இன்றைய ராசிபலன் 26 மார்ச் 2023 ஞாயிற்றுக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 26 மார்ச் 2023 ஞாயிற்றுக்கிழமை. கடவுளை நம்பினோர் கைவிடப்பட மாட்டார். எவ்வளவு இடர்கள் ஏற்பட்டாலும் தெய்வ நம்பிக்கை இருந்தால் நீங்கள் எதிர்நீச்சல் அடித்து உங்கள் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைய முடியும். தன்னம்பிக்கையோடு நீங்கள் செய்யும் முயற்சிகளின் மூலம் உங்கள் விளக்குகளை சரியாக அடைய இந்த உதவி செய்யும்.

மேலும் உங்கள் ஜாதகத்தில் இருக்கக்கூடிய கட்டங்களில் நிலைகளை அறிந்து அவற்றைக் கணித்து நீங்கள் செயல்படுவதின் மூலம் உங்களது பலன்களை அதிகரித்துக் கொள்வதற்கு அதிக சந்தர்ப்பங்கள் உள்ளது. அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள
27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி நேயர்களே இன்று நீங்கள் கடினமாக முயற்சி செய்வதின் மூலம் வெற்றிகளை எளிதில் அடைய முடியும். உங்கள் செயல்களில் வளர்ச்சி வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் மனதை ஒருமுகப்படுத்தி முயற்சி செய்வது கட்டாயமாகும். எனவே தன்னம்பிக்கையோடு இருந்து அனைத்து காரியங்களையும் செய்து விடுங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை மனச்சோர்வு ஏற்படும் சூழ்நிலைகள் உருவாகியுள்ளது. பணிபுரியும் இடத்தில் நல்ல முறையில் பழகுவது அவசியம். அதன் மூலம் உங்கள் பணிகளை எளிதாக நீங்கள் முடிக்க முடியும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை வரவும் செலவும் இணைந்து இருக்கும் ஆரோக்கியம் சம்பந்தமான செலவுகளை செய்ய வேண்டி இருக்கும். இதனால் உங்களுக்கு கவலை ஏற்படும். கையிருப்பு குறைவதால் உங்கள் மனதில் சஞ்சலம் ஏற்படும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரையில் முதுகு பகுதியில் வலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் நீங்கள் மிதமான உணவுகளை உட்கொள்வதில் மூலம் செரிமான பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். ஆரோக்கியத்தில் அதிகமாக அக்கறை காட்டுவது அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே உங்கள் வளர்ச்சியில் நீங்கள் கவனத்தை செலுத்துபீர்கள். மற்றவர்களின் ஆதரவை நாடுவதை விட உங்கள் செயல் திறன் மூலம் அனைத்து பணிகளையும் முடிப்பது திறமையாக இருக்கும். அடுத்தவர்களின் நம்புவதை விட உங்களை நம்பி நீங்கள் திறமையோடு செயல்படுங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை ஏற்ற இறக்கங்கள் இருப்பதால் பொறுமையுடன் பணியினை செய்ய வேண்டும். நேர்மையான உங்களுக்கு வெகுமதிகள் வந்து சேரும். எனவே நிதானத்தோடு உங்கள் பணியை செய்யவும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை நல்ல நேரத்திற்காக காத்திருங்கள். பணத்தை செலவு செய்வதை விட சேமிப்பது நல்லது என்பதை உணர்ந்து கொண்டு இருக்கும் பணத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை ஆரோக்கியத்தில் அதிகமான கவனம் செலுத்துவது அவசியமானது. பல்வலி, கண்கள், கை, கால்களில் வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. யோகா மற்றும் தியானத்தை மேற்கொள்வது மிகவும் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே என்று உங்களுக்கு செய்யக்கூடிய செயல்களுக்கு ஏற்ற அனுகூலங்கள் வந்து சேரும். விரைவாக செயலாற்றி உங்களுக்கு வேண்டியதை எவ்வாறு பெற முடியுமோ அதை இன்று பெறுவதற்கு நீங்கள் புத்திசாலித்தனத்தோடு செயல்படுங்கள். எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை ஒப்புக்கொண்ட பணிகளையும் முடித்துக் கொடுக்க வேண்டும் என்ற பதட்டம் உங்களுக்குள் ஏற்படும். சக பணியாளர்களுடன் நல்லுறவை பேணுவதின் மூலம் பணிகளை எளிதில் முடிக்கலாம். எனவே பணியில் கவனத்தை செலுத்தவும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை ஏற்ற இறக்கங்கள் இருக்கக்கூடிய நாளாக உள்ளது. கையிருப்பு கரையக்கூடிய நாள் என்பதால் சிக்கனத்தை கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள் .பாதுகாப்பாக உங்கள் பணத்தை எளி முதலீடு செய்யலாம் என்பதை பற்றி யோசிக்கவும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை மன அழுத்தம் காரணமாகவும் பதட்டம் காரணமாகவும் பல பிரச்சனைகள் ஏற்படலாம். குறிப்பாக செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மிதமான உணவுகளை எடுத்துக் கொள்ளவும். தியானம் யோகா மூலம் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்று ஓய்வாக இருப்பது மிகவும் நல்லது.

