நடிகை மனோரமாவிற்கு துரோகம் செய்து.. ஏமாற்றி.. கழட்டிவிட்ட.. நிஜ கணவர் யார் தெரியுமா..?

நடிகை மனோரமாவின் உண்மையான பெயர் கோபி சாந்தா என்பதாகும்.. மன்னார்குடியில் கடந்த 1937 ஆம் ஆண்டு பிறந்தவர் நடிகை மனோரமா.

தமிழ் சினிமா ரசிகர்களால் ஆச்சி என்று அழைக்கப்பட்டவர் நடிகை மனோரமா., இவர் சினிமாவுக்குள் எப்படி நுழைந்தார்..? இவர் என்ன படித்திருக்கிறார். ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்ட காதலன் திருமணம் ஆன வேகத்தில் கையில் ஒரு குழந்தையை கொடுத்துவிட்டு விவாகரத்து பெற்று சென்ற அவலம்.. யார் அந்த நபர்..? உள்ளிட்ட மனோரமா குறித்து பலரும் அறிந்திடாத தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

குறிப்பாக அவர் இறக்கும் தருவாயில் அவர் மனதில் இருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் என்ன..? அந்த வார்த்தைகள் சமகாலத்திற்கு பொருந்தி போகிறதா..? என்பதை நீங்களே பொருத்திப் பாருங்கள். வாருங்கள் பார்க்கலாம்.

அதற்கு முன்பு நடிகை மனோரமா எப்படி ஆச்சி மனோரமா ஆனார் என்ற கேள்விக்கு அவரே ஒரு பேட்டியில் பதில் கொடுத்து இருக்கிறார்.

அவர் கூறியதாவது நான் செட்டிநாட்டில் வளர்ந்த பொண்ணுங்க.. 1962 ஆம் ஆண்டு காப்பு கட்டி சத்திரம் என்ற நாடகத்தில் நடிச்சேன்.. இந்த நாடகம் ரேடியோவில் தொடர்ச்சியாக 66 வாரங்கள் ஒலிபரப்பாச்சு.. இதில் நானும் நடிகர் நாகேஷும் ஒன்றாக நடிச்சோம்..

இந்த நாடகத்தில் பன்னர் பாக்கியம் என்ற கதாபாத்திரத்தில் இளநீர் விற்கும் பெண்ணாக நடித்தேன்.. நான் பேசியது செட்டிநாட்டு பாஷை.. அந்த நாடகத்தில் நான் நடித்ததை பார்த்த ஒரு மேக்கப் மேன் என்னை வாங்க ஆச்சி.. போங்க ஆச்சி.. என்று அழைத்தார்.

அதன் பிறகு நாளாக நாளாக என்னை அனைவருமே ஆச்சி என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர். அதன் பிறகு சினிமாவிலும் எனக்கு அதே பெயர் நிலைத்து விட்டது என கூறியிருக்கிறார் ஆச்சி மனோரமா.

இவர் நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த நாடகத்தின் இயக்குனர் எஸ் எம் ராமநாதன் என்பவர் மனோரமா மீது காதல் கொண்டிருக்கிறார். மனோரமாவிடம் காதலை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சில நாட்கள் கழித்து நடிகை மனோரமாவும் அவருடைய காதலுக்கு சம்மதம் தெரிவிக்க 1954 ஆம் ஆண்டு இருவரும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டார்கள்.

அதன் பிறகு அடுத்த வருடமே 1955 ஆம் ஆண்டு பூபதி என்ற மகன் நடிகை மனோரமாவுக்கு பிறந்தார். அதன் பிறகு அதற்கு அடுத்த வருடமே அதாவது 1956 ஆம் ஆண்டு நடிகை மனோரமாவை விட்டு பிரிந்து விட்டார் அவருடைய கணவர் எஸ் எம் ராமநாதன்.

மிகவும் நம்பி, காதலித்து, திருமணம் செய்து கொண்ட ஒருவர் தன்னை பிரிந்து சென்றதை நினைத்து நினைத்து… தன்னுடைய இறப்பு வரை வேதனையில் தவித்தார் நடிகை மனோரமா என்பது தான் உண்மை.

