பிரபல இளம் நடிகர் பரத் நடிப்பில் உருவான சேவல் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் மும்பையைச் சேர்ந்த மாடல் அழகி பூனம் பார்வா.
இந்த பட்டத்தை தொடர்ந்து இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் கிடைத்தன. பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் என தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு தேவதையாக தோன்றிய இவர் அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக தெனாவட்டு அரண்மனை 2 ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை பூனம் பாஜ்வாவால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை.
காரணம் என்னவென்றால் பட வாய்ப்புகள் கூட தன்னுடைய உடல் எடையும் கூடி குண்டாகி போனார் நடிகை பூனம் பாஜ்வா. இதனால் ஆன்ட்டி கதாபாத்திரங்களில் நடிக்கும் அளவுக்கு இறங்கி வந்தார்.
ஏற்கனவே பல மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கெஸ்ட் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தற்பொழுது வெப் சீரிஸ்கள் திரைப்படங்கள் என பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் மலையாளத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து முடித்து இருக்கிறார்.
இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இணைய பக்கங்களில் இவர் எந்த அளவுக்கு ஆக்டிவாக இருக்கிறார் என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
ஏனென்றால் தன்னை பின்தொடரக்கூடிய லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு கவர்ச்சி தரிசனம் கொடுப்பதை மறக்காமல் செய்து வருகிறார் அம்மணி. நடிகை கிரணுக்கு போட்டியாக படுக்க கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு இணையத்தில் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறார் அம்மணி .
இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவன் ஒருவன் நடிகை பூனம் பாஜ்வாவிற்கு காதல் கடிதம் எழுதிய ஒரு விஷயம் பரபரப்பு கிளம்பிட்டு இருக்கிறது.
இதனை பூனம் பாஜ்வாவே கூறியிருக்கிறார். அந்த சிறுவன் எழுதியதாவது, உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.. நான் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்.. எனக்கு 21 வயசு ஆகும் வரை காத்திருங்கள்.. நான் ரெடி.. எனக்கு வயது வித்தியாசம் ஒன்றும் பிரச்சனை இல்லை.. என் அம்மாவை சமாளித்து விட்டேன்.
திருமணத்திற்கு பிறகும் கிளாமராக நீங்கள் நடிக்கலாம் என அந்த மெசேஜில் குறிப்பிட்டிருக்கிறார் என்று பூனம் பாஜ்வா கூறியிருக்கிறார். இந்த தகவல் தற்போது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.