“புட்டுகிட்டு போன சிறுவனின் காதல்..” – 90ஸ் கிட்ஸ் கொண்டாட்டம் – கண்ணீர் விடும் சிறுமி..! – தீயாய் பரவும் வீடியோ..!

வேலையும் இல்லாமல் திருமணமும் ஆகாமல் 90’ஸ் கிட்ஸ்கள் பரிதவித்து வருகின்றனர். நாங்க படிக்கும் போதெல்லாம் வராத கொரொனா எங்களுக்கு திருமணம் பேச்சு நடக்கும் போது வந்து எங்கள் வாழ்வை பாழாக்குகிறது என்று 90’ஸ் கிட்ஸ்களின் வேதனை குறித்த மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி பலரை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து வருகிறது. 

 

இவ்வாறாக காலத்தின் பிடியில் சிக்கி தவித்து கொண்டிருக்கும் 90’ஸ் கிட்ஸ்கள் பலரை தற்போது எரிச்சல் அடைய வைத்தது எல்லாம் ஒரு 2k கிட்ஸ் ஒண்டிப்புலியும், ஒத்த ரோசாவும் தான். 

 

சென்னை புள்ளைங்கோவாக வலம் வந்த குட்டி வடிவேலு என்ற சஞ்சய் , கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சோபி இந்த இரு காதல் ரோமியோக்களும் இணையத்தில் செய்து வரும் காதல் அலும்புகளை பலர் வருத்டெடுத்து வருகிறார்கள் .

 

ஊரடங்கால் பள்ளிகளுக்கு ஒரு வருடமாக தொடர் விடுமுறை அளிக்கபட்டிருக்கும் இந்த சூழலில் ஆன்லைன் வகுப்பில் பாடம் கவனிக்காமல் இந்த ஒண்டிப்புலி இன்ஸ்டாகிராம் செயலி மூலம் புதிய கணக்கு தொடங்கி , மீசை கூட முளைக்காத ஒண்டிப்புலிக்கு ஹீரோ ஆசை மனதுக்குள் முளைக்க தனியா “டப் மாஸ்” செய்து அதனை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வந்தார் இந்த ஒண்டிப்புலி சஞ்சய்.

 

பள்ளி செல்லும் வயதில் காதலா ? என்று மற்ற பெற்றோரை போல இவர்களும் அதிர்ச்சி அடைவார்கள் என்று நினைத்தால் பொண்ணு கேட்டு வந்த பால் டப்பாவின் காதலை சோபி வீட்டில் ஏற்றுக்கொண்டனர். 

 

அதன் பிறகு இருவரும் சேர்ந்து காதல் ரசம் சொட்ட சொட்ட நடிப்பில் அன்றைய காதல் மன்னன் ஜெமினி கணேசனை மிஞ்சும் அளவிற்கு காதலை வெளிப்படுத்தி வீடியோவை இன்ஸ்டாகிராமில் இறக்கினர். 

 

 

தங்கள் காதலை உலகம் அறிய போகிறது, நிறைய பாலோவர்ஸ் வர போறாங்க என்று காதல் கற்பனையில் இறக்கை அடித்து பறந்து கொண்டிருந்த இரு ஜோடிகளுக்கு ஒரு அதிர்ச்சி வந்து சேர்ந்தது. 

 

இவர்களின் காதலை கண்டு காண்டாகிய 90’ஸ் கிட்ஸ்கள் பலர் பால் டப்பாவான சஞ்சய் ஐ. டி க்கு ரிப்போர்ட் அடித்து தூக்கினர். இதனால் வீடியோ கால் மூலம் ஒத்தரோஸா சோபிக்கு போன் செய்து அழவே , சோபியின் அம்மா சஞ்சய்க்கு ஆறுதல் கூறுகிறார். 

 

 

சோபியா பால் டப்பாவின் அழுகையை கண்டு ” அத்தே அவங்கள அழ வேண்டாம்னு சொல்லுங்க அத்தை.. எனக்கு கஷ்டமா இருக்கு.. அழாத பேபி.. நான் இருக்கேன் என்று ஆறுதல் கூறவே அந்த வீடியோவை பார்ப்பவர்கள் பலரும் குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்தனர். 

 

பள்ளி காதல் பலருக்கு பப்பி லவ்வாகவே முடிந்து போகும் இந்த சூழலில் அதற்கு பெற்றோர்களும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது தான் வேடிக்கையின் உச்சம் என்று நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

 

இந்நிலையில், ஷோபி என்ற அந்த சிறுமி தற்போது நான் இனிமே இது மாதிரி பண்ண மாட்டேன் என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam