“உங்களுக்கு வயசே ஆகல.. ” – இளசுகளை திக்குமுக்காட வைத்த பாபநாசம் பட நடிகை ஆஷா சரத்..!

ஆஷா சரத் : மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படத்தில் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களை மிரட்டியவர் நடிகை ஆஷா சரத். அந்த படத்தின் தமிழ் ரீமேக்காக உருவான பாபநாசம் திரைப்படத்திலும் அதைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனின் தூங்காவனம் மற்றும் tதிரிஷ்யம் 2 ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் தன்னுடைய மகளுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்தார். கடந்த 2012ஆம் ஆண்டு ஃப்ரைடே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் ஆஷா சரத்.

மலையாள படங்கள் மட்டுமில்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். பல சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

தமிழில் முதல் படமே கதாபாத்திரத்தை ஏற்று நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டார். தமிழில் இவர் நடித்த முதல் திரைப்படமான பாபநாசம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

இந்த படத்தில் இவருடைய நடிப்பு நடிகர் கமலஹாசனை மிகவும் பிடித்து போனது. இதனால் தன்னுடைய தூங்காவனம் திரைப்படத்திலும் அவருக்கு மனைவியாக நடிக்க வைத்தார் நடிகர் கமலஹாசன்.

சமீபத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான அன்பறிவு என்ற திரைப்படத்தில் அவருக்கு அம்மாவாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஆஷா சரத்.

இவருக்கு வயது 47 வயது ஆகிறது. ஆனாலும்கூட இளம் நடிகைகளுக்கு சவால் விடும் விதமான கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களுக்கு காட்சியளிக்கிறார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசு ஆகல.. வயசு வெறும் நம்பர் தான்.. செம ஹாட்.. என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version