கொரோனாவால் இறந்த 750 பேரின் உடல்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக குளிரூட்டப்பட்ட லாரிகளில்.. – காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

கடந்த வருடம் (2020) ஏப்ரல் மாதத்தில் நியூயார்க் சிட்டி கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மையமாக உருவெடுத்தபோது, நோய்த்தொற்றில் ​​மூழ்கிய நகரம் அந்த நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை ப்ரூக்ளின் நதிக்கரையில் குளிரூட்டப்பட்ட லாரிகளில் சேமித்து வைத்துள் தகவல் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 

 

ஒரு வருடத்திற்கும் மேலாக, சன்செட் பூங்காவில் 39 வது ஸ்ட்ரீட் பையரில் தற்காலிக சவக்கிடங்குகளில் நூற்றுக்கணக்கான பிணங்கள் வைக்கப்பட்டுள்ளன. 

 

கடந்த வாரம், ஒரு நகர சபை, சுகாதாரக் குழுவிற்கு அளித்த அறிக்கையில், நியூயார்க் நகர தலைமை மருத்துவ பரிசோதகர் அலுவலகத்தின் அதிகாரிகள், சுமார் 750 கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் பிணங்கள் இன்னும் லாரிகளுக்குள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக ஒப்புக் கொண்டனர்.

 

சிட்டி என்ற இலாப நோக்கற்ற செய்தி இணையதளம் ஒன்று பிணங்கள் அதிக அளவில் உள்ளன. ஆனால், அவற்றின் எண்ணிக்கையை குறைத்து கூற முயற்சிகள் நடப்பதாக  தெரிவித்தனர்.

 

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது குறித்து அதிகாரிகள் கூறும் போது, லாரிகளில் பிணங்கள் இருப்பது உண்மை தான். அவை, ஹார்ட் தீவில் புதைக்கப்பட வேண்டும் என்று இந்த பிணங்களின் குடும்பத்தினர் விரும்புகின்றனர்.

 

 

ஏற்கனவே, ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அங்கு புதைக்கப்பட்ட நிலையில், லாங் ஐலேண்ட் சவுண்டில் ஒரு மைல் நீளமுள்ள நிலப்பரப்பு அமெரிக்காவின் மிகப்பெரிய வெகுஜன கல்லறைக்கு சொந்தமாக உள்ளது. 

 

லாரிகளில் எஞ்சியிருக்கும் பெரும்பாலான பிணங்கள்ளை ஹார்ட் தீவில் ஏற்கனவே அவர்களது முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கு அருகிலேயே அடக்கம் செய்வதை விரும்புவதாகக் கூறியுள்ளதாக மனியோடிஸ் சுகாதார ஆணையத்திடம் தெரிவித்தார்.

 

கொரோனா நோய்த்தோற்றை விரட்ட உலகமே போராடி வரும் நிலையில், கொரோனாவால் இறந்த உடல்களை குறிப்பிட்ட இடத்தில் தான் புதைக்க வேண்டும் என்று ஒரு வருடத்திற்கும் மேலாக குளிரூட்டப்பட்ட லாரிகளில் வைத்துள்ளார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam