தூள் பறக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள் பட்டியல்..! உறுதியான மூன்று பேர்..!

தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி விட்டாலே அது குறித்த ஆரவாரம் என்பது அதிகமாக இருந்து வரும். மக்கள் மத்தியில் எப்போதுமே அதிக வரவேற்பை பெற்ற தொடராக பிக் பாஸ் தொடர் இருந்து வருகிறது. பிக் பாஸ் முதல் சீசனில் துவங்கி இப்போது வரை அதற்கான வரவேற்பு என்பது குறையவே இல்லை.

ஒவ்வொரு முறையும் பிக் பாஸ் துவங்குவதற்கு முன்பு யார் அதில் போட்டியாளர்களாக வரப்போகிறார்கள் என்பது துவங்கி நூறாவது நாள் யார் அதில் வெற்றி பெறப் போகிறார்கள்? என்பது வரை மக்கள் மிகவும் அதிக ஆவலோடுதான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.

பிக்பாஸ் 8

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அடுத்து துவங்க இருக்கிறது அதை குறித்த பேச்சுக்கள் இப்பொழுது மக்கள் மத்தியில் வலம் வர துவங்கியிருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடங்கியது முதலே அதை தொகுத்து வழங்கி வந்தவர் நடிகர் கமல்ஹாசன்.

ஆனால் சமீபத்தில் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கூறியிருக்கிறார். அதனை தொடர்ந்து யார் அடுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்பதே மக்கள் மத்தியில் ஏற்கனவே பெரும் பேச்சாக இருந்து வருகிறது.

போட்டியாளர்கள் பட்டியல்

அதிகபட்சம் நடிகர் விஜய் சேதுபதிதான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த நிலையில் யார் இதில் போட்டியாளர்களாக இதில் இருப்பார்கள் என்றும் ஒரு பக்கம் கேள்விகள் எழுந்து வருகிறது.

ஏனெனில் போட்டியாளர்களாக இருப்பவர்களைதான் 100 நாட்கள் மக்கள் பார்த்து வரப் போகிறார்கள் எனும் பொழுது கண்டிப்பாக அது குறித்து எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வரும். இந்த நிலையில் ஏற்கனவே மூன்று போட்டியாளர்கள் பிக் பாஸ் சீசன் 8க்கு போட்டியாளராக உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

உறுதியான மூன்று பேர்

கடந்த ஏழாவது சீசனில் வைல்ட் கார்டு ரவுண்ட் மூலமாக உள்ளே புகுந்து வெற்றி பெற்ற அர்ச்சனாவின் காதலர் என்று அனைவராலும் கூறப்படும் சீரியல் நடிகர் அருண் மற்றும் சீரியல் நடிகை ஹரீனா இருவரும் பிக் பாஸில் பங்கு பெறுவதாக  ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

இவர்கள் இருவருமே இணைந்து பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்திருக்கின்றனர். அதேபோல தற்சமயம் குக் வித் கோமாளி சீசன் 5 மூலமாக பிரபலம் அடைந்த டிடிஎஃப் வாசனின் காதலியான சோயாவும் இதில் கலந்து கொள்ள போவதாக கூறப்படுகிறது. இவர்கள் 3 பேரும் தற்சமயம் உறுதி செய்யப்பட்டு இருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version