சினிமாவில் ஹீரோயின்களை தூக்கி சாப்பிடும் கவர்ச்சியில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி ரவி..! – வைரல் போட்டோஸ்..!

நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி ( Aarthi Ravi ) ஜெயம் ரவியும், ஆர்த்தியும் நீண்ட காலமாக காதலித்த நிலையில், கடந்த 2009ம் ஆண்டில், திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் ஆரவ் என்ற மகன், டிக்டிக்டிக் என்ற படத்தில், ஜெயம் ரவியின் மகனாகவே நடித்திருந்தார்.

Aarthi Ravi

பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி, அருள்மொழி வர்மன் கேரக்டரில் நடித்திருந்தார். இந்த கேரக்டர், இவருக்கு பெருமையான வெற்றியைத் தந்திருக்கிறது. பொதுவாகவே, ரவி நல்ல திறமை மிக்க நடிகர்.

தனது முதல் படமான ஜெயம் படத்தில், அப்பாவி ஏழை இளைஞனாக நடித்த இவர், அடுத்த படமான, எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில், நாகரிக நகரத்து இளைஞனாக, பாக்ஸர் கேரக்டரில், பின்னி பெடலெடுத்து இருப்பார். பேராண்மை, தனி ஒருவன், போகன், வனமகன், கோமாளி போன்ற படங்களில், வேற லெவலில் தன் கலைத்திறைமையை காட்டி இருப்பார்.

Aarthi Ravi

இந்நிலையில், ஜெயம் ரவியின் அசத்தலான புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இன்ஸ்டாகிராம் பக்கங்களில் செம ஆக்டிவ்வாக இருக்கும் ஆர்த்தி, சமீபமாக தனது விதவிதமான புகைப்படங்களை, அப்டேட் செய்து வருகிறார்.

அழகிய ஆடைகளில், வித்யாசமான கெட்டப்களில் ஆர்த்தி, செம அழகாக காட்சி தருகிறார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசித்த குஷ்பு ‘ ஸ்டன்னிங்’ என குறிப்பிட்டு, ஹார்ட் மற்றும் பயர் எமோஜ் குறியீடுகளை பதிவிட்டுள்ளார்.

அதே போல், நடிகை ஸ்ரேயா சரண், அதாவது சிவாஜி படத்தின் நாயகிதான், ஆர்த்தியின் புகைப்படங்களை பார்த்து, ‘சோ ஹாட்’ எனவும் குறிப்பிட்டுள்ளார். வழக்கமான நடிகைகள்தான், தங்களது புகைப்படங்களை இப்படி இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

Aarthi Ravi

அதாவது, ரசிகர்கள் மத்தியில் தங்களின் கவர்ச்சியை, அழகை பகிரங்கப்படுத்தும் விதமாக, இதற்காகவே ஸ்பெஷல் ஷூட் நடத்தும் நடிகைகள் நிறைய பேர் இருக்கவே செய்கின்றனர். இது, ஒரு விதத்தில் அவர்களுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றுத்தரும் ஒரு முயற்சியாகவும் அமைகிறது. இன்னும் சிலர், உச்சக்கட்ட கவர்ச்சியில், தங்களது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை மட்டுமே நோக்கமாக கொண்டு, இப்படி படங்களை அப்டேட் செய்கின்றனர்.

Aarthi Ravi

ஆனால், நடிகர் ஜெயம் ரவியின் மனைவி, சினிமாவில் நடிக்காதவர். மாடலிங், விளம்பரங்களில் நடித்தவராகவும் இதுவரை நடித்ததாக தகவல் இல்லை. இப்படி இருக்கையில், திடீரென சினிமா நடிகைகளை போல, அவரும் இப்படி தனது புகைப்படங்களை அப்டேட் செய்து வருவது, சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவேளை, ஜெயம் ரவி சம்மதத்துடன் அவரும் சினிமாவில் அறிமுகம் ஆகும் நோக்கத்தில்தான், இப்படி புகைப்படங்களை பதிவிடுகிறாரோ, என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், அப்படிப்பட்ட தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. ஆர்த்தி, இதை ஒரு ஹாபியாக கூட செய்து இருக்கலாம் என்றும் ஒரு தரப்பு ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Aarthi Ravi

ஜெயம் ரவிக்கு பெண் ரசிகைகள் அதிகம். அவரது மனைவியான நானும் செம அழகிதான் என்று கூறும் விதமாக கூட, இப்படி அவரது ரசிகைகளுக்கும், உடன் நடிக்கும் சக நடிகைகளுக்கும் சூசகமாக தெரிவிக்க தான், இப்படி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறாரோ, என்றும் ஒரு தரப்பில் கூறி வருகின்றனர்.

எனினும், ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, சினிமா நடிகைகளுக்கே சவால் விடும் வகையில், மிக அழகாக இருக்கிறார், ஸ்டைலாக இருக்கிறார் என, இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …