இன்றைய ராசிபலன் 28 மார்ச் 2023 செவ்வாய்க்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 28 மார்ச் 2023 செவ்வாய்க்கிழமை. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது என்ற பகவத் கீதையின் வாக்குப்படி ஒவ்வொருவருக்கும் நல்ல காலம் என்பது அவர்களது ஜாதக அமைப்பை பொறுத்து ஏற்படுகிறது.

எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை எல்லாம் சரி செய்வதற்கு மன உறுதியோடு நீங்கள் ஜாதகத்தில் கூறப்பட்டிருக்கும் பரிகாரங்களை செய்வதன் மூலம் கட்டாயம் உங்களுக்கு நிவர்த்தி கிடைக்கும். அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி நேயர்களே இன்று உங்களது நாள் இனிமையான நாளாக இருக்கும் கடினமான முயற்சிகளின் மூலம் நீங்கள் சாதனைகள் செய்ய முடியும் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள் என்பதால் உற்சாகமாக இன்று நீங்கள் இருப்பீர்கள்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை இன்று நீங்கள் கடின முயற்சியின் மூலம் உங்கள் தொழிலில் மிக சிறப்பாக செயல்படுவீர்கள். புத்திசாலித்தனத்துடன் பணியை ஆற்றுவதால் மேல் அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். உங்களுக்கு கீழ் பணியை புரிபவர்களோடு நல்லுறவை மேம்படுத்துவீர்கள்.

 நிதி நிலைமையை பொருத்தவரை பணம் சேமிக்க இயலும். எதிர்பாராத வகையில் இன்று பணவரவு ஏற்படும். எனவே நிதியை பற்றி அச்சம் தேவையில்லை.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை தேக ஆரோக்கியம் சிறந்த நிலையில் காணப்படும். எனவே தேக ஆரோக்கியத்தை பற்றி அற்றப்பட வேண்டாம்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே பல நாள் தடைகளுக்குப் பின்பு இன்று உங்களுக்கு திருப்திகரமான நாளாக இந்த நாள் அமையும். மனதை நீங்கள் ஓய்வாக வைத்துக்கொள்வது மிகவும் நல்லது. எதையும் சிந்தித்து அதன் பிறகு செயல்படுத்தவும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிச்சுமை அதிகரித்துக் கொண்டே போவதால் உங்கள் பணிகளில் தவறுகள் நடக்கலாம். பணிகளை செய்வதில் தடங்கல்கள் ஏற்படும். எனவே தொழிலில் கவனத்தை செலுத்தவும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணத்தட்டுப்பாடுகள் அதிகரித்து காணப்படும். இதன் காரணமாக உங்களுக்கு கவலை ஏற்படும். முடிந்தவரை பணத்தை சிக்கனமாக பயன்படுத்தக்கூடிய வழிமுறையை தேர்வு செய்ய வேண்டும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சிறப்பான நாள் கிடையாது. செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் மிதமான உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் போதுமானது. இதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களை இன்று பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் அதிகமாக ஈடுபடுவதின் மூலம் உங்கள் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். பாடல்கள் கேட்பது, சினிமாவுக்கு செல்வது என்று நீங்கள் இன்று முழுவதுமே பொழுதுபோக்கில் உங்கள் மனதை செலுத்துவீர்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிச்சூழல் கடினமாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் நீங்கள் வேலைகளையும் கடினமாகவே செய்ய வேண்டி இருக்கும். இதனால் மகிழ்ச்சி இன்று நீங்கள் இருப்பீர்கள்.

 தொழிலில் கவனத்தை செலுத்துவது மிகவும் அவசியமானது. நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று பணப்புழக்கம் சீரற்று இருப்பதால் உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள பணத்தை செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை நீங்கள் தியானத்தை மேற்கொள்வதில் மூலம் மன அமைதி ஏற்படும். இதன் மூலம் ஆரோக்கியம் மேம்படும் மனதை ஒரு முகப்படுத்த நீங்கள் யோகா செய்வது மிகவும் நல்லது.

