“பல்லி மிட்டாய் குடுத்தான்.. திறந்து பார்த்தால் என்னை பற்றி..” சீரியல் நடிகை வெளியிட்ட ருசீகர தகவல்..!

சீரியல்கள் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ப்ரீத்தா. இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் கிடையாது. இவர் தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்தவராவார்.

பெரும்பாலும் தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகைகளாக இருந்தாலும் சரி சீரியலில் நடிக்கும் நடிகைகளாக இருந்தாலும் சரி அதிகபட்சம் வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழில் பிரபலமாகும் நடிகைகள் வெகுசிலர்தான்.

ருசீகர தகவல்

அந்த வகையில் நடிகை பிரீத்தா ரெட்டியும் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார். தற்சமயம் விஜய் டிவியில் அதிக அளவில் வரவேற்பை பெற்ற சீரியலாக இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரீத்தா.

சிறகடிக்க ஆசை சீரியலுக்கு தமிழக அளவிலேயே வரவேற்பு என்பது மிக அதிகமாக இருந்து வருகிறது. இதற்கு முன்பு அவர் நிறைய சீரியல்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட சிறகடிக்க ஆசை சீரியல்தான் இவருக்கு அதிகமான வரவேற்பு பெற்று தந்துள்ளது.

திறந்து பார்த்தால்

ஏனெனில் இந்த சீரியலில் நடித்துள்ள கதாபாத்திரம் தனிப்பட்ட கதாபாத்திரமாக இருக்கிறது மனதில் என்ன தோன்றுகிறதோ அதை பேசிவிடும் ஒரு கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. நிஜ வாழ்வில் இருக்கும் என்னுடைய கதாபாத்திரத்துடன் ஸ்ருதி கதாபாத்திரம் மிகவும் ஒன்றி போகிறது என்று ப்ரீத்தா கூறுகிறார்.

மேலும் அவர் கூறும்போது நிறைய அம்மாக்கள் என்னுடைய கதாபாத்திரத்தை பார்த்துவிட்டு இதே போன்ற மனைவிதான் உனக்கும் வரவேண்டும் என்று தங்கள் மகன்களுக்கு சாபம் விடுகின்றனர். ஏனெனில் என்னை போன்ற ஒரு மருமகளை மேய்ப்பது என்பது மிகவும் கடினம் என்று கூறியிருந்தார்.

பல்லி மிட்டாய் குடுத்தான்

ஆனால் அம்மாக்கள் இப்படி எல்லாம் கூறினாலும் கூட ஆண்களுக்கு என்னை போன்ற மனைவியைதான் பிடிக்கிறது அவர்கள் என்னை போன்ற மனைவியை தான் விரும்புவதாக கமெண்ட் செய்கின்றனர் என்று அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் தனக்கு தொடர்ந்து காதல் ப்ரோபோசல்கள் வந்து கொண்டிருக்கின்றன என்று கூறுகிறார் ப்ரீத்தா. காதல் ப்ரோபஸல்களை எப்பொழுதும் நேரடியாகவே எதிர்கொள்வேன் அவர்களிடம் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கூறி விடுவேன்.

எனக்கு நிறைய லவ் ப்ரொபஷல் வந்துள்ளன. அதில் ஒருவர் கொடுத்த கிப்ட் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு பாட்டிலில் பல்லி மிட்டாய் போல போட்டு அவர் கொடுத்தார். அதனை எடுத்து கொட்டி பார்த்த பிறகு அதில் ஒவ்வொன்றும் பேப்பரை கொண்டு செய்திருந்தது.

அதைப் பிரித்து பார்த்தபோது அதில் ஒவ்வொன்றிலும் என்னை வர்ணித்து அவர் எழுதியிருந்தார் என்று ப்ரீத்தா தெரிவித்துள்ளார் தனக்கு கிடைத்த பரிசுகளிலேயே அது வித்தியாசமானது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version