அதன் பிறகு யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் தனி ஆளாக வளர்ந்து வந்தார். திரைப்படங்களில் நடித்தார். நிறைய பணம் புகழ் சம்பாதித்தார். ஒரு கட்டத்தில் பல்வேறு உடல் உறுப்புகள் வயது மூப்பின் காரணமாக செயல் இழந்த காரணத்தினால் மரணம் அடைந்தார்.

இவருடைய இறுதி காலகட்டங்களில் சில போட்டிகளை கொடுத்து இருக்கிறார். அதில் பிரதானமாக அவர் தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார். என்னவென்றால் நான் எத்தனை வருஷம் சினிமாவில் நடித்திருக்கிறேன்.. எத்தனையோ நடிகர்களுக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன்.. எத்தனையோ நடிகர்களுக்கு அக்காவாக.. அத்தையாக என எத்தனையோ கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன்.

ஆனால் அவை அனைத்தையும் நான் உண்மை என்று தான் நம்பி நடித்தேன். ஆனால் என்னுடன் நடித்தவர்களுக்கு அது வெறும் நடிப்பாக மட்டுமே தெரிந்திருக்கிறது. எனக்கு ஏதாவது ஒன்று என்றால் திரை உலகமே எனக்கு வந்து உதவி செய்யும் என எதிர்பார்த்தேன்.

இப்பொழுது உடல் நிலை முடியாமல் இருக்கும் என்னை யாரும் திரும்பி கூட பார்க்கவில்லை. மனம் வேதனையாக இருக்கிறது. நான் என்ன பணம் காசா கேட்கிறேன்.. ஒரு எட்டு வந்து.. என்னை பார்த்து.. எப்படி இருக்கீங்க.. நல்லா இருக்கீங்களா என்று கேட்டார்கள் என்றால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்.

ஆனால் ஒருவரும் நான் இருக்கும் திசையை கூட திரும்பி பார்க்கவில்லை. எம்ஜிஆர் சிவாஜி இருந்த காலத்தில் இருந்த சினிமாதுறை தற்போது இல்லை. அவர்கள் இருக்கும் பொழுது சினிமா என்பது ஒரு குடும்பம் என்ற நிலை தான் இருந்தது.

அனைவரும் அந்த அளவுக்கு ஒற்றுமையாக இருந்தார்கள். திரை கலைஞர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை படப்பிடிப்பு தளத்தில் செய்ய வேலை செய்யக்கூடிய லைட் மேனனுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றாலும் கூட ஓடி ஓடி அவர்களுக்கு உதவி செய்வார்கள். அவர்கள் குடும்பத்திற்கு என்ன தேவை என்று பார்ப்பார்கள்.

ஆனால் தற்பொழுது அந்த ஒற்றுமை இல்லை. அனைவரும் அவரவர் பாதையில் செல்கிறார்கள். அனைவரும் அவர் குடும்பம் அவருடைய வாழ்க்கை என இருக்கிறார்கள். ஒரு மூத்த நடிகை என்று என்னை வந்து அவர்கள் சந்திக்கவில்லை. எனக்கு பண உதவி தேவை கிடையாது.

என்னிடம் வந்து நன்றாக இருக்கிறீர்களா..? உடம்பு எப்படி இருக்கிறது..? என்று கேட்டால் எனக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கும்.. ஆனால் நான் தனியாக இருக்கிறேன்.. நான் இருக்கிறேனா என்று எட்டி கூட யாரும் எட்டி பார்க்கவில்லை. மனசு வேதனையா இருக்குதுயா.. இந்த நேரத்தில் எம்ஜிஆர் சிவாஜி ஆகியோர் இல்லையே என்று நான் மிகவும் வேதனைப்படுகிறேன்.

அவர்கள் இருந்திருந்தால் என்னை இப்படி அணாதா போல விட்டிருப்பார்களாய்யா.. ஒரு காலத்தில் சினிமாவை எப்படி வைத்திருந்தார்கள்.. சினிமாவை ஒரு குடும்பம் போல வைத்திருந்தார்களே.. ஆனால் தற்பொழுதுஆளாளுக்கு ஒரு திசையில் சென்று விட்டார்கள் பணம் மட்டுமே அனைவரும் நோக்கமாக மாறிடுச்சு.. என கண்ணீர் விட்டிருக்கிறார் நடிகை மனோரமா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam