பிரபல பாடகியுடன் ஜெயம் ரவி குடித்தனம்.. கோவாவில் கூத்து.. ஆதாரத்தை வெளியிட்ட குடும்ப உறுப்பினர்..!

திரை உலக வட்டாரத்தை திருப்பி போடக்கூடிய வகையில் ஜெயம் ரவி வெளியிட்ட விவாகரத்து அறிக்கை கடுமையான அதிர்வலைகளை சினிமாத்துறை இடையே இருக்கும் மக்கள் மட்டுமல்லாமல் வெகுஜன மக்கள் இடையேயும் ஏற்படுத்தியிருந்தது.

இதனை அடுத்து இந்த விவாகரத்து தன்னை கலந்து ஆலோசிக்காமல் எடுக்கப்பட்டது என்று தன் பக்கம் நியாயத்தை நேர்த்தியான முறையில் எடுத்து வைத்த ஆர்த்திக்கு பலரும் ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது ஜெயம் ரவியின் உண்மை நிலை வெளி வந்துள்ளது.

பிரபல பாடகியுடன் ஜெயம் ரவி குடித்தனம்..

கடந்த 15 ஆண்டுகளாக மண வாழ்கையில் ஈடுபட்டு இருந்த ஜெயம் ரவி ஆர்த்தி தம்பதிகளுக்கு இரண்டு ஆண் மகன்கள் இருக்கின்ற சூழ்நிலையில் எந்த காரணத்தால் ஜெயம் ரவி ஆர்த்தியை விட்டு விலகி விவாகரத்து கேட்கிறார் என்ற விஷயங்கள் வெகுவாக எழுப்பப்பட்டது.

மேலும் ஆர்த்தி ரவி ஜெயம் ரவியை விட்டு பிரியப் போவதில்லை என்பதில் உறுதியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் தனக்கும் தன் மகன்களின் எதிர்காலத்திற்கும் நம்பிக்கையே அவர் கணவன் தான் என்று கண்கலங்க எமோஷனலாக பேசியிருந்தார்.

இந்நிலையில் ஜெயம் ரவிக்கு திருமணத்துக்கு முன்பே கோவா செல்லக்கூடிய பழக்கம் இருந்ததாகவும் இதனை அடுத்து கோவாவில் இவர் பிரபல பாப் இசை பாடகி அதுவும் பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட கெனிசாவுடன் ஆரம்பத்தில் நட்பாக பழக ஆரம்பித்து அவரது குரலுக்கு அடிமையான பின்பு குடித்தனம் நடத்தி வருகிறார் என்ற விஷயங்கள் தற்போது பேசும் பொருளாக்கி உள்ளது.

மேலும் தனக்கு விவாகரத்து வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருக்கும் ஜெயம் ரவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட ஆர்த்தி அதற்குரிய ஆதாரங்களை தற்போது வெளியிட்டு இருப்பது இந்த விஷயத்தில் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது எனக் கூறி வருகிறார்கள்.

கோவாவில் கூத்து..

இந்நிலையில் ஜெயம் ரவி ஆர்த்தியின் திருமண நாளன்று ஜெயம் ரவி ஆர்த்தியுடன் இருக்காமல் கோவா சென்று இருக்கிறார். மேலும் அன்று ஷூட்டிங் இருப்பதாக சொல்லிவிட்டு மனைவியோடும் குடும்பத்தாரோடும் இல்லாமல் விலகி இருக்கிறார்.

 

 

இதைத்தொடர்ந்து ஆர்த்தி ஜெயம் ரவிக்கு போன் செய்து பார்க்க போனை எடுத்து இருவரும் பேசிய நிலையில் ஒரு கட்டத்தில் ஜெயம் ரவி ஃபோனை ஸ்விட்ச் ஆப் செய்து விடுகிறார். இதனால் கடுப்பான ஆர்த்தி ஜெயம் ரவி கோவாவில் இருப்பதை உறுதி செய்து கொண்டதோடு அங்கு ஷூட்டிங் ஏதும் நடக்கவில்லை என்பதையும் உறுதி செய்து கொண்டார்.

அது மட்டுமல்லாமல் ஜெயம் ரவி கோவாவில் பயன்படுத்திய ஆடி கார் சட்ட விதிமுறைகளை மீறியதற்காக பைன் போடப்பட்டு இருக்கும் விஷயம் எஸ்எம்எஸ் வழியாக ஆர்த்திக்கு தெரிய வந்தது.

இதை அடுத்து அந்த செல்லானை வைத்து ஜெயம் ரவி எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முயலும் போது அந்த காரை ஓட்டியது ஜெயம் ரவி அல்ல பாடகி கெனிசா பிரான்சிஸ் என தெரிய வந்தது. எனினும் அந்த காரில் பாடகியோடு தனது நண்பர்களும் இருப்பதாக சொல்லி சமாளித்து விட்டார் ஜெயம் ரவி.

 

இதனைத் தொடர்ந்து மீண்டும் ஜெயம் ரவி ஷூட்டிங் என பொய் சொல்லி மீண்டும் கோவாவுக்கு சென்ற விஷயம் அங்கு அவர் அந்த ஆடி காரை வேகமாக ஓட்டியதை அடுத்து அதற்கு அபராதம் விதித்ததற்கான எஸ்எம்எஸ் அதே போனில் ஆர்த்திக்கு வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து ஆர்த்தி சந்தேகப்பட்டு ஜெயம் ரவி சந்திக்க கோவா சென்ற போது வழக்கமாக இருக்கும் ஹோட்டலில் அவர் இல்லை .மேலும் விசாரித்து பார்த்த போது ஜெயம் ரவி கோவாவில் ஒரு சொகுசு பங்களாவை விலைக்கு வாங்கி இருக்கிறார். அங்கு சென்று ஜெயம் ரவியுடன் ஆர்த்தி சண்டை போட்டு இங்கு தான் அந்த பாடகியோடு குடித்தனம் செய்கிறாயா? என்று கேட்டிருக்கிறார்.

ஆதாரத்தை வெளியிட்ட குடும்ப உறுப்பினர்..

 

இதனை அடுத்து பிரச்சனை வலுத்து இருவர் இடையே பேச்சு வார்த்தைகள் முத்தியதை அடுத்து ஜெயம் ரவி ஆர்த்தியிடம் கலந்து ஆலோசிக்காமல் விவாகரத்து அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

இந்நிலையில் அவர்கள் ஆடி காரில் கோவாவில் இருந்தது குறித்த ஆதாரத்தை தற்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இந்த விவாகரத்து விஷயத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியிலும் பேசும் பொருளாக மாறி ஜெயம் ரவி எப்படி செய்வாரா என்ற கேள்விகளை ஏற்படுத்தி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version