டைரக்டர் ஷங்கர் மகள்தான் அதிதி ஷங்கர். (Aadhi shanker) சமீபத்தில் முத்தையா இயக்கத்தில் வந்த விருமன் படத்தில், கதாநாயகியாக நடித்திருந்தார். தவிர, அதற்கு முன்பே பல விளம்பர படங்களிலும் நடித்திருந்தார். இப்போது ஸம்மர் ஸ்பெஷல் விளம்பரங்களிலும், அம்மணிதான், முன்னணியில் இருக்கிறார்.
விருமன் படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டாலும், பெரிய அளவில் எதிர்பார்த்த அளவுக்கு படம் வரவேற்பு பெறவில்லை. குறிப்பாக, படத்தில் அதிதி கேரக்டர் அந்தளவுக்கு ரசிகர்களால் பேசப்படவில்லை.
சராசரி ஹீரோயின்களில் ஒருவராகவே, படத்தில் அவரது கேரக்டரும், நடிப்பும் இருந்தது.இவர் பாடகியாகவும் இருக்கிறார். விருமன் படத்துக்காக சிறந்த அறிமுக நடிகை மறறும் சிறந்த பாடகிக்கான விகடன் விருதை பெற்றிருக்கிறார்.
Aadhi shankerதமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் என்பதுதான் இவரது பிரதான அடையாளம். அதிதி ஷங்கரின் மற்றொரு பெயர் தேன்மொழி. இவர், சென்னை ராமச்சந்திரா இன்ஸ்டிடியூட்டில் எம்.பி.பி.எஸ் படித்து டாக்டர் பெற்றவர். திருமணமானவர். இவரது கணவர், தமிழ்நாடு கிரிக்கெட் அணி வீரர் ரோகித் தாமோதரன், கடந்த 2021ல் திருமணம் நடந்தது.
அதிதியின் சகோதரர் அர்ஜித், சகோதரி ஐஸ்வர்யா ஆகியோர், மேலும், அதிதி ஷங்கர் மாடலிங் துறையிலும் இருந்து வருகிறார்.
பாடகர், டாக்டர், மாடலிங், நடிகை என நான்கு துறைகளில் இருந்தாலும், அதிதிக்கு புகழ் வெளிச்சம் என்பது, பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் என்பதுதான். விருமன் படம், அதிதி ஷங்களுக்கு பெரிய அளவில் பப்ளிசிட்டி தராவிட்டாலும், அடுத்து, சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்து வரும் மாவீரன் படம், அதிதிக்கு நல்ல பப்ளிசிட்டி தர வாய்ப்புள்ளது. அந்த படத்தை, அதிதி மலை போல நம்பி இருக்கிறார்.
Aadhi shankerஜெண்டில் மேன், காதலன், இந்தியன், முதல்வன், அந்நியன் படங்களுக்கு பிறகு, ஷங்கர் இமேஜ், இந்திய அளவில் பேசப்பட்டது. இப்போதும், ஷங்கர் இயக்கும் படங்கள் என்றாலே, அதற்கென ஒரு தனி கவனமும், ஈர்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருக்கவே செய்கிறது.
தற்போது, கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார்.அதிதி ஷங்கருக்கு எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. விளம்பர படங்களில் நடிக்க மட்டுமே அதிக வாய்ப்புகள் வரும்போல இருக்கிறது. அதனால், டிவி சேனல்களி்ல், இவரது முகத்தை அதிகமாக காண முடிகிறது.
Aadhi shankerசோஷியல் மீடியாவில் ஆர்வமாக இருக்கும் அதிதி ஷங்கர், அடிக்கடி தனது புகைப்படங்களை அப்டேட் செய்கிறார். இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பதிவிறக்கம் செய்திருக்கிறார்.
மாடலிங் துறையில் அவர் இருப்பதால், மாடலிங் ஆக தான், அவர் அந்த புகைப்படங்களை, படு கிளாமரில் அவர் பதிவேற்றம் செய்திருக்கிறார். அந்த கவர்ச்சியான புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், பலரும் லைக் பட்டன்களை தட்டி வருகின்றனர்.
Aadhi shankerகருப்பு நிற மாடர்ன் உடையில், அதிதி பல போஸ்கள் தந்திருக்கிறார். பளீரிடும் தோள்களும், அம்சமான கழுத்து வளைவும், பார்வையில் தெரியும் பரவசமும், அதிதி மீதான ஈர்ப்பை அதிகரிக்கவே செய்கின்றன. இதுபோன்ற கவர்ச்சியில் சுண்டி இழுக்கும் படங்கள், அடுத்தடுத்த பட வாய்ப்புகளை, அதிதிக்கு பெற்றுத் தர வாய்ப்பு இருக்கிறது.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.