இசையமைப்பாளர் அனிருத்திற்கு பிறகு தற்சமயம் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான ஒரு இசையமைப்பாளராக இருந்து வருபவர் ஜிவி பிரகாஷ் பெரும்பாலும் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் பாடல்கள் அதிக வெற்றியை கொடுத்திருக்கின்றன.
ஒரு காலகட்டத்தில் அனிருத்தை தாண்டிய ஒரு வெற்றியை கொடுத்தவர் ஜி.வி பிரகாஷ் என்று கூறலாம் .அவர் இசையமைத்த முதல் படமான வெயில் திரைப்படத்திலேயே இரண்டு பாடல்கள் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது.
மோசமா இருந்தாரு ஜிவி
வெயிலோடு விளையாடி என்கிற பாடலும் உருகுதே மருகுதே என்கிற பாடலும் அப்பொழுது அதிக வரவேற்பை பெற்றிருந்தது. அதற்குப் பிறகு ஆடுகளம் மாதிரியான நிறைய திரைப்படங்களில் சிறப்பான இசையை கொடுத்துள்ளார் ஜிவி பிரகாஷ்.
சினிமாவில் அவருக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். யுவன் சங்கர் ராஜா ஏ.ஆர் ரகுமான் போலவே ஜி.வி பிரகாஷும் இளம் வயதிலேயே சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிவிட்டார். அவருக்கென்று ஒரு கூட்டமும் இருந்து வருகிறது.
வாழ்க்கைல அந்த விஷயம்
அதே சமயம் நடிப்பின் மீதும் ஆர்வம் காட்டி வருகிறார் ஜி.வி பிரகாஷ். விஜய் ஆண்டனியும் ஜிவி பிரகாஷ் போலவே இசையமைப்பாளராக வந்து நடிகர் ஆனவர்தான் ஆனால் அவர் நடிகர் ஆன பிறகு அவரது பாடல்கள் பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை.
ஆனால் ஜிவி பிரகாஷை பொறுத்தவரை இப்பொழுதும் அவரது பாடல்கள் நல்ல வெற்றியை கொடுத்து வருகின்றன. தற்சமயம் தங்கலான் திரைப்படத்திற்கும் அவர்தான் இசையமைத்து இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஸ் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இருவரும் கலந்து கொண்டனர்.
ரகசியத்தை உடைத்த அஜித் பட இயக்குனர்
இவர்கள் இருவருமே வெகு நாட்களாகவே நண்பர்களாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் பேட்டியில் கலந்து கொண்ட ஆதிக் ரவிச்சந்திரன் ஜிவி பிரகாஷ் குறித்து முக்கியமான தகவலை கூறியிருந்தார். ஜிவி பிரகாஷ் பொதுவாக எல்லா பேட்டிகளிலும் மிகவும் ஜாலியாக இருப்பதை பார்க்க முடியும்.
ஆனால் ஆரம்பத்தில் அவர் அப்படி இல்லை என்று கூறுகிறார் ஆதிக் ரவிச்சந்திரன். ஜி.வி பிரகாஷ் அவருக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பு வரை மிகவும் டிப்ரஷனாகவே இருப்பார். எப்பொழுதும் கவலையிலேயே இருப்பார் ஆனால் அவருக்கு குழந்தை பிறந்த பிறகு உலகில் சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் கண்டு ரசிக்கும் ஒரு நபராக மாறினார் ஜிவி பிரகாஷ்.
அதற்குப் பிறகுதான் ஜிவி பிரகாஷ் அதிகமாக சிரிப்பதையே பார்க்க முடியும் என்று கூறியிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். ஆதிக் ரவிச்சந்திரன் ஜிவி பிரகாஷை வைத்து திரிஷா இல்லன்னா நயன்தாரா என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.