கடகம்

கடக ராசி அன்பர்களே இன்று உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள உகந்த நாளாக அமைந்திருப்பதால் வாய்ப்புகளை நீங்கள் வளர்த்துக் கொள்ள என்ன செய்ய வேண்டுமோ அதை என்று நீங்கள் சிறப்பாக செய்யலாம். பயணங்கள் அதிகமாக மேற்கொள்வதின் மூலம் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.

 தொழில் ஸ்தனத்தை பொருத்தவரை பணி சூழல் என்று சிறப்பாக உள்ளதால் நீங்கள் செய்யும் பணிகளை விரைந்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டுகளையும் சக பணியாளர்களின் ஆதரவையும் பெறுவீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணத்தை சேமிக்க கூடிய நாள் என்பதால் உங்கள் நிதி நிலையை மேம்படுத்துவது எப்படி என்பது பற்றிய எண்ணம் உங்களுடைய மேலோங்கும். இருக்கின்ற பணத்தை வைத்து திருப்திகரமாக நீங்கள் இருக்க முடியும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை சிறப்பான நாள் என்று கூறலாம். தேக ஆரோக்கியத்தில் எந்த விதமான பாதிப்புகளும் இல்லாததால் ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே என்று உங்களுக்கு நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்கள் அதிகளவு காணப்படும். சிறந்த முறையில் திட்டமிட்டு செயல்படுவதின் மூலம் நீங்கள் வெற்றி பெற முடியும். எதையும் அமைதியாக கையாளுவதன் மூலமே உங்களுக்கு நன்மை நடக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை மேலதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதோடு சக பணியாளர்களும் உங்களை பாராட்டுக்கூடிய நிலையில் நீங்கள் உங்கள் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள்.

 நிதி நிலைமை பொறுத்த வரை முன்னேற்றகரமான நாள் என்று கூறலாம். உங்கள் பணவரவு மேம்பட்டு இருக்கும் புதிய புதிய வரவுகள் வந்து சேரும். இதனால் நீங்கள் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள்.நிதி நிலமையை பற்றி கவலை தேவையில்லை.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை மகிழ்ச்சிகரமாக இருப்பதால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தேக ஆரோக்கியத்தில் எந்த விதமான சுணக்கமும் இல்லை என்பதால் அச்சப்பட தேவையில்லை.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே இன்று இசை கேட்பது, திரைப்படங்களை பார்ப்பது போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் அதிகமாக நீங்கள் ஈடுபடுவீர்கள். எதிலும் நிதானத்தோடு இருப்பது உங்களுக்கு சிறப்பாக இருக்கும். பொறுமையை மேற்கொள்வதின் மூலம் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணி வளர்ச்சி மந்தமாக உள்ளது. மேல் அதிகாரிகளிடம் உங்கள் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். உழைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் ஓய்வின்றி நீங்கள் உழைப்பது சற்று கடினமாக இருக்கும். எனினும் அதையும் சமாளித்து நீங்கள் உழைப்பீர்கள்.