கடகம்

கடக ராசி நேயர்களின் நீங்கள் அனுசரித்துச் செல்ல வேண்டிய நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். சில நாட்கள் அதை தள்ளி போடுவது மிகவும் நல்லது.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரையில் பணிகள் தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் அதிக அளவு கவனத்தை செலுத்தி பொறுமையோடும் நிதானத்தோடும் உங்கள் பணியை மேற்கொள்வது அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 நிதி நிலைமையை பொருத்தவரை இன்று நீங்கள் பற்றாக்குறை இருப்பதால் அதை சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கும். உங்கள் தகுதிக்கு மீறிய செலவுகள் வந்து சேரும். எனினும் தயக்கமில்லாமல் செலவுகள் செய்வதற்கான வழிமுறைகள் என்ன என்பதை நீங்கள் யோசிப்பீர்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை தாயார் உடல்நிலையில் அக்கறை காட்டுவது அவசியம். அதற்காக பண செலவு செய்ய நேரிடும். இதன் மூலம் உங்களுக்கு கவலை ஏற்படும் எனவே நீங்களும் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று லாபகரமான நாளாக உங்களுக்கு உள்ளதால் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். அக்கம் பக்கத்தில் ஆதரவு கிடைக்கும். கூடுதல் பணப்புழக்கம் ஏற்படும் போது உங்களுக்கு மகிழ்ச்சி கிடைப்பதோடு நல்ல விஷயங்களில் நீங்கள் ஈடுபடுவீர்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை மேலதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு அதிக அளவு கிடைக்கும். உங்கள் பணிகளின் நேர்த்தியை பார்த்து பாராட்டு மழை கிடைக்கும். உங்கள் திறமை இன்று பளிச்சென்று வெளிப்படும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை தொலைதூரத்தில் இருந்து பணம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த பணம் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். எனவே நிதி நிலை பற்றி அச்சப்பட வேண்டாம்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்கள் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எனவே அது பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்த நாள் இனிய நாளாக இருப்பதால் அதை சரியான முறையில் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று உங்களுக்கு சாதகமான வாய்ப்புகளை ஏற்படக்கூடிய நாளாக அமைந்துள்ளதால் எதிலும் நீங்கள் முன்னேற முடியும். ஆன்மீக நோக்கத்துக்காக பயணங்களில் மேற்கொள்வீர்கள். இதன் மூலம் உங்களுக்கு அதிக அளவு நன்மைகள் வந்து சேரும்.

 தொழில்தானத்தை பொறுத்தவரை சிறந்த முறையில் பணியாற்றக்கூடிய நீங்கள் இன்று நல்ல நல்ல பலன்களை பெற்று விடுவீர்கள். சக பணியாளர்களிடம் உங்களுக்கு அதிக அளவு ஆதரவு கிடைக்கும். எனவே பணியில் வெற்றி பெறக்கூடிய அளவு நீங்கள் உயர்ந்திருப்பீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணவரவு அதிகரித்து இருப்பதால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். மேலும் உங்களுக்கு ஊக்கத்தொகை சலுகைகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ள நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.

தேக ஆரோக்கியத்தை பொருத்தவரை மிகவும் சிறப்பான  ஆரோக்கியம் இன்று நிலவும். உங்கள் உடல் நிலையை சீராக வைத்திருப்பதால் எந்த விதமான சுணக்கமும் ஆரோக்கியத்தில் ஏற்படாது. எனவே நீங்கள் ஆரோக்கியத்தை பற்றி அச்சப்பட வேண்டாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களை இன்று சரியான வழியை தேர்ந்தெடுத்துக்கொள்ள நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் திறமையை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும் என்றால் கட்டாயம் திட்டமிட்டு எதையும் செய்வது அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை மேல் அதிகாரிகளுடன் சண்டை சச்சரவு ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் அவர்களை அனுசரித்து செல்வதின் மூலம் தான் உங்களுக்கு ஆதாயம் கிட்டும். எனவே பணியை கவனத்தை செலுத்தவும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பண வரவுக்கு சாதகமான சூழ்நிலைகள் இல்லை. நீங்கள் சேமித்த பணத்தை கூட செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே பணத்தை பத்திரமாக கையாளுவதின் மூலம் தான் உங்களால் சேமிக்க முடியும். இல்லையென்றால் பண இழப்பு ஏற்படும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சிறப்பாக இல்லை. வேலைப்பளு காரணமாகவும் பதட்டத்தின் காரணமாக உங்கள் ஆரோக்கியத்தில் சற்று சுணக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் ஆரோக்கியத்தை கண்ணும் தெற்குமாக இருக்கவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இல்லை. குழப்பமான சூழ்நிலை நிலவும் நீங்கள் எடுக்கும் முடிவுகள் தவறாகலாம். எனவே எதையும் பொறுமையோடும் நிதானத்தோடும் அணுகுவது உங்களுக்கு நன்மை அளிக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை வளர்ச்சி குறைந்தே உள்ளது. பணி சுமை அதிகரித்து காணப்படும். உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதற்கே நீங்கள் படாத பாடு படுவீர்கள். எனவே திட்டமிட்டு செயல்படுவது முக்கியம் என்பதை உணர்ந்து தொழிலில் கவனத்தை செலுத்தவும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று அவ்வளவு சிறப்பான நாள் கிடையாது. நீங்கள் உங்கள் பணத்தை சேமிக்க முடியாது திட்டமிட்டு செலவு செய்யுங்கள். இதனால் பண இழப்பு தடுக்கப்படும்.

