59 வயசுல ***தேவையா? 3வது திருமணம்….வெளுத்து வாங்கிய ரசிகர்களுக்கு அமீர் கான் காட்டமான பதில்!

பாலிவுட் சினிமாவில் நட்சத்திர ஹீரோவாக இருந்து வருபவர் தான் நடிகர் அமீர் கான். இவர் திரைப்பட நடிகர்,திரைப்பட இயக்குனர், திரைப்படம் தயாரிப்பாளர் என பன்முகங்களில் சிறந்து விளங்கி வருகிறார்.

முன்னணி நடிகர்களாக இருந்து வரும் அமீர்கானின் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வணிகரீதியாகவும் மாபெரும் வெற்றி பெறும்.

நடிகர் அமீர் கான்:

தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருப்பவர் அமீர்கான். ஒவ்வொரு திரைப்படத்திலும் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி காட்டி ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கிறார்.

1973 ஆம் ஆண்டு அமீர்கானின் மாமாவான நசீர் ஹுசைனின் இயக்கத்தில் வெளிவந்த யாதோன் கி பாரத் என்ற திரைப்படத்தில் அமீர்கான் குழந்தை நட்சத்திரமாக நடித்த தனது நடிப்பு வாழ்க்கை தொடங்கினார்.

அதன் பிறகு அமீர்கான் 11 ஆண்டுகள் கழித்து 1984 ஆம் ஆண்டு வெளிவந்த ஹோலி என்ற திரைப்படத்தின் மூலமாக அவரது திரை வாழ்க்கையை தொடங்கினார் .

முதல் படமே வணிக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்று அவருக்கு பெயரும் புகழும் தேடி கொடுத்தது. தொடர்ந்து அடுத்தடுத்த பல வெற்றி திரைப்படங்களில் நடித்து பாலிவுட் சினிமாவின் நட்சத்திர ஹீரோ என்ற அந்தஸ்தை தக்க வைத்துக்கொண்டார் அமீர்கான்.

அமீர்கான் மும்பை பாந்த்ராவில் உள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார் .

அவரது குடும்பம் பல தலைமுறைகளாக திரைப்படத்துறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதன் மூலமாக அவருக்கு மிக சுலபமாக பட வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்து இன்று நட்சத்திர ஹீரோவாக உயர்ந்த அந்தஸ்திலிருந்து வருகிறார் .

இருந்தாலும் அவர் தனது மிகச்சிறந்த திறமையால் தான் தனது வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது உண்மை.

நட்சத்திர நடிகர்:

வாரிசு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவராக இருந்தாலும் தனது திறமையின் மூலமாக வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டு நட்சத்திர நடிகராக இருந்து வரும் நடிகர் அமீர் கான் 1986 ஆம் ஆண்டு ரேணா தாத்தா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான் ஜுனைட் கான் மற்றும் ஐரா கான். ஐரா கான் திரைப்படங்களில். நடித்து இளம் கதாநாயகியாக பாலிவுட் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அமீர்கானின் மகள் ஐரா கான் தமிழ் சினிமாவின் நட்சத்திர ஹீரோவான தனுஷ் உடன் கூட அதிரங்கி ரே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் .

இந்த திரைப்படம் 2021 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அமீர்கான் தனது முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2002 ஆம் ஆண்டு பிரிந்து விட்டார்.

இரண்டு முறை விவாகரத்து:

தனது பிள்ளைகளை தன்னுடனே வளர்த்து வந்தார். இதனிடையே 2005 ஆம் ஆண்டு கிரண் ராவோ என்ற என்பவரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் அவரையும் விவாகரத்து செய்து விட்டார். இது அடுத்த அமீர்கான் மூன்றாவது முறையாக திருமணம் செய்யப்போவதாக செய்திகள் வெளியாகி பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது .

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அமீர்கான் இது குறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார்.

நான் ஏற்கனவே இரண்டு முறை விவாகரத்து பெற்றவர் என்பதால் இந்த திருமணத்தைப் பற்றி எந்த ஆலோசனையும் கேட்க வேண்டாம் எனக்கு தனியாக இருக்க விருப்பமில்லை.

எனக்கு ஒரு துணை வேண்டும் நான் விவாகரத்து செய்த இரண்டு முன்னாள் மனைவிகளுடன் இன்று வரை நல்ல உறவு முறையில் தான் இருக்கிறேன்.

நாங்கள் எல்லோரும் ஒரு குடும்பம் போல தான் தற்போது வரை இருக்கிறோம். வாழ்க்கை தீர்மானிக்க முடியாதது.

அந்த ஆசைக்காக மூன்றாம் திருமணம்?

எல்லா திருமண வாழ்க்கையும் ஒத்து போவதில்லை. எனக்கு தற்போது 59 வயதாகிவிட்டது. எப்படி மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடியும்?

அது மிகவும் கடினம் நான் என் குழந்தை குடும்பம் என்று சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் இன்னும் சிறந்த மனிதனாக இருக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் என அமீர்கான் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

இதன் மூலம் கிட்டத்தட்ட அவர் மூன்றாவது திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பது போன்றும் தெரிவிக்காதது போலும் மழுப்பலாக பேசியிருக்கிறார்.

இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாக இதைக் கேட்ட நெட்டிசன்ஸ் 59 வயதிலும் உங்களுக்கு அந்த ஆசை தேவைப்படுதா? என மோசமாக அவரை விமர்சித்த ரோல் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version