“நல்லா நடிக்கிறா.. அப்படினா நாளைக்கு இவள..” ஆர்த்தியிடம் கூடவா.. வடிவேலுவின் கோர முகம்..!

வைகை புயல் மீம்களின் மன்னன், நகைச்சுவை இளவரசன் என்றெல்லாம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு கொண்டிருந்தார் நடிகர் வடிவேலு.

சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய நற்பெயரை கெடுத்துக் கொண்டிருக்கிறார். அதற்கு வேறு யாரும் காரணம் கிடையாது.. முழுக்க முழுக்க அவரே தான்.

நடிகர் ராஜ்கிரனால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட வடிவேலு தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டு தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்.

வருடத்திற்கு 25, 30 படங்களில் நடிக்கும் அளவுக்கு காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுழன்று கொண்டிருந்தார் வடிவேலு. சில அரசியல் மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் ஒதுங்கி இருந்த வடிவேலு சமீபத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆனார்.

ஆனால் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில், இவர் குறித்து நடிகை குண்டு ஆர்த்தி பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

சினிமாவில் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகரான வடிவேலு எந்த போட்டியும் இல்லாமல் தனிக்காட்டு ராஜாவாக காமெடி சாம்ராஜ்யத்தை வளர்ந்து வந்தார். தனக்கென தனி பாணியில் தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு மக்களை சிரிக்க வைத்தவர் வடிவேலு.

எந்த ஈகோவும் இல்லாமல் சக காமெடி நடிகர்களுடன் சேர்ந்து நடிப்பவர். என்றெல்லாம் இவர் மீது அடையாளங்கள் இருந்தன. ஆனால், அவையெல்லாம் சுக்கு சுக்காக கடந்த சில ஆண்டுகளாக நொறுங்கிப் போய்விட்டது.

காரணம் வடிவேலுவுடன் காமெடிகளில் நடித்த சக காமெடி நடிகர்கள் பலர் வடிவேலுவின் உண்மை முகம் என்ன..? என்று பொது வெளியில் போட்டு உடைத்தனர். நடிகர் வடிவேலு தன்னைவிட இன்னொரு காமெடி நடிகர் அதிகமாக நகைச்சுவை தொனிக்கும் அளவுக்கு நடித்து விட்டாலோ.. அல்லது ரசிகர்களை கவரும் அளவுக்கு நடித்து விட்டாலோ.. அந்த காட்சியை நீக்க சொல்லி கலவரம் செய்வார்.

அடுத்த படம் அடுத்த படத்தில் அந்த நடிகரையே நீக்க சொல்லி விடுவார். மட்டுமில்லாமல் லட்சங்களில் கோடிகளில் சம்பளம் வாங்கும் வடிவேலு சக காமெடி நடிகர்களுக்கு தயாரிப்பாளர்கள் சில லட்சங்களை கொடுக்க முன் வந்தாலும் கூட.. லட்சங்களில் கொடுக்காதீர்கள்.. அய்யாயிரம்.. பத்தாயிரம் கொடுங்க போதும்.. உங்க கிட்ட இருக்கு நீங்கள் இன்று கொடுத்துவிட்டு போய்விடுவீர்கள்.

நாளைக்கு வேறு படத்தில் ஒப்பந்தமாகும் பொழுது அந்த தயாரிப்பாளரும் இதே போல கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இவர்களை எல்லாம் ஆயிரத்திலயே வச்சிருக்கணும்.. உங்களுக்கு தெரியாது பேசாம இருங்கல் என்று தயாரிப்பாளர்களை தடுத்திருக்கிறார் வடிவேலு.

சரி அப்படி தடுத்த வடிவேலு சக காமெடி நடிகர்கள் உதவி என்று கேட்டபோது.. உதவினாரா என்று கேட்டால் கிடையாது. தயாரிப்பாளர்கள் லட்சங்களில் சம்பளம் கொடுக்க தயாராக இருந்த பொழுது அதனை தடுத்து நிறுத்திய வடிவேலு.. அதே காமெடி நடிகர்கள் துன்பத்தில் இருக்கும் பொழுது.. ஏன்.. மரணம் அடைந்து விட்டால் கூட ஒரு மாலை வாங்கிட்டு வந்து போட துப்பில்லை என காமெடி நடிகர்கள் பலரும் வடிவேலு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தனர்.

இந்நிலையில், காமெடி நடிகை குண்டு ஆர்த்தி சமீபத்தில் பேசி இருக்கக்கூடிய விஷயம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் கூறியதாவது, வடிவேலுவுடன் ஒரு படத்தின் காட்சி நடித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது என்னுடைய நடிப்பை பார்த்த வடிவேலி என்னை கூப்பிட்டு.. நீ என்ன விட நல்ல நடிக்கிறம்மா.. சூப்பரா நடிக்கிற.. என்று பாராட்டினார்.

என்னிடம் பாராட்டை கூறிவிட்டு படத்தின் இயக்குனரை அழைத்து என்னைவிட நல்ல நடிக்கும் இந்த பொண்ணு நம்ம படத்துக்கு வேண்டாம்… இவளை மாற்றி விட்டு வேறு நடிகை கமிட் பண்ணுங்க.. என்று சொல்லிவிட்டார்.

இதனால் அந்தப் படத்தின் வாய்ப்பு எனக்கு பறிபோய்விட்டது. எனக்கு மட்டுமல்ல என்னுடைய கணவருக்கும் இப்படி நடந்திருக்கிறது. இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தில் எனது கணவர் கணேஷ் நடிக்க இருந்தார்.

ஆனால், எம் மீது இருந்த கோபத்தால்.. அந்த படத்திற்கு கணேஷ் வேண்டாம் என்று கூறிவிட்டார். வடிவேலு ஒரு மனிஷனே கிடையாது.. வடிவேலு பாம்பு போன்றவர்.

தன்னைவிட வேற யாராவது நன்றாக நடித்து விட்டால்.. அவர்களை தன்னுடன் நடிக்க கூடாது என்ற கொள்கையில் இருப்பார்.. பாம்பு போல கொத்துவார்.. அது தான் அவருடைய உண்மையான குணம். வடிவேலுவின் குணத்தை யாராலும் மாற்றவே முடியாது என்று கூறியிருக்கிறார். இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version