவே சிக்கனமாக இருப்பது எப்படி என்பதை சிந்திக்கவும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரையில் முதுகு வலி போன்ற உபாதைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே தியானத்தை மேற்கொண்டு உங்கள் ஆரோக்கியத்தை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.

கன்னி

கன்னி ராசி நண்பர்களே என்று நீங்கள் வளர்ச்சியை நோக்கி செல்ல இடைவிடாத முயற்சியை மேற்கொள்வீர்கள். உங்கள் கடின உழைப்பின் மூலம் உங்களுக்கு வெற்றிகள் வந்து சேரும். எனவே நீங்கள் உழைப்பதற்கு சற்றும் சளைக்காமல் இருப்பது நல்லது.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை புதிய வேலை வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். இது உங்களுக்கு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும். மேலும் செயல்திறன் காரணமாக உங்களிடம் ஊக்கம் அதிகரித்து இருப்பதால் தொழிலை நேர்த்தியாக முடித்து விடுவீர்கள்.

நிதி நிலமையை பொறுத்தவரை பணப்புழக்கமும் அதிகமாகவே இருக்கும். ஊக்க தொகைகள், சலுகைகள் என அடுக்கடுக்காக பண வரவுகள் உங்களுக்கு ஏற்படும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களிடம் சிறந்த ஆரோக்கியம் காணப்படும். மேலும் சகிப்புத்தன்மையை நீங்கள் வளர்த்துக் கொள்வதின் மூலம் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாள் என்று கூறலாம். இன்று நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.மேலும் முக்கிய முடிவுகளை இன்று எடுப்பதன் மூலம் உங்களுக்கு நன்மைகள் அதிகமாக கிடைக்கும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணி சூழலும் உங்களுக்கு சாதகமாகவே இருப்பதால் மகிழ்ச்சியை அளிக்க கூடிய விதத்தில் இது அமைந்துவிடும். உங்களது கடின உழைப்பு மற்றும் முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் அனைவரது பாராட்டுக்களும் அங்கீகாரமும் உங்களுக்கு எளிதாக கிடைக்கும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை பண வரவு அதிகமாக காணப்படும். வணிகம் மூலம் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கிப் பார்க்க முடியும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று சிறந்த ஆரோக்கியம் காணப்படும். இன்று உங்களோடு உங்களின் உறுதி மற்றும் நம்பிக்கையின் காரணமாக ஆரோக்கியத்தில் எந்த குறையும் இருக்காது.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே இன்று உங்கள் முயற்சிகள் தடைகளை அதிகளவு சந்திக்க வேண்டி இருக்கும். இது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். மேலும் உங்களுடைய காணப்படும் வெறுமையான உணர்வு உங்களை கவலையில் ஆழ்த்தும். இது போன்ற உணர்வுகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை கடின உழைப்பை மேற்கொள்வதின் மூலம் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். பணிகளை திட்டமிட்டு பணியாற்றினால் நிச்சயம் நன்மைகள் கிடைக்கும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை அதிருப்தியான நாள் என்று கூறலாம். பண இழப்பை தவிர்க்க நீங்கள் திட்டமிட்டு செலவு செய்வது அவசியமானதாகும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை கால் வலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் சின்ன, சின்ன உடற்பயிற்சிகளை மேற்கொள்வதின் மூலம் அதை சரி செய்து விடலாம்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே என்று நீங்கள் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். உங்கள் வளர்ச்சிகள் தடைகள் ஏற்படக்கூடிய நாள் என்று கூறலாம். எதையும் சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் கடுமையான சூழ்நிலையில் இருப்பதால் சற்று போராடி தான் எதையும் சாதிக்க முடியும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியிடத்தில் அசௌவுரியங்களும், பதட்டமும் ஏற்படும். பணிகளில் அதிக சுமை இருப்பதால் உங்களுக்கு கவலை வரலாம். எனவே நீங்கள் திறமையாக பணியாற்றி கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ள தயாராகி விடுங்கள்.

நிதி நிலைமையை பொருத்தவரை சீரற்று இருக்கும். கூடுதல் செலவுகள் அதிகமாக ஏற்படும். இதன் மூலம் உங்கள் கையிருப்பு வெகுவாக குறைந்துவிடும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை தோள் வலி ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் சளி, இருமல் போன்ற உபாதைகள் வருவதற்கான சூழ்நிலைகள் உள்ளது. எனவே ஆரோக்கியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கவும்.

மகரம்

மகர ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு பலன்கள் திருப்தி அடிக்கக்கூடிய வகையில் ஏற்படும். மேலும் உங்களுக்கு பெற்றோர்களின் பரிபூரண ஆதரவு இருப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும் என்று கூறலாம்.

தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியை குறித்த நேரத்தில் முடித்து உங்கள் திறமையை நிரூபிப்பீர்கள். சக பணியாளர்களின் கவனம் உங்கள் பக்கம் திரும்பும். நேர்மறையான செயல் திறனை பார்த்து மேல் அதிகாரிகள் பாராட்டுவார்கள்.

நிதிநிலைமையை பொறுத்தவரை மகிழ்ச்சிகரமான நாள் என்று கூறலாம். பணப்புழக்கம் அதிகரித்து இருப்பதால் உங்கள் பணத்தை சேமிக்க முடியும். எனவே திருப்தியாக நீங்கள் இருக்கலாம்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை முழு ஆரோக்கியமும் இன்று உங்களிடம் உள்ளது. உறுதியான மனநிலையில் இருப்பதால் உங்கள் ஆரோக்கியம் மேம்பட்டு இருக்கும். எனவே ஆரோக்கியத்தில் கவலை வேண்டாம்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று உங்களுக்கு குறைந்த அளவு முயற்சியை செய்வதின் மூலம் அதிக அளவு வெற்றிகள் வந்து சேரக்கூடிய அதிர்ஷ்டமான நாள் என்று கூறலாம். புதிய நண்பர்களும் அவர்களால் ஆதரவும் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புகள் நிறைய உள்ளது.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளை மும்மரமாக செய்து முடிப்பீர்கள். தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். எனவே இன்றைய நாள் உங்களது நாளாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நிதி நிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். உங்கள் பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். மேலும் உங்கள் பணத்தை சேமிக்க திட்டமிடுவீர்கள்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களிடம் மன உறுதி அதிக அளவு காணப்படுகிறது.மேலும் சகிப்புத்தன்மை காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் தியானத்தை மேற்கொள்வது நல்லது.

மீனம்

மீன ராசி நண்பர்களை இன்று சாதகமான நாளாக உங்களுக்கு அமையாது. உங்கள் முயற்சிகள் தாமதங்கள் காணப்படும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்திக் கொடுக்கும். மேலும் இந்த குறைபாடுகளை சமாளிக்க நீங்கள் திட்டமிட்டு செயலாற்றினாளே போதும் வெற்றிகள் கிடைக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்த வரை பணிகள் இருக்கும் காணப்படும். பணிச் சூழலை கையாளும்போது கவனமாக கையாளுவது அவசியம். பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை சாதகமான நாள் கிடையாது கூடுதல் செலவுகள் மற்றும் பண இழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை சளி சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும். எனவே குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவதை நீங்கள் தவிர்த்து விடுங்கள். இதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை பேண முடியும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …