வாழ்க்கையில் நீங்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மீக குறிப்புகள்..!

ஆன்மீக குறிப்புகள்: பிறந்தோம், வளர்ந்தோம், இறந்தோம் என்று இருக்காமல் நாம் எதற்காக இந்த பிறப்பை எடுத்தோமோ அதை சரியான முறையில் பயன்படுத்தி முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவியாக இருப்பதின் மூலம் இந்த மனிதப் பிறவியிலிருந்து நாம் தேவ பிறவியை எட்டிப் பிடிக்க முடியும்.

Tips

அதற்காக தினமும் நீங்கள் உங்கள் வீட்டில் சில வழிமுறைகளை கடைப்பிடித்தாலே போதும். தெய்வக் கடாட்சம் உங்களுக்கு கட்டாயம் கிடைக்கும். அப்படி தெய்வ அருள் உங்களுக்கு கட்டாயம் கிடைக்க இந்த ஆன்மீக குறிப்புகளை நீங்கள் பயன்படுத்துங்கள்.

ஆன்மீக குறிப்புகள்

காலை நேரங்களில் நீங்கள் நின்று கொண்டு கடவுளை வழிபடுவதின் மூலம் முந்தைய நாள் இரவு செய்த பாவமும், மாலையில் அமர்ந்து கொண்டு நீங்கள் கடவுளை வழிபடுவதின் மூலம் பகலில் செய்த பாவமும் நிவர்த்தி ஆவதாக கூறியிருக்கிறார்கள்.

வீட்டில் ஏற்றி வைத்திருக்கும் விளக்கை கட்டாயம் ஆண்கள் தங்கள் கைகளால் அணைக்கக் கூடாது. கடவுளுக்காக நெய்வேத்தியம் செய்ய நீங்கள் உடைக்கும் தேங்காய் பல துண்டுகளாக உடைந்தால் அதை கடவுளுக்கு நீங்கள் நெய்வேத்தியமாக படைக்கக்கூடாது.

Tips

தெய்வத்தின் படம், சிலை குத்து விளக்கு போன்றவற்றை நீங்கள் மின் ஒயர்களால் அலங்காரம் செய்து அதில் செயற்கை விளக்குகளை ஒளிர விடக்கூடாது.

கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்யும்போது வெற்றிலை பாட்டை இரட்டை படை அடிப்படையில் அதாவது இரண்டு, நான்கு, ஆறு, எட்டு, பத்து என்று தான் நீங்கள் வைக்க வேண்டும்.

வலம்புரிச் சங்கு கொண்டு உங்கள் வீட்டில் பூஜை செய்தால் கட்டாயம் மகாலட்சுமி உங்கள் வீட்டுக்கு வருவதோடு அங்கேயே வாசம் செய்வாள்.

Tips

பூஜையின் போது குழந்தைகளுக்கு பெரியவர்கள் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் போன்றவற்றை வாய் விட்டு படிப்பதின் மூலம் குரல் உறுப்புகள் பலம் கொள்வதோடு, மார்பு மற்றும் சுவாச பைகள் ஆரோக்கியமாக மாறும்.

பெண்கள் பூஜையில் ஈடுபடும்போது ஸ்டிக்கர் பொட்டுகளை நெற்றியில் வைத்துக்கொண்டு பூஜை செய்யக்கூடாது.மேலும் வளையல் இல்லாமல் இருக்கக் கூடாது.

பெண்கள் தலை முடியை வாரி முடிந்து கொண்டுதான் பூஜையை செய்ய வேண்டும். தலை விரித்த நிலையில் விளக்கை ஏற்றுவதோ, நெய்வேத்தியம் செய்வதோ தவறாகும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …