த கோட் லைஃப் என்ற ஆடுஜீவிதம் திரைப்படமானது 2024-ஆம் ஆண்டு வெளி வந்த மலையாள திரைப்படம் இந்த திரைப்படத்தை இயக்கியவர் பிளெஸ்ஸி. இவரே இந்த படத்திற்கான திரைக்கதை எழுதியதோடு படத்தையும் தயாரித்திருக்கிறார்.
இதையும் படிங்க: மார்பின் மீது ஆண் நண்பரின் தலையை வைத்து.. டாப் ஆங்கிளில் அனுயா நச் போஸ்..!
இந்த திரைப்படத்தின் கதை கருவை பொருத்த வரை 2008-ஆம் ஆண்டு ஆடுஜீவிதம் என்ற இதே பெயரில் எழுத்தாளர் பென்யாமின் எழுதிய மலையாள புதினத்தின் தழுவலாக உள்ளது. இது உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட புதினம் ஆகும்.
ஆடுடன் தகாத உறவு..
இந்த திரைப்படத்தில் கேரளாவைச் சேர்ந்த நஜீப் என்பவர் அனுபவித்த கொடுமைகளை ஆடு ஜீவிதம் என்ற படத்தின் மூலம் பலரும் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.
தன்னுடைய குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரபு நாட்டுக்கு வேலைக்குச் செல்லும் ஒருவர் தவறுதலாக ஆடு மேய்க்கும் தொழிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலைவனத்தில் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து பிறகு தப்பித்து வந்த கதை தான் ஆடு ஜீவிதம்.
இந்த படத்தில் ஒரு காட்சி இடம் பெறவில்லை என்று நாவலை படித்த பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். அதுதான் பாலைவனத்தில் இருந்த நஜீப் ஒரு கட்டத்தில் தன்னுடைய ஆசைகளை கட்டுப்படுத்த முடியாமல் யாரிடம் அதை வெளிப்படுத்துவது என தெரியாமல் அங்கு இருந்த ஆடுகளுடன் தகாத உறவில் ஈடுபட்டு இருக்கிறார். அது அவரையும் தாண்டி நடந்த செயல் என்று நாவலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்த காட்சி படத்தில் இடம் பெறவில்லை. எதனால் இந்த காட்சி இடம் பெறவில்லை..? என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும் நிஜமாகவே நீங்கள் ஆட்டுடன் உடலுறவு கொண்டீர்களா..? என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் நிஜ ஹீரோவான நஜீப் இடம் கேள்வி எழுப்பப்பட்டது.
கோபத்தில் கிழித்தெடுத்த உண்மையான ஹீரோ..
இதனை கேட்ட நஜீப் அதிர்ந்து போனார். என்னுடைய கதையில் இது புனைவாக எழுதப்பட்டிருக்கிறது. இது உண்மை கிடையாது.
நாவலின் பரபரப்பை கூட்ட வேண்டும் என்னுடைய கதையின் சுவாரசியத்தை மெருகேற்ற வேண்டும் என்று முட்டாள் தனமாக நாவலாசிரியர் பென்யாமின் செய்த வேலை இது.. மேலும் இது உண்மையாக நடந்தது கிடையாது… என பதற்றத்துடன் பதிவு செய்திருக்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்க.. நீங்கள் நாவலை தழுவி தானே படம் எடுத்தீர்கள்.. அப்படி என்றால் நாவலில் இருக்கும் அனைத்தையும் நீங்கள் படத்தில் காட்டி இருக்க வேண்டும் அல்லவா..? ஏன் இந்த காட்சியை நீங்கள் காட்டவில்லை என்ற கேள்விகள் இயக்குனரிடம் எழுப்பப்பட்டது.
Aadu Jeevitham Trailerஅதற்கு பதில் அளித்துள்ள இயக்குனர் இந்த காட்சியை வைத்தால் எங்களுடைய ஒட்டு மொத்த உழைப்பும் வீணாகி விட வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் படத்திற்கான விருதுகள் பறிபோக வாய்ப்பு இருக்கிறது.
அது மட்டுமில்லாமல் நிஜமாகவே இப்படி நடந்ததா..? என்ற எந்த ஒரு உறுதியான தகவலும் எங்களிடம் இல்லை. எனவே தான் அந்த காட்சியை சேர்க்கவில்லை என பதிலளித்திருக்கிறார்.
ஆடுஜீவிதம் ரகசியம்..
அது மட்டுமில்லாமல் தணிக்கை குழுவிடமே படம் சிக்கலை சந்தித்திருக்கும் போன்ற காரணங்களால் இந்த காட்சியை நாங்கள் படமாக்கவே இல்லை என்று கூறுகிறார் படத்தின் இயக்குனர்.
ஆனால், படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரங்களிடம் இது குறித்து விசாரித்த போது.. இந்த காட்சி படமாக்கப்பட்டது. ஆனால், கடைசியாக இந்த காட்சியை வைக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டனர் என்று கூறுகிறார்கள். இப்படி பல்வேறு சர்ச்சைகளை எதிர் கொண்டு வருகிறது ஆடு ஜீவிதம் திரைப்படம்.
இதையும் படிங்க: சிட்டிசன் நடிகையை நியாபகம் இருக்கா.. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..
இந்த விஷயம் தான் தற்போது வைரலாக மாறி இணையத்தில் அதிக அளவு பேசப்படுகின்ற பேசும் பொருளாக மாறி உள்ளது.