இன்றைய ராசிபலன் 27 மார்ச் 2023 திங்கட்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 27 மார்ச் 2023 திங்கட்கிழமை. வாழ்க்கையில் எப்போது எப்படியவது முன்னேற வேண்டும் என்ற துடிக்க கூடிய மனிதர்கள் அனைவரும் ஒரு காலகட்டத்தில் எவ்வளவு தன்னம்பிக்கையோடு செயல்பட்டாலும் அவர்கள் எடுத்த காரியம் சரியாக நடக்காமல் தடங்கல்கள் பல ஏற்பட்டு அவர்களின் மன நிலையை பாதிக்க கூடிய அளவு தோல்விகளை சந்திக்க வேண்டி இருக்கும். சரியானபடி எல்லாவற்றையும் செய்திருந்தாலும் இப்படிப்பட்ட சங்கடங்கள் ஏன் வருகிறது என்று யோசிக்கும்போது தான் நமது ஜனன ஜாதகம் பற்றி நாம் அறிந்து கொள்வோம்.

அதனை அடுத்து அந்த ஜாதகத்தில் இருக்கக்கூடிய கிரக கூறுகளை ஆராயும் போது அந்தத் தடங்கல் வருவதற்கான காரணம் என்ன என்பது எளிதில் தெரியவரும். அதனை அடுத்து அதற்கு உரிய பரிகாரங்களை செய்து அதில் இருந்து நாம் நிவர்த்தி அடைய முடியும். எனவே ஒவ்வொரு மனிதருக்கும் அவர் பிறந்த நேர மிகவும் முக்கிய கரமாக கருதப்படுகிறது.
அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள
27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே, இன்றைய நாளை சாதகமாக்க நீங்கள் கடுமையான முயற்சிகள் செய்வீர்கள். உங்களது மனமானது அமைதியாக இருக்கும். நீங்கள் உங்கள் இலக்கில் கவனத்தை செலுத்துவதின் மூலம் நல்ல நன்மைகள் உங்களுக்கு வந்து சேரும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகள் நிமித்தமாக நீங்கள் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும். இந்த பயணங்கள் மூலம் உங்களுக்கு நன்மைகள் ஏற்படும். பொறுப்புக்களை உணர்ந்து அதற்கு உரியவாறு செயல்களை செய்து தொழிலில் அமோகமாக வருவீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை குடும்பத்தில் நடக்கும் விசேஷ காரியங்களுக்காக உங்கள் பணத்தை செலவு செய்ய வேண்டி இருக்கும். இதன் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை அமைதியான மனநிலை இருப்பதால் ஆரோக்கியத்தில் எந்தவிதமான பிரச்சனையும் உங்களுக்கு ஏற்ப டாது. ஆரோக்கியத்தை பற்றி அச்சம் வேண்டாம்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று உங்களுக்கு சாதகமான நாளாக உள்ளது.நீங்கள் எதையும் உறுதியோடு செய்து முடித்து விடலாம். அமைதியான மனநிலை இருப்பதால் இன்று முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாளாக இருக்கும். பல மாற்றங்கள் என்று ஏற்படலாம். இதன் மூலம் உங்களுக்கு நன்மையே வந்து சேரும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிச்சுமை அதிகரித்து மன அழுத்தம் உண்டாகும். உங்கள் பணியின் தரம் குறைவாக இருக்கும். எனவே நீங்கள் இன்று பணியாற்றும்போது கவனத்தோடு பணிபுரியுங்கள்.

 நிதி நிலைமை பொறுத்த வரை பணம் அதிகரித்து காணப்படும். பயனுள்ள நோக்கங்களுக்காக பணத்தை செலவு செய்வீர்கள். எனினும் சிக்கனத்தை மேற்கொள்வது மிகவும் நல்லது.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை நான் மகிழ்ச்சியான மனநிலை இருப்பதால் உங்கள் ஆரோக்கியம் மேலோங்கி இருக்கும். தியானத்தை மேற்கொள்வதின் மூலம் சிறப்பான ஆரோக்கியத்தை நீங்கள் பராமரிக்கலாம். இந்த நாள் உங்களது நாள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே இன்று சௌவுரியங்கள் குறைந்து இருப்பதால் உங்கள் பொறுப்புக்களை செய்ய முடியாமல் திணறி வருவீர்கள். எனவே எதிலும் பொறுமையோடும் அமைதியோடும் இருப்பதின் மூலமே நீங்கள் நன்மை பெற முடியும். எதற்கும் அவசரப்பட வேண்டாம்.

தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை உணர்ச்சிவசப்படுவதின் மூலம் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். எனவே அவற்றிலிருந்து விலக நீங்கள் அமைதியை கையாள வேண்டும். எல்லோரிடமும் நல் உறவை பேணுவது மிகவும் அவசியம். பணியில் கவனம் தேவை.

நிதி நிலைமையை பொறுத்தவரை பண இழப்புக்கு அதிக அளவு வாய்ப்புகள் உள்ளதால் பணத்தை கவனமாக கையாள வேண்டும். சிக்கனமான முறையில் நீங்கள் இருந்தால் மட்டுமே பணம் சேரும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்கள் ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் சற்று கவனத்தை செலுத்த வேண்டியது அவசியமான ஒன்றாகும். தொண்டை வலி, கண்களில் எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் அதுபோல ஏதேனும் ஏற்பட்டால் உடனே மருத்துவரை சந்தித்து விடுவது மிகவும் நல்லது.

கடகம்

கடக ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருப்பதால் நீங்கள் எதையும் உங்கள் விருப்பத்தை போல நிறைவேற்றிக் கொள்ளலாம். அதற்கு உங்களுக்கு எந்த நாள் பக்க பலமாக இருக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளில் தாமதம் ஏற்படும். சுமூகமான உறவை நீங்கள் சக பணியாளர்களுடன் கடைபிடிப்பது அவசியமானது. வேலை செய்யும் போது கவனத்தோடு ஈடுபடுவதன் மூலம் நல்ல பலன்கள் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் பணியை விரைவாக முடிக்க முடியும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணத்தை சேமிப்பதற்கான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாளாக இந்த நாள் உள்ளது. எனவே உங்கள் நிதி ஆகாயத்தை நீங்கள் பெருக்கிக் கொள்ளவும். முதலீடுகளில் உங்கள் பணத்தை போடவும் சிறந்த நாள் ஆகும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை என்று ஆற்றலோடு இருக்கும் நீங்கள் ஆரோக்கியத்தை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.உங்கள் ஆரோக்கியத்தில் எந்த விதமான சுணக்கமும் இல்லை.

சிம்மம்

சிம்மராசி நேயர்களே இன்று நீங்கள் அர்ப்பணிப்போடு செயல்படுவதின் மூலம் நலம் ஏற்படும். பயணங்கள் அதிகரிக்கும் இதனால் உங்களுக்கு நன்மைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்த வரை பணி சூழல் உங்களுக்கு மிகவும் சிறப்பாக உள்ளது. மேலதிகாரிகள் உங்கள் திறமையை கண்டு வியப்பதோடு மட்டுமல்லாமல் பாராட்டுக்களையும் வழங்குவார்கள். எனவே தொழில் ஸ்தானத்தை பற்றி அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பண இழப்புக்கான வாய்ப்புகள் உள்ளது. சில ஏமாற்றங்களை சந்திக்க நேரலாம். எனவே கவனமாக பணத்தை கையாளுவது அவசியமானதாகும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை ஆரோக்கியத்தில் அதிக அளவு அக்கறை காட்ட வேண்டும். சளி, இருமல் போன்ற உபாதைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று உங்கள் எண்ணங்கள் ஈடேறி வரக்கூடிய நாளாக உள்ளது. பல அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு வந்து குவியும். எனவே இந்த நாள் உங்களுக்கு ஒரு இனிய நாளாக மாறும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணியின் மீதான அர்ப்பணிப்பு காரணமாக மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைப்பதோடு பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் உங்களுக்கு உள்ளது. எனவே தொழில் ஸ்தானத்தில் எந்த விதமான கவலையும் வேண்டாம்.

