அண்ணாமலையை 420மலை எனக் கூறிய பாஜக நிர்வாகி

பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்த சி டி ஆர் நிர்மல் குமார் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவின் எடப்பாடி அணியில் இணைந்து விட்டார் என அவரது ட்விட்டர் பதிவை தெரிவிக்கிறது.

தொடர்ச்சியாக பாஜகவில் இருந்து பலரும் விலகி வரும் நிலையில் பாஜகவின் முக்கிய பதவியில் இருந்த சி டி ஆர் நிர்மல் குமார் அவர்கள் அண்ணாமலை அவர்களை விமர்சனம் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர்  ட்விட்டர்பதிவு பின்வருமாறு: 

பாஜக சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான்

பாஜவின் அணைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக,

நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன் இன்று விடைபெறுகிறேன்!

என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த உங்களிடம் எனது இந்த

முடிவிற்கான காரணத்தை தெரிவிப்பது எனது கடமை, கடந்த ஒன்றரை

ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும்

செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது, சொந்த கட்சி

நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை

போன்ற அல்பத்தனம் எதுவும் இ லை. அதையும் ண்டி தன்னை நம்பி

இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு

செங்களையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும்

தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம்.

தொண்டர்களை மதிக்காது தான்தோன்றி தனம் இவற்றுடன் “மனநலம்

குன்றிய” மனிதரை போல் செயல்படும் நபரால் கட்சி அழிவை நோக்கி

செல்வதை ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது. 2019யில் இருந்த கட்சி

அமைப்பில் தற்போது 20% கூட இல்லை அதைப்பற்றி துளியும் கவலை

இல்லாமல் மாய உலகத்தில் சுற்றி வரும் ஒரு நபரால் கள எதார்த்தத்தை

என்றும் உணர முடியாது, அதை உணர்த்த முயன்று என்னை போன்று பலர்

தோல்வியுற்றோம். எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு அமைச்சருடன்

கடுமையான சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த அமைச்சரை

வெளியில் வீராவேசமாக பேசிவிட்டு திரைமறைவில் பேரம் பேசும் நபருடன்

எப்படி பயணிக்க முடியும்?

மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களேயே மிஞ்சும் அளவிற்கு ஒரு

#420மலை-யாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல

தமிழகத்திற்கே மிகபெரிய கேடு. தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள்

மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி

பயணிக்க முடியும்?

உங்கள் சகோதரன்,

CTR. நிர்மல் குமார்

பாஜகவில் இருந்து சில நாட்களுக்கு முன் காயத்ரி இரண்டாம் விலகினார் என்பதும் இதில் குறிப்பிடத்தக்கது.

இதுபோல முக்கியமான அரசியல் நிகழ்வுகளை பற்றி தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …