மனோரமா ஆச்சி எனக்கு சொன்ன ஒரு வார்த்தை..இப்போவும் அதை போடுறேன்.. ஊர்வசி..!

கேரள மாநிலத்தை சேர்ந்தவரான நடிகை ஊர்வசி தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக ஒரு காலகட்டத்தில் வலம் வந்து கொண்டிருந்தார்.

இவர் தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார் .

நடிகை ஊர்வசி:

திரைப்படங்களை தாண்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று மிகவும் பேமஸாக இருந்து வந்தார். முதன் முதலில் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர் ஆன கே. பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த முந்தானை முடிச்சு திரைப்படத்தின் மூலமாக ஹீரோயின் ஆக அறிமுகமானார் .

ஊர்வசிக்கு முதல் படமே மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதில் அவரது நடிப்பு ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது .

இதனால் தன்னுடைய முதல் படத்திலேயே ஏகோபித்த வரவேற்பை பெற்ற ஊர்வசி தொடர்ந்து அடுத்தடுத்த திரை திரைப்பட வாய்ப்புகளை பெற்றார்.

திருமண வாழ்க்கை:

இதுவரை இவர் கிட்டத்தட்ட 702 படங்களில் நடித்திருக்கிறார். தன்னுடைய 10 வயதிலேயே மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார் ஊர்வசி.

பின்னர் 1980 இல் வெளிவந்த திக்விஜயம் திரைப்படத்தில். நடித்து தனது நடிப்பை பயணத்தை துவங்கினார். இவர் சினிமாவில் பீக்கில் இருந்த காலகட்டத்தில் மலையாள நடிகரான மனோஜ் கே ஜெயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .

இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் பட்சத்தில் முதல் கணவருடன் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

47 வயதில் மறுமணம்:

அதை எடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு தன்னுடைய 47 வயதில் சிவப்பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .

கிட்டத்தட்ட 47 வயதில் இவர் திருமணம் செய்து கொண்டது மிகப்பெரிய சர்ச்சைக்குரிய விஷயமாக அன்று பார்க்கப்பட்டு கடுமையாக விமர்சிக்கப்பட்டார் ஊர்வசி.

சமீப நாட்களாக குணச்சித்திர வேடங்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் ஊர்வசி வீட்ல விசேஷம் திரைப்படத்தில் சரத்குமாரின் மனைவியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற படமாக பார்க்கப்பட்டது. அத்துடன் அப்பத்தா உள்ளிட்ட சில திரைப்படங்களில் ஊர்வசி தொடர்ச்சியாக நடித்து பிரபலமான குணசித்திர நடிகையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார் .

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆட்சி மனோரமா குறித்தும் அவருடன் நடித்த அனுபவத்தை குறித்தும் பகிர்ந்து இருக்கிறார் ஊர்வசி.

மனோரமா சொன்னதை இன்னும் போடுறேன்:

அதில், நான் ஆட்சி மனோரமா உடன் பணி புரிந்த போது அவரது சொந்த ஊரான பள்ளத்துறைக்கு நான் போயிருக்கிறேன்.

சூட்டிங் ஸ்பாட்டில் எல்லோருமே ஆட்சி மனோரமாவை ஆட்சி என்று தான் அழைப்பார்கள். ஆனால் நான் மட்டும்தான் அப்பத்தா என்று அவர்களை உரிமையோடு அழைப்பேன்.

காரைக்குடியில் ஒருமுறை நாங்கள் சூட்டிங் சென்றபோது அவருடைய சொந்த வீட்டிற்கு சென்று அங்கு இருந்தவர்களிடம் அவரைப் பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன்.

அப்போது ஆச்சி மனோரமா எந்த ஒரு இடத்திற்கு ஷூட்டிங் சென்றாலும் அதாவது குறிப்பாக சென்னை உள்ளிட்ட சிட்டிகளுக்கு அவர் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளும்போது அங்குள்ள செடி மரங்களை சுற்றிபார்ப்பார் .

செடிகள் என்னென்ன இருக்கிறது என்று சென்று ஆராய்ந்து அங்கு ஏதேனும் தங்களுக்கு தேவையான மரம் செடி என்றால் அதை எடுத்துக் கொண்டு வருவார் .

ஒருமுறை அப்படித்தான் அவர் நாலு அஞ்சு எலுமிச்சை செடி இலைகளை பறித்து வந்து அதில் கிரீன் டீ போட சொல்லி தன்னுடைய அசிஸ்டன்ட் இடம் கொடுத்தார்.

அதை இன்று வரை நான் செய்து குடித்துக் கொண்டிருக்கிறேன். அது மிகவும் சுவையாக இருக்கும் என ஊர்வசி அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version