 ஆரோக்கியமும் குழப்பமாகவே உள்ளது தோல் சம்பந்தமான வியாதிகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எண்ணெயில் செய்த உணவுப் பண்டங்களை தவிர்த்து விடுங்கள். இதன் மூலம் ஆரோக்கியத்தை ஓரளவு உங்களால் தேன் பாதுகாக்க முடியும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே இன்று முக்கிய தொடர்புகள் மூலம் உங்களுக்கு பல நன்மைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு நன்மை ஏற்படும். எனவே தயங்காமல் பயணத்தை மேற்கொள்ளலாம்.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை பணி இன்று உங்களுக்கு நல்ல யோகம் உள்ளது. இன்று சாதகமான பலன்கள் உங்களுக்கு பணியில் கிடைக்கும். உழைப்புக்கு ஏற்ற உயர்வு இருக்கும். பாராட்டுக்கள் வந்து சேரும்.

 நிதி நிலைமை பொறுத்தவரை போதிய அளவு பணப்புழக்கம் காணப்படும். பணத்தை குடும்பத்திற்காக செலவு செய்து மகிழ்வீர்கள். எனவே நிதி நிலைமையும் பற்றி அச்சப்பட வேண்டாம்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று எந்த விதமான பிரச்சனைகளும் இல்லை. சிறப்பான ஆரோக்கியத்தோடு நீங்கள் இருப்பீர்கள். எனவே நீங்கள் கருத்தோடு உங்கள் பணிகளை செய்தால் போதுமானது.

மகரம்

மகர ராசி அன்பர்களே இன்று நீங்கள் உங்கள் பிரச்சனையைப் பற்றி கவலைப்படாமல் மகிழ்ச்சியோடு இருங்கள். நல்லதே நடக்கும் கோயிலுக்கு சென்று கடவுளை வழிபடுவது உங்களுக்கு ஆறுதலை ஏற்படுத்திக் கொடுக்கும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை நீங்கள் செய்யும் பணிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். மேலும் பாராட்டுக்கள் வந்து சேரும். பணிகளை செய்யும்போது தாமதம் ஏற்படலாம் திட்டமிட்டு பணிகளை செய்வதின் மூலம் எளிதில் உங்கள் பணிகளை முடித்து விடலாம்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை உங்களிடம் இருக்கும் பணம் போதுமானதாக இருக்கும். உங்கள் சேமிப்பை உயர்த்த முயற்சி செய்வீர்கள். இதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை கண்களில் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கண் மருத்துவரை அணுகுவது மிகவும் சிறப்பாக இருக்கும். எனவே ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே இன்று முறையான திட்டமிடுதல் மூலம் நீங்கள் கடினமான விஷயங்களை எளிதில் கையாண்டு வெற்றிகளை பெற முடியும். எனவே நீங்கள் தன்னம்பிக்கையோடு இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தொழில் ஸ்தானத்தில் முறையாக பணிகளை செய்ய முடியாது. பணிகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் தொழிலில் கவனத்தை செலுத்துவது மிகவும் முக்கியமானதாகும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை என்று உங்கள் பணத்தை ஆன்மீக காரியங்களுக்காக செலவு செய்வீர்கள். இதன் மூலம் உங்களுக்கு ஆறுதல் ஏற்படு.ம் பயணங்களால் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பயணங்களை குறைத்துக் கொள்ளலாம்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை சுமாரான ஆரோக்கியம் இருக்கும். எனினும் தோள்களில் வலிகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று சில தடங்கல்களுக்குப் பிறகு உங்களுக்கு திருப்தி நிலை ஏற்படும். கவலைகளை மறக்க மனதை தைரியமாகவும் அமைதியாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியில் சில அசௌரியங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். பணி சுமை அதிகரித்துக்கொண்டே இருக்கும். நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுவீர்கள். எனவே தொழிலில் சற்று அக்கறை காட்டுவது நல்லது.

நிதி நிலைமையை பொருத்தவரை பணப்புழக்கம் சிறப்பாக இருக்காது. இன்று அதிகரிக்கும் செலவுகளும் பார்த்து நீங்கள் பயப்படுவீர்கள். எனினும் சிக்கனமாக இருப்பது மிகவும் நல்லது.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை கை, கால்களில் வலிகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்துவது அவசியம் என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி நீங்கள் நடந்து கொள்ள வேண்டும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …