சமந்தா நயன்தாராவை அடுத்து தொழிலதிபருக்கு கட்டம் கட்டிய பிரபலம்.. இப்போ பெரிய சண்டையாயிடுச்சு!..

சமூக வலைதளங்களில் அதிக பிரபலமானவர்களாக சிலர் இருந்து வருகின்றனர். அந்த வகையில் மருத்துவராக அதிக பிரபலமாக இணையத்தில் வலம் வந்து கொண்டிருப்பவர் ஆபே பிலிப்ஸ். இவரை பொறுத்தவரை அவர் ஒரு மருத்துவர் என்பதால் தொடர்ந்து மருத்துவத்திற்கு எதிரான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வலம் வரும் பொழுது அதற்கு எதிரான தனது கருத்தை முன்வைத்துக் கொண்டே இருப்பார்.

சமீபத்தில் சமந்தா ஒரு வாயுவை அதிகமாக எடுத்துக் கொள்வதால் உடலுக்கு நன்மை பயப்பதாக பதிவு ஒன்றே போட்டு இருந்தார். அப்பொழுது சமந்தாவின் அந்த கருத்து தவறு என்றும் அந்த வாயு உடலுக்கு கெடுதலை தான் ஏற்படுத்தும் என்றும் பதிவிட்டு இருந்தார் ஆபே பிலிப்ஸ்.

தொழிலதிபருக்கு கட்டம்

அதேபோல நடிகை நயன்தாரா சமீபத்தில் செம்பருத்தி டீ உடலுக்கு பல நன்மைகளை பயப்பதாகவும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதாகவும் மேலும் கொலஸ்ட்ராலை குறைப்பதாகவும் கூறியிருந்தார். அதற்கு பதில் அளித்த ஆபே பிலிப்ஸ் நயன்தாரா கூறும் எந்த ஒரு விஷயத்தையும் செம்பருத்தி டீ செய்யாது.

அப்படி அது செய்யும் என்று எந்த ஒரு அறிவியல் ஆதாரங்களும் கிடையாது மேலும் செம்பருத்தி டீ யை அதிகமாக குடிப்பது ஆண்மை குறைவை ஏற்படுத்தும் என்று கூறியிருந்தார். இப்படி பிரபலங்கள் தொடர்ந்து கருத்துக்களை வெளியிடும் பொழுது அதில் இருக்கும் தவறுகள் குறித்து இவர் பேசி வந்தார்.

சமந்தா நயன்தாராவை அடுத்து

இந்த நிலையில் தற்சமயம் சோகோ நிறுவனத்தின் நிறுவனரான ஸ்ரீதர் வேம்புவின் பதிவு குறித்து ஆபே பிலிப்ஸ் சர்ச்சையான பதிலை கொடுத்திருக்கிறார். சமீபத்தில் ஸ்ரீதர் வேம்பு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் காலணி அணியாமல் நடப்பதால் இருக்கும் நன்மைகள் குறித்து பேசி இருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது காலணி இல்லாமல் நான் தினமும் எனது தோட்டத்தில் நடந்து வருகிறேன். பழைய காலங்களில் கிராமப்புற மக்கள் எல்லாம் இப்படித்தான் நடந்து சென்றனர் இது உடலுக்கு மிகவும் நன்மைகளை பார்க்கிறது என்று எழுதியிருந்தார். இதற்கு பதில் அளித்த ஆபே பிலிப்ஸ் இந்த மாதிரி வெறும் காலில் நடப்பது உடலுக்கு எந்த நன்மையும் பயக்காது.

இப்போ பெரிய சண்டையாயிடுச்சு

மேலும் அது காலில் தொற்றைதான் ஏற்படுத்தும் என்று கூறியிருந்தார். மேலும் இந்த மாதிரியான பூமர் அங்கிள் கூறுவதை எல்லாம் நம்பாதீர்கள் என்று அவர் ஸ்ரீதர் வேம்புவை குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் இதற்கு பதில் அளித்த ஸ்ரீதர் வேம்பு என்னிடம் நிறைய மருத்துவர்கள் பழக்கத்தில் இருக்கிறார்கள்.

 

ஆனால் யாரும் இப்படி திமிர் பிடித்து பேசியது கிடையாது யார் என்றே தெரியாத ஒரு நபரை பூமர் அங்கிள் என்றெல்லாம் அவர்கள் கூறியது கிடையாது என்று கூறியிருந்தார். அடுத்து இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஆபே பிலிப்ஸ் கூறும் பொழுது நீங்கள் உங்களது கருத்துக்களை கைவிட வேண்டும் மேலும் இது போன்ற தோட்டங்களில் நடக்கும் பொழுது ஒரு சின்ன காலனியாவது போட்டுக் கொண்டு நடப்பது நல்லது என்று அறிவுரை வழங்கி இருக்கிறார். இந்த நிலையில் இணையத்தில் இது பெரும் பேச்சாக இருந்து வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version