நிதியை பொறுத்தவரை அபாரமான நாள் என்று கூறலாம். அதிகளவு பணப்புழக்கம் இருக்கும். ஆன்மீக நோக்கங்களுக்காக நீங்கள் பணத்தை செலவு செய்யக்கூடிய வாய்ப்புகள் வந்து சேரும். எனவே நிதியை பற்றி கவலை தேவையில்லை.

ஆரோக்கியத்தை பற்றி பார்க்கும்போது ஆரோக்கியமும் படு சிறப்பாக இருப்பதால் நீங்கள் ஆரோக்கியத்தை பற்றி அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. இன்றைய நாள் உங்களுடைய நாள் என்பதால் நீங்கள் வெற்றிகரமாக எதையும் சாதிக்கலாம்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே இன்று உங்கள் செயல்களில் அதிக அளவு கவனம் தேவை. எதையும் பொறுமையுடனும் நிதானத்தோடும் செய்து முடிப்பது அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை சகப் பணியாளர்கள் மற்றும் உங்களுக்கு கீழ் பணிவு புரிவர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். மேலும் பணிகள் நல்ல வாய்ப்பு கிடைப்பதால் பணியை குறித்த நேரத்தில் நீங்கள் செய்து முடிப்பீர்கள்.

 நிதி நிலைமை பொருத்தவரை இன்று பணத்தை கையாளுவதில் அதீத கவனம் தேவை. பண இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் திட்டமிட்டு செலவுகளை செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று அவ்வளவு நல்ல நாள் இல்லை. உணவு விஷயத்தில் நீங்கள் கட்டாயம் கவனத்தை செலுத்த வேண்டும். குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்வதின் மூலம் தொண்டை சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம்.எனவே ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே இன்று நீங்கள் சமநிலையோடு எதையும் அணுகுவது மிகவும் நல்லது. உங்கள் அணுகுமுறையின் மூலம் புதிய தொடர்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியின் மூலம் நல்ல நல்ல பலன்கள் உங்களுக்கு வந்து சேரும். இது உங்கள் தகுதியை நிரூபிக்க உதவி செய்யும். எனவே தொழில் ஸ்தானத்தில் எந்தவிதமான பாதிப்புகளும் உங்களுக்கு ஏற்படாது.

 நிதி நிலைமையை பொறுத்தவரை நிதி வளர்ச்சி நன்றாக உள்ளது. உங்கள் நண்பர்களின் பிறந்தநாள் விசேஷங்களுக்காக பணத்தை அழகாக செலவு செய்வீர்கள். முதலீடுகளில் உங்கள் பணத்தை முதலீடு செய்ய முயற்சி செய்வீர்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று சிறப்பான நாளாக இருப்பதால் உங்கள் ஆரோக்கியத்தை பற்றி கவலைப்பட வேண்டாம். திருப்திகரமான ஆரோக்கியம் என்று நிலவும்.

தனுசு

 தனுசு ராசி நேயர்களே இன்றைய நாள் எதிர்பாராத மாற்றங்கள் உங்களுக்கு ஏற்படும். முயற்சிகளை நீங்கள் தொடர்ந்து செய்வதின் மூலம் நல்ல நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். எனவே தன்னம்பிக்கையோடு இருங்கள். எதையும் தரமாக செய்வீர்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். விரும்பிய வண்ணம் பணியாற்றுவீர்கள். இதனால் உங்களுக்கு நல்ல நல்ல வாய்ப்புகள் வந்து சேரும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை எதிர்பாராத வகையில் பண வரவு ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. லாட்டரி அடிக்கலாம். காப்பீடு செய்திருந்தால் அதிலிருந்து உங்களுக்கு பணம் வருவதற்கான சூழ்நிலை உள்ளது.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று நல்ல நாள் என்று கூறலாம். நீங்கள் உண்ணும் உணவில் சற்று கவனத்தை செலுத்தினாலே போதும் இன்றைய ஆரோக்கியம் சீரும் சிறப்புமாக இருக்கும்.

மகரம்

 மகர ராசியில் நேயர்களே இன்று உங்களுக்கு அன்பும், ஆதரவும் அதிகரித்து இருக்கும். நல்ல பாடல்களை கேட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். விளையாடுவதின் மூலம் நேரத்தை செலவழிப்பீர்கள். இந்த நாள் இனிய நாளாக உங்களுக்கு அமைந்துள்ளது.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியிடச் சூழலில் சுமூகமான நிலைகள் எதையும் அனுபவித்துக்கொள்ள வேண்டும். வார்த்தைகளில் நிதானம் தேவை. அப்படி செய்யவில்லை என்றால் உங்களுக்கு பணிகளில் பாதிப்புகள் ஏற்படும். எனவே பணிகளை பாதிக்காத வண்ணம் நீங்கள் உங்கள் வார்த்தைகளில் கவனத்தை செலுத்தவும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை வளர்ச்சி காணப்படும். பங்கு சந்தைகள் உங்கள் பணத்தை முதலீடு செய்வதின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். எனவே பணத்தைப் பற்றிய அச்சம் தேவையில்லை.

ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சிறப்பாக இருப்பதால் உங்கள் ஆரோக்கியத்தை எந்த குறையும் இருக்காது. எனவே ஆரோக்கியத்தை பற்றி அச்சப்பட வேண்டாம்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே திறமையான முறைகள் நீங்கள் செயலாற்ற மிகவும் பொறுமை அவசியம். உறுதியாக இருந்து எதையும் செயல்படுத்த முயற்சி செய்வதின் மூலம் இந்த நாளை உங்களது நாளாக மாற்றிவிடலாம்.

 தொழில் ஸ்தானத்தைப் பொறுத்தவரை திறமையான நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியும். சரியான திட்டமிடல்  இல்லாமல் இருந்தால் நீங்கள் சரியாக உங்கள் பணிகளை செய்ய முடியாது. எனவே பணியில் கவனத்தை செலுத்துங்கள்.

 நிதி நிலைமை பொறுத்த வரை பண இழப்புக்கான வாய்ப்புகள் அதிகளவு உள்ளது. குடும்ப உறுப்பினர்களின் உடல் நலத்துக்காக பணத்தை செலவு செய்ய வேண்டி வரும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை என்று சுமாரான நாளாகவே உள்ளது. உடல் நலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமாக இருந்தால் தான் உங்களுக்கு எல்லாம் நடக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

மீனம்

மீன ராசி நேயர்களே இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். சுய வளர்ச்சிக்காக தொடர்ந்து முயற்சி பெறுவதன் மூலம் நீங்கள் வெற்றிகளை வாரிக் குவிக்கலாம்.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியில் பலன்கள் கலந்து காணப்படும்.மேலதிகாரிகள் மற்றும் சக பணியாளர்களுடன் உறவாடும்போது கவனத்தோடு இருக்க வேண்டும். தொழிலில் நீங்கள் கவனத்தை செலுத்துவது நல்லது.

 நிதி நிலைமையை பொறுத்தவரை உகந்த நாள் என்று கூறலாம். நிதி சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுக்கும் போது அது இன்று பயனளிக்க கூடிய வகையில் இருக்கும். எனவே என்று நிதி சம்பந்தமான முடிவுகளை நீங்கள் தாராளமாக எடுக்கலாம்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறப்பாகவே உள்ளது. எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் அச்சப்பட வேண்டாம். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுகளை பின்பற்றுவது அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …