6 வருஷம்.. கீர்த்தி சுரேஷை திட்டி தீர்த்த விஜய்யின் நெருங்கிய நண்பர் மனைவி..!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக அந்தஸ்தை பிடித்திருக்கிறார் .

இவர் 2000 கால கட்டங்களில் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்து அதன் பிறகு ஹீரோயின் ஆக அறிமுகமானார்.

கீர்த்தி சுரேஷ்:

இவர் தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி இருந்தார் .

கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து மலையாளம் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் ஹீரோயினாக நடித்த வருகிறார் .

இதில் தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்த ரஜினி முருகன் , தொடரில் , ரெமோ , பாம்பு சட்டை, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் , சர்க்கார் , சண்டக்கோழி 2 உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

தொடர் வெற்றி படங்கள் அவரை அடுத்தடுத்த ரேஞ்சுக்கு கொண்டு சென்றது. இன்று நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

கடைசியாக இவரது நடிப்பில் ரகு தாத்தா திரைப்படம் வெளியாகி இருந்தது. இதனிடையே பாலிவுட்டிலும் சென்று திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

பாலிவுட்டில் அறிமுகம்:

அங்கு பேபி ஜான் திரைப்படத்தில் அட்லீ இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
தற்போது ரகு தாத்தா ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார் கீர்த்தி சுரேஷ்.

விஜய்யின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சஞ்சீவ் கீர்த்தி இருக்கும் அப்பார்ட்மெண்டிலே தான் இருக்கிறார்கள் .

இதனால் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டதுண்டா..? நீங்களும் சஞ்சீவ் மனைவி ப்ரீத்தி உடன் சேர்ந்து சஞ்சீவை கிண்டல் செய்ததுண்டா?எனக்கேட்கப்பட்டது.

அதற்கு கீர்த்தி சுரேஷ் பயத்துடன்… அக்கா கிண்டல் பண்ணுவாங்க நான் பண்ண மாட்டேன் சார் என்று தான் கூப்பிடுவேன் .

6 வருஷமா அந்த நடிகரிடம் திட்டு…

அவரும்….பேர் சொல்லி கூப்பிடு…. அண்ணான்னு கூப்பிடு என்று என்கிட்ட ஆறு வருஷமா சொல்லி பார்த்துட்டாரு ஆனால் நான் சார் என்று தான் கூப்பிடுவேன்.

சஞ்சீவ் வந்தாலே அவரை பார்த்ததும் நான் ரொம்பவே சைலன்ட் ஆயிடுவேன். சஞ்சீவ்விற்கு யாரும் ஒல்லியானாலும் பிடிக்காது.

அதுல நான் ஒல்லியானதால் என்னை பயங்கரமா திட்டினார்… நெறய திட்டு வாங்கி இருந்தேன். பொதுவாவே சஞ்சீவ் தனக்கு பிடித்தவங்களுக்கு நிறைய நல்ல அட்வைஸ் கொடுப்பாரு.

அப்படித்தான் எனக்கும் நானும் உடல் எடை குறைத்த உடனே ஏன் இந்த மாதிரி வேலை எல்லாம் செஞ்ச?என்று உரிமையோடு திட்டிக்கிட்டே இருந்தாரு.

பிறகு நான் கொஞ்சமா வெயிட் போட்டுட்டு அவரை போய் பார்த்ததுக்கு அப்புறம் இப்போ லுக்கிங் பிட் என்று கூறினார். அதன் பிறகுதான் எனக்கு நிம்மதியே வந்தது என கூறியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version