கோவா லாட்ஜில் அரங்கேறிய கொடூரம்.. ஆர்த்தி செய்த வேலை.. தெறித்து ஓடிய ஜெயம் ரவி.. பரபரப்பு தகவல்கள்..!

தமிழ் சினிமாவில் தற்சமயம் அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு நடிகராக ஜெயம் ரவி இருந்து வருகிறார். சொல்ல போனால் தமிழ் சினிமாவில் பெரிதாக கிசுகிசுக்களோ அல்லது சர்ச்சைகளோ இல்லாத ஒரு நடிகராக இருந்து வந்தவர்தான் நடிகர் ஜெயம் ரவி.

ஆனால் சமீப காலமாக அவரது பெயர் மக்கள் மத்தியில் அடிபடுவதற்கு அவரது விவாகரத்து விஷயம்தான் காரணமாக அமைந்து இருக்கிறது இரண்டு மூன்று மாதங்களாகவே ஜெயம் ரவி அவரது மனைவியை விவாகரத்து செய்து கொள்ளப் போகிறார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வந்தது.

கோவா லாட்ஜில் அரங்கேறிய கொடூரம்

அதற்கு தகுந்தார் போல ஜெயம் ரவியும் சில நாட்களுக்கு முன்பே தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்ய போவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். மேலும் அடுத்த நாளே குடும்ப நல நீதிமன்றத்தில் இதற்கான வழக்கையும் கொடுத்து இருந்தார்.

இதன் மூலம் ஜெயம் ரவி சீக்கிரமாகவே விவாகரத்து பெற இருக்கிறார் என்று தெரிகிறது. ஆனால் இந்த செய்திக்கு பிறகு தொடர்ந்து பலரும் ஆர்த்தி குறித்து எதிர்மறையான விமர்சனங்களை வைக்க தொடங்கினர். ஜெயம் ரவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதற்கு ஆர்த்திதான் காரணம் என்றெல்லாம் பேசி வந்தனர்.

ஆர்த்தி செய்த வேலை

இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் ஆர்த்தியும் சமீபத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறும்போது என்னுடைய அனுமதியே இல்லாமல் என்னிடம் ஒரு வார்த்தை கூட கூறாமல்தான் ஜெயம் ரவி இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

மேலும் எங்களுடைய 18 வருட குடும்ப வாழ்க்கையை கொச்சைப்படுத்தும் விதத்தில் இது அமைந்திருக்கிறது. இதனால் எனது குழந்தைகள் மிகவும் பாதிப்படைந்து இருக்கின்றனர் என்று கூறியிருக்கிறார் ஆர்த்தி. மேலும் கடந்த சில மாதங்களாக தன்னுடைய கணவரை நேரில் சந்திக்கவே முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் இது குறித்து சினிமா வட்டாரங்களில் சில பேச்சுக்கள் அடிபடுகின்றன. அதாவது சில காலங்களாகவே ஜெயம் ரவி அவரது வீட்டிற்கு செல்வது கிடையாது சென்னையில் படப்பிடிப்பு இருந்தால் கூட அவற்றை முடித்துவிட்டு சென்னையிலேயே ஏதாவது ஒரு ஹோட்டலை பிடித்து அங்குதான் தங்குகிறார் ஜெயம் ரவி.

தெறித்து ஓடிய ஜெயம் ரவி

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் கோவாவிற்கு சென்று அங்கு அறை எடுத்து தங்கி இருக்கிறார். அடுத்து அவர் நடிக்க இருக்கும் படங்களுக்கான கதையை கூறும் இயக்குனர்கள் கூட கோவாவிற்கு சென்று அங்குதான் ஜெயம் ரவியை சந்தித்து கதையை கூறி இருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த விஷயத்தை அறிந்த ஆர்த்தி கோவாவிற்கு சென்றாவது ஜெயம் ரவியிடம் பேச வேண்டும் என்று அங்கு சென்று இருக்கிறார். ஆனால் அதற்கு முன்பே தகவலை அறிந்த ஜெயம் ரவி அந்த ஹோட்டலில் இருந்தும் மாறி வேறு ஓட்டலுக்கு சென்று இருக்கிறார். இந்த அளவிற்கு இவர்களுக்குள் பிரச்சனை வர என்ன காரணமாக இருக்கும் என்பது தான் இப்பொழுது கேள்வியாக இருந்து வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version