யூட்யூபர் இர்ஃபானுக்கு 7 ஆண்டு சிறை..? வெளியான பரபரப்பு தகவல்கள்..!

டெக்னாலஜி வளர்ந்து வந்த வேகத்தில் பல பேர் தங்களுடைய விதவிதமான திறமைகளை வெளிப்படுத்தி சாதாரண மக்கள் கூட மிக குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய நட்சத்திர நடிகர்களுக்கு ஈடாக சம்பாதிக்கும் அளவுக்கு சொத்துக்களை சேர்க்கும் அளவுக்கும் பிரபலம் அடைந்து மிகப்பெரிய ஆளாக வளர்ந்து விடுகிறார்கள் .

அலுவலகம் செல்லும் போதும், கல்லூரிகளுக்கு செல்லும் போதும், பேருந்தில் பயணிக்கும் போதும் சில நிமிடங்கள் கேப் கிடைத்தாலே மொபைல் போனில் இருக்கும் பல விஷயங்களை அன்றாடம் நடக்கும் பல விஷயங்களை மக்கள் பார்க்க ஆர்வம் இருக்கிறார்கள்.

யூடியூப் பிரபலங்கள்:

சில மணி நேரம் யூடியூப் வீடியோக்களால் லட்சக்கணக்கில் சம்பளம் மாதம் தோறும் வருகிறது. அப்படி பல பேர் தங்களுக்கென தனி யூடியூப் சேனல் ஆரம்பித்து பிரபலமானவர்களும் உண்டு. ஆனால் அதில் தனித்துவமிக்க சில YouTube சேனல்கள் மட்டுமே தற்போது வரை நிலைத்திருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் அதன் மூலம் வருமானம் கொட்டோ கொட்டோ என கொட்டுகிறது. இப்படிப்பட்ட சேனலை வைத்து மிகப்பெரிய அளவில் மிக குறுகிய காலத்திலே பேமஸ் ஆனவர் தான் YouTuber இர்பான். இவர் “இர்பான் வியூ” என்ற YouTube சேனலை நடத்தி வருகிறார்.

இதில் பல நாடுகளில் உள்ள உணவுப் பொருட்களை ருசித்து அதனுடைய சுவை அதில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் ஆகியவற்றைப் பற்றி விளக்கமாகவும் பார்ப்பவர்கள் வாயில் எச்சில் ஊறும் அளவுக்கு படம் பிடித்து காட்டியதன் மூலமும் பெருவாரியான ரசிகர்களை பெற்றார் இர்ஃபான்.

புட் ரிவியூர் இர்பான்:

பல நாடுகளில் உள்ள உணவுகளை அங்கு போய் சென்று சுவைத்து அது எப்படி இருக்கிறது என நம்ம ஊர் மக்களுக்கு நம்ம எதார்த்தமான எளிமையான பேச்சாலும் விளக்குவார்.

குறிப்பாக நாம் சாப்பிட தயங்கும் உணவுகளான பாம்பு கறி, பூரான் உள்ளிட்டவற்றையெல்லாம் சுவைத்து சாப்பிட்டு அது எப்படி இருக்கிறது என கூறி நம்ம ஊர் மக்கள் பல பேர் முகம் சுளிக்க வைத்ததன் மூலமாகவும் பிரபலமானவர் இர்பான்.

இதுதான் அவரது யூடியூப் சேனல் இதன் மூலமாக அவர் மாசத்தில் பல லட்சக்கணக்கில் வருமானத்தை சம்பாதிக்கிறார். சொந்தமாக வீடு, பல சொகுசு கார்கள், பங்களா வீடு உள்ளிட்டவற்றை வாங்கி மிகப் பெரிய நட்சத்திர ரேஞ்சுக்கு மிக குறுகிய காலத்திலேயே உயர்ந்துவிட்டார்.

ஒரு கட்டத்தில் உணவுப் பொருட்களை தாண்டி பல்வேறு வகையான வீடியோக்களை இணையத்தில் வெளியிட ஆரம்பித்தார்.

லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இவர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் நிலையில் தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது இர்பான் மிகப்பெரிய சர்ச்சை ஒன்று சிக்கி இருக்கிறார். ஆம், மனைவியின் கருவில் இருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை வெளிநாட்டில் சென்று சோதனை செய்து அதனை தமிழ்நாட்டில் அறிவித்திருக்கிறார்.

தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து ஒரு பெரிய பார்ட்டி வைத்து அறிவித்ததால், அவர் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

பலரும் வெளிநாட்டில் தானே சோதனை செய்தார் என்று இர்ஃபானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குழந்தையின் பாலினத்தை அறிந்து பார்ட்டி:

ஆனால், இந்தியாவில் பிறந்த எவரும் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்வது தவறு என்ற வகையில் அவர்கள் உலக நாடுகளில் எங்கு போய் இதனை செய்தாலும் அது குற்றம் என்ற வகையில் தான் வருகிறது.

இதனை தொடர்ந்து மருத்துவத்துறை இர்பான் மீது புகார் அளிக்க முடிவு செய்து இருக்கிறது. மேலும் இப்படியான செயல்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் உண்டு.

எனவே இர்ஃபானின் இந்த செயல் சமூககத்தில் மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. மிஃபெரிய தண்டனைக்குரிய குற்றம்.

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்ள வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இர்பானுக்கு 7 ஆண்டுகள் சிறை:

மேலும், இப்படியான தம்பதிகளை கண்டறிந்து வெளிநாடு டூர் என்ற பெயரில் சில லட்சங்களை வசூல் செய்து வெளிநாட்டிற்கு அழைத்து சென்று பாலினத்தை கண்டறிய உதவி அதன் மூலம் சம்பாதிக்கும் முயற்சிலும் டூர் ஏஜெண்டுகள் இறங்க வாய்ப்புள்ளது.

இது போன்ற காரணங்களால் இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பவும் முடிவு செய்திருக்கிறது மருத்துவத்துறை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் காவல்துறையிலும் யூடியூபர் இர்பான் மீது புகார் கொடுக்க உள்ளது. இது சக இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam