சுயநலமா…என்னை அவமானப்படுத்தி, புள்ளைங்களோட இப்படி தவித்துக்கொண்டுள்ளேன். பகீர் தகவல் கொடுத்த ஆர்த்தி ரவி..

கடந்த சில நாட்களாகவே ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி குறித்த விவாகரத்து செய்திகள்தான் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் 18 வருடங்களாகவே சிறந்த கணவன் மனைவியாக வாழ்ந்து வந்து கொண்டிருந்தனர்.

ஆனால் சமீப காலமாக அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும் அவர்கள் பிரிய போவதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

என்னை அவமானப்படுத்தி

ஆனால் இதற்கு எந்த ஒரு ஆதாரப்பூர்வமான தகவல்களும் வெளிவரவில்லை என்பதால் இதை மக்களும் பெரிதாக கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர் இந்த நிலையில் சமீபத்தில் ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

மேலும் குடும்ப நல நீதிமன்றத்தில் இது குறித்து அவர் வழக்கும் தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த விஷயம் அதிகமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தது. சமீபத்தில் ஜெயம் ரவியின் மனைவியான ஆர்த்தி இதற்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

புள்ளைங்களோட இப்படி தவித்துக்கொண்டுள்ளேன்

அதில் அவர் வெளியிட்டிருக்கும் விஷயங்கள் அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் இருக்கின்றன. சமீபத்தில்‌ ஊடகங்களிலும்‌ சமூக வலைதளங்களிலும்‌ எங்கள்‌ திருமண வாழ்க்கை குறித்து வெளியானஅறிக்கையை பார்த்து நான்‌ கவலையும்‌ மன வேதனையும்‌ அடைந்தேன்‌. இது முழுக்க முழுக்க என்‌ கவனத்திற்கு வராமலும்‌, என்‌ ஒப்புதல்‌ இல்லாமலும்‌ வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்‌.

இந்த அறிக்கையின்‌ மூலம்‌ அதற்குரிய கெளரவம்‌, கண்ணியம்‌ மற்றும்‌ தனித்தன்மையை இழந்து விட்டதாக நான்‌ உணர்கிறேன்‌. என்‌ கணவரிடம்‌ மனம்‌ விட்டு பேச, என்‌ கணவரை சந்திக்க வேண்டும்‌ என நான்‌ சமீபகாலமாக பலவித முயற்சிகள்‌ செய்தேன்‌.

பகீர் தகவல் கொடுத்த ஆர்த்தி

ஆனால்‌ அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. நானும்‌ என்‌ இரண்டு குழந்தைகளும்‌ எதுவும்‌ புரியாமல்‌ தவித்து கொண்டிருக்கிறோம்‌. திருமண பந்தத்தில்‌ இருந்து விலக வேண்டும்‌ என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தைச்‌ சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன்‌ கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல….

என்‌ குழந்தைகளின்‌ நலனும்‌, எதிர்காலமுமே முதல்‌ முக்கியத்துவம்‌ வாய்ந்தது. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்‌ என்‌ குழந்தைகளை காயப்படுத்துவதை என்னால்‌ அனுமதிக்க இயலாது. மறுக்கப்படாத பொய்கள்‌ காலப்போக்கில்‌ உண்மையாக நம்பப்படும்‌ என்பதால்‌ இவற்றை மறுப்பதும்‌ என்‌ முதல்‌ கடமையாகிறது.என்று கூறியுள்ளார் ஆர்த்தி. இன்னும் பலவற்றை விளக்கி தன்னுடைய அறிக்கையை ஆர்த்தி வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version