நிதி நிலைமையை பொருத்தவரை முன்னேற்றம் இல்லாத நாளாக இந்த உள்ளது .பண செலவு அதிகரித்து விடும். எனவே சிக்கனமாக செலவு செய்வது எப்படி என்பதை யோசித்து திட்டமிட்டு செலவு செய்யுங்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை உடல் உஷ்ணம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் தலைவலி எதுவும் ஏற்படலாம்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே என்று நீங்கள் உங்கள் வளர்ச்சியில் கவனத்தை செலுத்துவீர்கள். மற்றவர்களின் ஆதரவையில் நாடுவதை விட உங்கள் செயல் திறனை உணர்ந்து நீங்கள் அதை செயல்படுத்தினால் கட்டாயம் வெற்றி வந்து சேரும். தன்னம்பிக்கையோடு இருங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பதட்டமான சூழ்நிலை உள்ளது. உங்கள் கடமைகளை சரிவர செய்வதற்கு நீங்கள் கவனத்தோடு பணியாற்றுவது மிகவும் முக்கியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து காணப்படும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கக் கூடாது. சிக்கனமாக எப்படி செலவு செய்யலாம் என்பதை நீங்கள் உணர்ந்து திட்டமிட்டு செலவுகளை செய்யுங்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமென்றால் உங்கள் பதட்டத்தை விட்டு விடுங்கள். பதட்டத்தை குறைக்க தியானத்தை மேற்கொள்வது சிறப்பாக இருக்கும் என்பதால் தியானத்தை செய்யவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே என்று நீங்கள் உங்களுக்கு சாதகமான முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய நாளாக அமைந்துள்ளதால் நீங்கள் எடுக்க வேண்டிய முடிவுகளை இன்று தைரியமாக எடுக்கலாம். மகிழ்ச்சியோடு இருக்க வேண்டிய நாள். இந்த நாள் உங்களுக்கு நல்ல சிறப்புகளை கொடுக்கக்கூடிய நாள் என்பதால் நீங்கள் தன்னம்பிக்கையோடு இருங்கள்.

 தொழிற் ஸ்தானத்தைப் பொறுத்தவரை ஒப்புக்கொண்ட பணிகளை முன்னரே முடித்து முடிக்கக்கூடிய ஆற்றல் உங்களுக்கு உள்ளது. எனினும் சில சமயம் பதட்டம் ஏற்படலாம். அவற்றை தவிர்க்க இறைவழிபாட்டில் ஈடுபடுங்கள். சகப் பணியாளர்களுடன் நட்பு உறவை பேணுவது மிகவும் நல்லது.

 நிதி நிலைமை பொறுத்த வரை ஏற்றத்தாழ்வுகளோடு இருப்பதால் நிதியை பாதுகாப்பாக சேமிக்க என்ன வழி என்பதை நீங்கள் யோசிப்பது மிகவும் நல்லது.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை மன அழுத்தத்தின் காரணமாக பதட்டம் ஏற்படும். மேலும் செரிமான கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தேவையான அளவு ஓய்வு எடுங்கள். தியானத்தில் மனதை செலுத்துங்கள் ஆரோக்கியம் சீராகும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே இன்று உங்கள் உறவுகளில் சிக்கல் வராமல் இருக்க நீங்கள் முயற்சி செய்வது மிகவும் முக்கியம். புதிய உறவுகள் ஏற்படவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பொறுமையை கையாளுவதின் மூலம் நன்மைகளை நீங்கள் எளிதில் பார்க்க முடியும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை உங்கள் நம்பிக்கை வீண் போகாது. பணிகளை எளிதாக முடிக்க கூடிய சூழ்நிலை உள்ளது. மேலதிகாரிகளின் பாராட்டு உங்களுக்கு வந்து சேரும். பணியில் நீங்கள் நல்ல முறையில் பணியாற்றுவீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரையில் நிதி வளர்ச்சியை நன்கு உள்ளது. ஆன்மீக காரியங்களுக்காக பண செலவு செய்வீர்கள். இதன் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. தேகம் மிகவும் சிறப்பாக இருப்பதால் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

மகரம்

மகர ராசி அன்பர்களே என்று உங்களுக்கு வெளியிடங்களுக்கு செல்வதின் மூலம் நல்ல நல்ல பலன்கள் கிடைக்கும். உணர்த்தி பூர்வமாக நீங்கள் செயல்படுவதை விடுத்து எதார்த்தமாக எதையும் அணுகுவது மிகவும் சிறப்பாக இருக்கும். அமைதியை கையாளும்போது உங்களுக்கு நன்மைகள் அதிக அளவு வந்து சேரும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை மன அழுத்தம் காரணமாக தொழிலில் கவனக்குறைவு ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அதிக அளவு உள்ளதால் மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ள இறைவழிபாடு செய்வது மிகவும் நல்லது. பணியில் கவனத்தில் செலுத்துங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு உங்களுடைய பண தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய அளவு பண வரவு கிடைக்காது. செலவுகள் அதிகமாக இருக்கும் குறிப்பாக ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். எனவே ஜாக்கிரதையாக இருக்கவும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை பதட்டமும், பாதுகாப்பற்ற உணர்வும் உங்கள் ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். எனவே எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தை நீங்கள் கொள்வதின் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று ஒரு துடிப்பான நாள் என்று கூறலாம். நீங்கள் உங்கள் சுய வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி ஏற்படும். எனவே பொறுமையாகவும், நிதானமாகவும் உங்கள் செயல்களை நீங்கள் செய்யுங்கள். இந்த நாள் உங்களுடைய நாளாக மாறிவிடும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியிடசூழல் உங்களுக்கு சாதகமாக உள்ளது. பணியில் தவறுகள் நேர வாய்ப்புகள் உள்ளதால் எச்சரிக்கையாக நீங்கள் பணியை செய்ய வேண்டும். சேவை சார்ந்த விஷயங்களில் நீங்கள் அதிகமாக ஈடுபடுவீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை செலவுகள் அதிகரித்திருக்கும். தேவையற்ற செலவுகளை குறைக்க முயற்சி செய்யுங்கள். எதிர்காலத்துக்காக சிறிதளவு சேமிக்க வேண்டும் என்ற கருத்தோடு செயல்படுவது நல்லது.

ஆரோக்கியத்தை பொருத்தவரை பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் தொடர்ந்து உங்கள் கை, கால்களில் வலி ஏற்படலாம். தியானம் மேற்கொள்வதின் மூலம் சிறப்பான நன்மைகள் உங்களுக்கு வந்து சேரும் இதன் மூலம் உங்கள் ஆரோக்கியமும் மேம்படும்.

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று உங்களுக்கு மகிழ்ச்சியை கொண்டாட கூடிய நாளாக இருக்கும். உறுதியுடன் இருந்து வெற்றிகள் பல பெறுவீர்கள். உங்கள் மனநிலையில் நல்ல மாற்றம் ஏற்படும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை வேலையில் பொறுப்புக்கள் கூடி அதிக சுமையாக இருக்கும் எனினும் வேலையில் நீங்கள் சிறப்பாக செயல்பட முயற்சி செய்வீர்கள். உங்கள் ஆர்வத்தை அதிகரித்து செய்கின்ற வேலைகளை விரைவாக முடிக்க முயற்சி செய்வீர்கள்.

 நிதி நிலைமை பொறுத்த வரை நன்றாகவே உள்ளது. பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். எனவே நிதி பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று நிலையான நல்ல ஆரோக்கியம் காணப்படும். உங்கள் தைரியம் உங்களுக்கு கை கொடுக்கும். நலமான ஆரோக்கியத்தை கைக்கொள்ள என்னென்ன செய்ய வேண்டுமோ அவ்வளவுவையும் செய்து நீங்கள் ஆரோக்கியத்தை தேடுவீர்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …