கடந்த 2004 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராக இருப்பதாக ரசிகர்களுக்கு கொண்டாட்டமான அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.
Ravikrishnan Sonia Agarwalஇந்த படம் வெளியாகி 10 ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலேயே இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது தயாரிக்கும்.. எப்படி தயாராகும் என்று இயக்குனர் செல்வராகவனிடம் ரசிகர்கள் பலரும் நச்சரித்து வந்தனர்.
இதனை தொடர்ந்து இந்த படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைவதை தொடர்ந்து இந்த படத்தை இரண்டாம் பாகத்தை இயக்க இயக்குனர் செல்வராகவன் முன்வந்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
Director Selvaragavaஇதற்கான கதையை ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் நடிகரும் இயக்குனருமான செல்வராகவன் வரும் ஜூன் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்புகளை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
7G ரெயின்போ காலனி 2
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த படத்தின் திரைக்கதையில் கவனம் செலுத்தி வந்திருக்கிறார் செல்வராகவன். முதல் படத்தின் ஜனரஞ்சகமான பிரம்மாண்டமான வெற்றி இந்த படத்திலும் தொடர வேண்டும் என்ற முனைப்பு தான் நடிகர் செல்வராகவனை இத்தனை நாட்கள் இந்த படத்தை திரைக்கதையில் கவனம் செலுத்த வைத்திருக்கிறது.
Actor Ravikrishnaஇந்த படத்தில் நடித்த நடிகை சோனியா அகர்வால் தான் செல்வராகவன் திருமணம் செய்து கொண்டு விவாகரத்தும் செய்திருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் கண்டிப்பாக சோனியா அகர்வால் நடிக்க மாட்டார் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றன.
ஆனால் படத்தின் ஹீரோவாக ரவி கிருஷ்ணாவே நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி 7ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகத்தில் நடிகை பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக கூறுகிறார்கள்.
Actor Ravikrishnaகதையே கேட்காமல் ஒப்புக்கொண்ட ரவி கிருஷ்ணா
இந்த படத்தில் ஹீரோவாக நடித்த கேட்ட பொழுது கதையே கேட்காமல் நடிக்க ஒப்பு கொண்டிருக்கிறார் ரவிகிருஷ்ணா. மேலும் உடல் எடை கூடி இருக்கும் இவர் கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தற்பொழுது உடனடியாக குறைத்து வருகிறார் எனவும் இன்னும் இரண்டு மாதத்தில் இந்த படத்திற்கு தயாராகி விடுவார் என்று கூறப்படுகிறது.
Actor Ravikrishnaமேலும் 7g ரெயின்போ காலனி முதல் பாகத்தில் நடித்திருந்த காமெடி நடிகர்கள் பலரும் எந்த படத்திலும் நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவலும் இணையத்தில் வெளியாகி இருக்கிறதே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது