கமல்ஹாசன் தங்கச்சி.. சரத்குமார் மனைவி.. சினிமாவை விட்ட நடிகை ஸ்ரீஜாவின் தற்போதைய நிலை..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை ஸ்ரீஜா 1971-ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ஆம் தேதி நாடகக் கலைஞராக விளங்கிய ஸ்ரீதரன் மற்றும் உஷா தம்பதிகளுக்கு பெண் குழந்தையாக பிறந்தவர். 

இவர் தனது ஆரம்பக் கல்வியை திருவனத்தபுரத்தில் இருக்கும் கார்த்திகை திருநாள் பெண்களுக்கான அரசு தொழில் கல்வி மேல்நிலைப் பள்ளியில் படித்திருக்கிறார்.

இதனை அடுத்து இவர் திருவனந்தபுரத்திலேயே இருக்கும் எஸ் எஸ் மகளிர் கலை கல்லூரியில் இளங்கலை படித்து முடித்த இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு தன் பெற்றோர்களோடு இணைந்து சில நாடகங்களில் நடித்து அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றவர்.

நடிகை ஸ்ரீஜா..

நடிகை ஸ்ரீஜாவை பொறுத்த வரை அதிகளவு மலையாள படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை அமைத்துக் கொண்டவர். ஒரு சில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் தனது அற்புத நடிப்பின் மூலம் ஏராளமான தமிழ் ரசிகர்களையும் பெற்றிருக்கிறார்.

மேலும் நடிகை ஸ்ரீஜா 1982 -ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான நிதி என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இவர் குழந்தையாக இருக்கும் போதே திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இவருக்குள் இவரது பெற்றோர்களின் தூண்டுதலின் மூலம் ஏற்பட்டது என்று சொல்லலாம்.

இதனை அடுத்து 1985-ஆம் ஆண்டு முத்தாரம் குன்னு பி.ஓ, 1987-இல் ஒரு மைமாச புலரியில் 1988- இல் ஒரு மயில் ஒரு மணி நாடம், 1989-இல் அன்னக்கொடி கோடம்பாக்கம் விளக்குன்னு போன்ற மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததை அடுத்து கிடைக்கின்ற சின்ன, சின்ன வேடங்களில் நடித்த இவர் அதனை அடுத்து கதாநாயகியாக பல மலையாள படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழைப் பொறுத்த வரை 1990-ஆம் ஆண்டு மௌனம் சம்மதம் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமான இவர் இந்த படத்தில் விஜய் லக்ஷ்மி என்ற கேரக்டர் ரோல் அற்புதமான முறையில் செய்து அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றிருக்கிறார்.

கமலஹாசன் தங்கச்சி..சரத்குமார் மனைவி..

மேலும் இந்த படத்தில் அவர் சரத்குமாரின் மனைவியாக நடித்திருந்தார். இந்த படத்தின் கதை முற்றிலும் இவரை சுற்றி நகரக்கூடிய வகையில் அமைந்திருந்ததால் இந்த படம் ஒரு மாபெரும் வெற்றி படமாக அவருக்கு அமைந்தது.

இதனைத் தொடர்ந்து 1991 – ஆம் ஆண்டு சேரன் பாண்டியன், எம்ஜிஆர் நகரில், தையல் காரன் போன்ற திரைப்படங்களில் அதே ஆண்டு நடித்து பிஸியான நடிகைகளில் ஒருவராக மாறினார். இவர் கண்ணழகை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர்படை இருந்தது என்று சொல்லலாம்.

இதனை அடுத்து 1992-ஆம் ஆண்டு வெளி வந்த முதல் குரல், தங்கபாப்பா, புருஷனை கைக்குள்ள போட்டுக்கனும், செவ்வந்தி போன்ற திரைப்படங்களில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதனை அடுத்து தமிழைப் பொருத்த வரை கடைசியாக இவர் 1994 நடித்த என் ராஜாங்கம் திரைப்படத்தில் கல்யாணி கேரக்டரை பக்காவாக செய்த இவர் திரைப்படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

சினிமாவை விட்ட நடிகையின் தற்போதைய நிலை..

அந்த வகையில் இவர் தூர்தர்ஷனில் ஒரு பூ விரியுன்னு, மனுஷ்ய பந்தங்கள், கனகசிலங்கா போன்ற தொடர்களில் நடித்த இவர் ராஜ் டிவியில் இதிகாச கதைகளில் சகுந்தலாவாக நடித்தார்.

இவரது சினிமா கேரியரில் சரத்குமாருக்கு மனைவியாகவும், மம்முட்டி கமலஹாசனுக்கு தங்கையாகவும் நடித்த இவர் தன்னோடு இணைந்து நடித்த சந்தன பாண்டி என்பவரை  காதலித்து இருக்கிறார்.

1994-இல் செவ்வந்தி திரைப்படம் வெளி வருவதற்கு முன்பே 1993 -இல் அந்த படத்தின் ஹீரோவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கு பிறகு என் ராஜாங்கம் படத்தில் நடித்து அதன் பிறகு திரை உலகிற்கு பை, பை சொல்லி விட்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam