கோவாவில் கச முசா உடையில் 96 நடிகை கௌரி ஜி கிஷன்

2018 ஆம் ஆண்டு வெளியான 96 படத்தின் முதன் முதலில் தோன்றி தற்போது தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென்னிந்திய திரைப்பட துறையை தன் பக்கம் ஈர்த்து வைத்திருப்பவர் நடிகை கௌரி ஜி கிஷன் அவர்கள். இவர் கேரளாவில் உள்ள அடூர் என்ற பகுதியில் 1999 ஆகஸ்ட் 17ஆம் தேதி பிறந்தவர்.

இவரது தாயார் வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் இவரது தந்தை அடூர் நகரை சேர்ந்தவர் இவரது தாய் மொழி மலையாளம் ஆகும் தனது வாழ்க்கையில் பெரும்பகுதியை சென்னையில்தான் கழித்தார் 2020 ஆம் ஆண்டில் பெங்களூரு கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தில் மூன்று முக்கிய பாடங்களில் பத்திரிக்கை உளவியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்றுள்ளார்.

2018 ஆம் ஆண்டு வெளியான 96 என்ற திரைப்படம் இவருக்கு மிகவும் திருப்புமுனையாக இருந்தது தான் தோன்றிய முதல் திரைப்படத்திலேயே இவ்வளவு பெரிய திரைப் புகழ் அடைவார் என அவரே எதிர்பார்க்கவில்லை என பல இன்டர்வியூகளில் தெரிவித்து இருக்கிறார் நான் அடைந்த புகழ் அனைத்தும் அந்த டைரக்டருக்கும் நடிகை திரிஷாவுக்கு மேல் சேரும் என அவர் குறிப்பிட்டு இருந்தார்.

96 திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் மிகப்பெரிய ஹிட் அடித்தது இந்த திரைப்படத்தை தெலுங்கில் உடனே ரீமேக் செய்து வெளியிட்டு இருந்தார்கள் அந்த படமும் தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது ஏனெனில் இந்த திரைப்படத்தின் கதைக்களம் பள்ளி பருவ காதல் பற்றி கூறியிருந்தது இது தமிழ் ரசிகர்கள் அனைவரையும் தன்னுடைய பள்ளிப்பருவ காதலை இணைத்து பார்க்கும்படி படத்தின் இயக்குனர் படத்தைக் காட்சிப்படுத்தியிருந்தார்.

இந்த படத்தை பார்த்து வெளியே வந்த தமிழ் ரசிகர்கள் அனைவரும் கண்களில் கண்ணீருடன் முகத்தில் ஒருவித இயக்கத்துடனும் வெளியே வந்தனர் என திரை விமர்சனங்கள் பலரும் தங்களது விமர்சனங்களில் குறிப்பிட்டு இருந்தனர் அந்த அளவுக்கு இந்த படம் கொடுத்த தாக்கம் தமிழர்கள் மத்தியிலும் தென்னிந்தியர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்வுகளை உண்டாக்கியது அப்படிப்பட்ட மிக முக்கியமான திரைப்படத்தில் அறிமுகமாகி இருப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாக நினைக்கிறேன் என இவர் ஒரு இன்டர்வியூவில் கூறியிருந்தார்.

96 படத்தின் வெற்றிக்கு பிறகு 2019-ல் மலையாளத்தில் மார்க்கமாலி என்ற திரைப்படத்தில் ஜெசி என்ற கதாபாத்திரத்தின் மூலம் மலையாள திரை உலகத்தில் முதல் முதலில் அறிமுகமானார் இவர். 2020 ஆம் ஆண்டு தெலுங்கில் 96 படத்தின் தெலுங்கு வெர்சனில் நடித்திருந்தார் நடிகை கௌரி அவர்கள்.

அதன் பிறகு தமிழில் உச்ச நட்சத்திரம் ஆன விஜயின்மாஸ்டர் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்க அதில் விஜய் ப்ரொபஷனராக இருக்கும் கல்லூரியில் மாணவியாக சவிதா என்ற கதாபாத்திரத்தில் கௌரி அவர்கள் நடித்திருந்தார் இந்த படத்தில் வரும் காட்சிகளில் விஜய் கௌரியை சப்போர்ட் செய்து கல்லூரி தேர்தலில் வெற்றி பெற வைப்பார்.

அதன்பிறகு 2021 ஆம் ஆண்டு மலையாளத்தில் அனுராக்கியத்தின் ஆண்டனி என்ற திரைப்படத்தில் சஞ்சனா மாதவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் அதன் பின்பு 2021 ஆம் ஆண்டு தமிழில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் சிறு கேரக்டரில் நடித்திருந்தார்.

சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தான் எங்கே சென்றாலும் அங்கே புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்து வருகிறார் அந்த வகையில் தற்போது இவர் கோவாவுக்கு சென்றுள்ளார் அங்கே குட்டை டவுசரில் கோவா கடற்கரையில் இவர் போடும் ஆட்ட பாட்டங்களை எல்லாம் வீடியோக்களாகும் புகைப்படங்களாகவும் தனது instagram பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …