சினிமாவில் சின்ன வயதில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது என்பது பெரிய அபூர்வம்தான். அப்படி நடிக்க வாய்ப்பு கிடைத்த பலர் பெரிய நடிகர்களாக பிற்காலத்தில் வந்திருக்கிறார்கள்.
ஆனால் எல்லாருக்குமே அந்த அதிர்ஷ்டம் என்பது வாய்க்காது. அப்படிப்பட்ட நிலையில் அப்படி பேபி நட்சத்திரங்களாக நடித்து இப்போது வளர்ந்த நடிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
தங்கர்பச்சான்
தமிழ் சினிமாவில் டைரக்டர் தங்கர்பச்சான் என்று ஒளி ஓவியர் என்று அழைக்கப்படும் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர். மிகச் சிறந்த படங்களை இயக்கியவர். நல்ல நடிகராகவும் தன்னை வெளிப்படுத்தியவர்.
குறிப்பாக, தங்கர்பச்சான் இயக்கிய பள்ளிக்கூடம் படத்தில், அவரது நடிப்பு மிகச் சிறப்பாக இருக்கும். அவருடன் படித்த இரண்டு நண்பர்கள் ஒருவர் கலெக்டராகவும் (நரேன்) ஒருவர் சினிமா டைரக்டராகவும் (சீமான்) இருக்கும் நிலையில், அவர் ஒரு ஏழ்மையான நிலையில் ஒரு கூலித் தொழிலாளியாக இருப்பார்.
அழகி
அதேபோல் டைரக்டராக அவர் இயக்கிய அழகி படமும் பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. சேரனை கதாநாயகனாக வைத்து தங்கர் பச்சான் இயக்கிய சொல்ல மறந்த கதையும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்த தங்கர்பச்சான், இப்போது பிஜேபி கூட்டணியில் பாமக சார்பில் கடலூர் தொகுதி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான் அவர் எம்பி ஆவாரா, இல்லை சினிமா டைரக்டராக தன் பணியை தொடர்வாரா என்பது தெரிய வரும்.
பார்த்திபன்
கடந்த 2002 ஆம் ஆண்டில் தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளிவந்த படம் அழகி. இந்த படத்தில் பார்த்திபன், தேவயானி, நந்திதா தாஸ் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அழகி படம் மிகப்பெரிய அளவில் வெற்றிப்படமாக அமைந்தது.
பள்ளிப் பருவ கால காதல் வாழ்க்கையை இந்த படம் தான் மிக அழகாக சொல்லியது. இந்த படத்தில் வரும் காட்சிகள் மிக எதார்த்தமாக அற்புதமாக இருந்தது.
தேவயானி – நந்திதா தாஸ்
இந்த படத்தில் குட்டி பார்த்திபன், குட்டி நந்திதா தாஸை விரும்புவது போன்ற காட்சிகள் வரும். அதில் குட்டி நந்திதா தாஸாக மோனிகா நடித்திருப்பார்.
சதீஷ்
அதில் குட்டி பார்த்திபன் கேரக்டரில் சதீஷ் நடித்திருப்பார். இவர் அரும்பு மீசை வாலிபராக அந்த படத்தில் காட்சி தருவார். அழகி படத்தில் நடித்த போது அவர் பிளஸ் 2 படித்திருக்கிறார்.
சேரனின் தம்பியாக…
இந்த படத்தை தொடர்ந்து சொல்ல மறந்த கதை என்ற படத்தில், சதீஷ் நடித்திருந்தார். இதுவும் டைரக்டர் தங்கர்பச்சான் இயக்கிய படம் தான். இந்த படத்தில் சேரனின் தம்பி கேரக்டரில் சதீஷ் நடித்திருப்பார்.
நான் மகான் அல்ல
அதேபோல் நான் மகான் அல்ல என்ற கார்த்தி நடித்த படத்தில், ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்தார் சதீஷ். இதையடுத்து டைரக்டர் எஸ்கே மதி இயக்கிய கூட்டாளி என்ற படத்திலும், ஹீரோவாக சதீஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் ஆச்சரியம்
இப்போது சதீஷ் ஸ்டைலிஷ் ஆன இளைஞராக காட்சியளிக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவரைப் பார்த்த பலரும் அழகி படத்தில் நடித்த சதீஷா இது? இப்படி ரொம்ப மாடர்னாக செம ஸ்டைலிஷாக இருக்கிறார் என்று ஆச்சரியப்படுகின்றனர்.