விஜய்யுடன் சேர்ந்து படம்.. வாய்ப்பே இல்ல.. இது தான் காரணம்..! சுந்தர் சி ஒரே போடு..!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருந்து வருபவர் தான் சுந்தர்சி. இவர் இயக்குனராக பல்வேறு திரைப்படங்களை இயக்கி அதன் பிறகு ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

ஆரம்ப காலகட்டத்தில் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து படம் எடுக்கும் நேர்த்திகளை கற்று தெரிந்து கொண்டார்.

இயக்குனர் சுந்தர் சி:

அதன் பிறகு, முறைமாமன் என்ற காமெடி திரைப்படத்தின் மூலமாக இவர் இயக்குனராக அறிமுகமானார்.

இவரது இயக்கத்தில் வெளிவந்த மாபெரும் ஹிட் அடித்த திரைப்படங்களான உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம் உள்ளிட்ட திரைப்படங்களை சொல்லலாம்.

மேட்டுக்குடி , வின்னர் , நாம் இருவர் நமக்கு இருவர் , லண்டன் , கலகலப்பு உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி மாபெரும் ஹிட் கொடுத்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்கி மாபெரும் ஹிட் கொடுத்த சுந்தர்சி தொடர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களை எழுதி இருந்தாலும் அவருக்கான மிகப்பெரிய அங்கீகாரம் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை.

இருந்தாலும் தொடர்ந்து தனது முயற்சியை கைவிடாமல் இயக்குனராக பல படங்களை எடுத்து வருகிறார்.

இதனிடையே நடிப்பில் ஆர்வம் காட்டிய சுந்தர்சி கடந்த 2006 ஆம் ஆண்டு தலைநகரம் திரைப்படத்தை இயக்கி நடிகராக அறிமுகமானார்.

இப்படம் ஆரம்பத்தில் சரியாக ஓடவில்லை என்றாலும் பின்னர் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படமாக பார்க்கப்பட்டது.

நடிகராக சுந்தர் சி:

2007 இல் வெளிவந்த வீராப்பு திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து சண்டை, பெருமாள் ,தீ, ஐந்தாம் படை, நகரம் மறுபக்கம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

அண்மைக்காலமாக இவரது இயக்கத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் அரண்மனை 1 , அரண்மனை 2 , அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

கடைசியாக அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கி மே 3ம் தேதி வெளியாகியிருந்தது. இப்படம் கலவை விமர்சனம் விமர்சனத்தை பெற்றிருந்தது.

இப்படத்தில் நடிகை தமன்னா, ராசி கண்ணா உள்ளிட்டோ நடித்திருந்தார்கள். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய்யுடன் நீங்கள் இதுவரை இயக்கத்ததற்கு என்ன காரணம்?

இனிமேல் படம் இயக்கும் ஐடியா இருக்கிறதா? என கேட்டதற்கு சுந்தர்சியின் பதில் யாரும் எதிர்பாராத விதமாக இருந்தது. அது பற்றி தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

விஜய்யுடன் அது நடக்காத காரியம்:

நடிகர் விஜய்யை வைத்து படம் எடுப்பது என்பது நடக்காத காரியம். விஜய்யை வைத்து படம் பண்ண வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டது.

ஆனால், பல வெவ்வேறு காரணத்தால் மிஸ் ஆகிடுச்சு. இது பற்றி தனியார் youtube சேனல் ஒன்றுக்கு கிட்டத்தட்ட ஒரு ஒரு மணி நேரம் பேசலாம். அந்த அளவிற்கு அதில் அவ்வளவு பெரிய கதை இருக்கிறது என்றார்.

இப்போ விஜய்யின் அவரோட ரேஞ்சுக்கு அவருடைய அந்தஸ்தும் எங்கேயோ போயிடுச்சு. அதேபோல் என்னோட பொசிஷனும் ஆண்டவன் புண்ணியத்தில் நல்லதாகவே இருக்கிறது எந்த ஒரு குறையும் இல்லை.

முன்பெல்லாம் சினிமா எப்படி இருந்தது என்றால், ஒரு ஹீரோ டேட் கொடுப்பாங்க அவங்களாகவே கூப்பிட்டு. கேட்பார்கள். படத்தோட பிள்ளையார் சுழி ஹீரோவில் தான் ஆரம்பமாகும்.

கிட்டத்தட்ட ஒரு 12 வருஷமாக என்னோட ஸ்டைலில் படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேன் .நான் ஒரு கதையை எழுதுகிறேன்.

அந்த கதைக்கு பொருத்தமான ஹீரோ யார் என்பதை தேடி அவர்கள் அவர்களை வைத்து படம் எடுத்துக் கொள்கிறேன்.

இப்படித்தான் கடந்த இப்படித்தான் என்னுடைய சினிமா வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது.

இதில் பல சந்தர்ப்பங்களில் விஜய்யுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தும் அது நடக்காமல் போய்விட்டது என சுந்தர்சி கூறி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version