அடுத்து நீதிமன்றத்தில் காத்திருக்கும் ஆப்பு.. மனைவி போட்ட ஸ்கெட்ச்.. அவசரப்பட்டீங்களே ஜெயம் ரவி..!

ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவி இவர்களின் விவாகரத்து குறித்த விஷயம் தற்சமயம் சமூக வலைதளங்களிலும் மக்கள் மத்தியிலும் சூடு பிடிக்க துவங்கி இருக்கிறது. இவர்கள் இருவருமே 18 வருடங்களாக தம்பதிகளாக இருந்து வருகின்றனர்.

இவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இந்த நிலையில் பெரும்பாலும் ஆர்த்தி குறித்து எந்த ஒரு செய்தியும் முன்பெல்லாம் வெளி வந்தது கிடையாது. அப்படி இருக்கும்போது சில மாதங்களுக்கு முன்பு ஆர்த்தியும் ஜெயம் ரவியும் பிரிய போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வலம் வந்து கொண்டிருந்தன.

நீதிமன்றத்தில் காத்திருக்கும் ஆப்பு

ஆனால் அதற்கு எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளிவராததால் அதை யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக அறிவித்திருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

மேலும் அதில் அவர் கூறும் பொழுது தன்னை சுற்றியுள்ள அவர்களின் நலனுக்காகதான் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறி இருந்தார் ஜெயம் ரவி. இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் ஆர்த்தி இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர் கூறும்பொழுது ஜெயம் ரவி தன்னை சுற்றியுள்ளவர்களின் நலனுக்காக எல்லாம் இந்த முடிவை எடுக்கவில்லை. அவருடைய சுயநலத்துக்காக தான் எடுத்திருக்கிறார். மேலும் விவாகரத்தை அறிவிக்கும் முன்பு என்னிடம் அது குறித்து அவர் பேசவே இல்லை எனக்கு தெரியாமலேயே இந்த விஷயம் நடந்திருக்கிறது.

மனைவி போட்ட ஸ்கெட்ச்..

மேலும் கடந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களில் இது குறித்து வரும் பேச்சுக்கள் என்னை மிகவும் அதிருப்திக்கு உள்ளாகி இருக்கின்றன. இது எனது குழந்தைகளை பெரிதாக பாதித்திருக்கிறது. எனது குழந்தைகள் ஜெயம் ரவியின் இந்த நடவடிக்கை புரியாமல் இருக்கின்றனர் என்றெல்லாம் அந்த அறிக்கையில் விவரமாக பேசியிருந்தார் ஆர்த்தி.

இதனை தொடர்ந்து தற்சமயம் சமூக வலைதளங்களில் ஆர்த்திக்கு ஆதரவு அதிகரித்து இருக்கிறது. ஒரு பெண்ணை இப்படி துன்பத்திற்கு ஆளாக்குவது சரியா? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

அவசரப்பட்ட ஜெயம் ரவி

இந்த நிலையில் நேற்று ஜெயம் ரவி குடும்ப நல நீதிமன்றத்தில் தனது விவாகரத்து குறித்த வழக்கை தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் விவாகரத்தை பொருத்தவரை முதலில் தனது துணைவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி செய்தியை தெரிவிக்க வேண்டும்.

அதையே ஜெயம் ரவி செய்யவில்லை அதனால் ஆர்த்தி தரப்பில் இருந்து அதை ஒரு பாயிண்டாக எடுத்து வந்தார்கள் என்றால் விவாகரத்து விஷயத்தில் ஜெயம் ரவிக்கு சாதகமாக எதுவுமே நடக்காது என்று கூறப்படுகிறது. மேலும் ஆர்த்தி நினைத்தால் இந்த விவாகரத்தை நடக்காமலும் செய்து விட முடியும் என்றும் கூறப்படுகிறது. என்ன நடக்கும் என்பது விதியின் வசம்தான் இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version